வாரம் 1 நாள் ஆலிவ் எண்ணெய் + எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உங்க உடலில் என்ன மாற்றம் நடக்கும்?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலங்களில் துரித உணவுகளின் மீது ஈடுபாடு இருக்கும் அதே அளவு இயற்கை உணவுகளையும், இயற்கை மருந்துகளின் மீதும் அக்கறை மற்றும் ஈடுபாடு வந்துள்ளது. ஆகவே அவற்றை தேடிப் போக் ஆரம்பித்துவிட்டனர்.

இயற்கை உணவுகள் உங்கள் நோயை முற்றிலும் குணமாக்குமோ தெரியாது. ஆனால் உங்களை நோயிலிருந்து காப்பாற்றும். உடல் நலத்தின் மீது அக்கறை இருப்பவர்கள் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு முதலில் இயற்கை மருந்துகளை தேர்வு செய்து அதனால் குணமாகவில்லையென்றால் பிறகு அலோபதியை தேடுவது நலம்.

தலைவலி, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு உடனே மாத்திரை மருந்துகளை தேடாதீர்கள். பல இயற்கை நிவாரணங்களில் ஆலிவ் எண்ணெயையும் முக்கியத்துவ பெற்றுள்ளது.

ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உங்கள் உடலில் பல அருமையான மாற்றங்கள் நடை பெறும். அவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

1/ 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு.

தயாரிக்கும் முறை :

அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்து அதில் ஃப்ரெஷாக பிழிந்த எலுமிச்சை சாறு அரை ஸ்பூன் கலக்குங்கள். அரை ஸ்பூன் அளவு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு போதும். அதற்கு மேல் எடுக்க வேண்டாம்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த சாற்றினை உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் சாப்பிட வேண்டும். வாரம் 3 நாட்கள் அல்லது வாரம் ஒரு தடவை எடுத்துக் கொண்டால் போதும். இப்படி குடிப்பதால் பலவித நன்மைகளை நமக்கு தருகின்றது. அவற்றப் பற்றி பார்க்கலாம்.

மலச்சிக்கலை குணப்படுத்தும் :

மலச்சிக்கலை குணப்படுத்தும் :

நீங்கள் மலச்சிக்கலில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தா, இதனை குடிக்கும்போது, இதிலுள்ள ஆலிவ் எண்ணெய் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. மலமிலக்கியாகவும் செயல்படுகிறது. எலுமிச்சை சாறு நச்சுக்களை அழித்து சுத்தம் செய்கிறது. இதனால் மலச்சிக்கலிலிருந்து வேகமாக குணமடைவீர்கள்.

 ரத்த ஓட்டம் :

ரத்த ஓட்டம் :

எல்லாருக்குமே நோய்கள் ரத்த ஓட்டம் த்டைபடுவதால் வருகிறது. தெரியுமா? ரத்த ஓட்டத்தை வேகப்படுத்துவதால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக பாயும்போது, உடலில் ஏற்படும் சிறு சிறு பாதிப்புகளை உடனே சரிப்படுத்திக் கொள்ளும்.

இதனால் பின்னால் வரும் நோய்கள் தடுக்கப்படுகிறது. இந்த சாறை குடிக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நோய்கள் தடுக்கப்படும். குறிப்பாக வெரிகோஸ் நரம்பை தடுக்கிறது.

கொழுப்பு கல்லீரல் :

கொழுப்பு கல்லீரல் :

கல்லீரலில் தங்கும் நச்சுக்கள் மற்றும் கொழுப்பு சேர்ந்து ஃபேட்டி லிவர் எனபப்படும் நோயை உண்டாக்குகிறது. இது மிகவும் ஆபத்தான நோய். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் கல்லீரல் செயலிழப்பிற்கே ஆளாக நேரிடும். இந்த ஆலிவ் மற்றும் எலுமிச்சை கலவை குடிப்பதால் கொழுப்பு கல்லீரல் நோய் தடுக்கப்படுகிறது. கல்லீரலை மொத்தமாக சுத்தப்படுத்தும் க்ளென்சராக விளங்குகிறது.

வாய்வு மற்றும் அசிடிட்டி :

வாய்வு மற்றும் அசிடிட்டி :

உடலில் அதிகப்படியாக சுரக்கும் அமிலங்களின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. வயிற்றினுள் உண்டாகும் அழுத்தத்தை குணபப்டுத்துவதால் வயிற்றுப் பிடிப்பு, வாய்வு, அசிடிட்டி , நெஞ்செரிச்சல் போன்றவை சரியாகிவிடும்.

நச்சுக்களை அகற்றும்

நச்சுக்களை அகற்றும்

தினமும் உங்கள் உடலில் உருவாகும் நச்சுக்கள் சேர்ந்து கிலோ கணக்கில் உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும். நச்சுக்களை அகற்றினாலே உங்கள் எடையில் சில கிலோவை குறைக்கலாம் தெரியுமா. இந்த கலவை நச்சுக்களை முற்றிலும் அகற்றும் தன்மை கொண்டது.

கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும் :

கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும் :

ஆலிவ் எண்ணெயில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் விகிதத்தை சீர்படுத்துகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து செரிமானத்திற்குட்படுத்துகிறது.

மூட்டு வலிக்கு :

மூட்டு வலிக்கு :

மூட்டு இணைப்புகளில் இருக்கும் சவ்வுகளில் நெகிழ்வுத்தன்மை குறைந்தால் மூட்டு உராய்வு ஏற்பட்டு தேய்மானம் உண்டாகும். ஆலிவ் எண்ணெய் இதனை தடுக்கிறது. மூட்டுஇணைப்புகளில் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்துகிறது.

வயிற்றுக் கொழுப்பு :

வயிற்றுக் கொழுப்பு :

அடிவயிற்றில்தான் அதிகப்படியான கொழுப்பு சேகரிக்கப்படுகிறது. இதற்கு காரணம் அங்கு போதிய பயிற்சிகள் இல்லாததால் கொழுப்புகள் கரையமல் தங்கி தொப்பையை உண்டாகும். இந்த வயிற்றுக் கொழுப்பை கரைக்க இந்த ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு உதவி செய்கின்றது.

 கல்லீரல் செயல்பாடுகள் :

கல்லீரல் செயல்பாடுகள் :

கல்லீரலின் செயலை வகுவாக்குகிறது. பித்தப்பையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. மேலும் உடலில் மிக முக்கியத் தேவையான வளர்சிதை மாற்றத்தை குறிப்பாக கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

இந்த இயற்கை குறிப்பை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, உயர் ரத்த அழுத்தம் சம நிலைக்கு வருகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் மினரல் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இதய நோய் மற்றும் ஆர்த்ரைடிஸ் :

இதய நோய் மற்றும் ஆர்த்ரைடிஸ் :

இது இதயத் துடிப்பை சீர் செய்கிறது. இதய நோய்கள் மற்றும் ஆர்த்ரைடிஸ் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன. அதோடு இந்த கலவையில் இருக்கும் மோனோ அன்சாச்சுரேட்டர் கொழுப்பு உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு அத்யாவசமானது. ஆகவே சிறு நீரகம், கல்லீரல், ஜீரண மண்டலம் போன்றவை நன்றாக செயல்படுகிறது.

நொதிகளை சுரக்க உதவுகிறது :

நொதிகளை சுரக்க உதவுகிறது :

செரிமானமின்மை மற்றும் பலவேறு அஜீரணக் கோளாறுகளுக்கு என்சைம் எனப்படும் நொதிகள் சீராக சுரக்காததால்தான் காரணம். இந்த கலவை நொதிகளை சீராக சுரக்க உதவுகிறது.

என்றும் இளமை :

என்றும் இளமை :

ஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் சி, போன்றவை சுருக்கங்கள் இல்லாமல் இருப்பதற்கு அவசியம். அவ்வாறு என்றும் இளமையாக இருப்பதை இந்த மேஜிக் சாறு வழங்குகிறது. இதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் விட்டமின் சி உங்களை வசீகரமாக வைத்துக் கொள்ளும் :

நகம், கூந்தல் மற்றும் சருமம் :

நகம், கூந்தல் மற்றும் சருமம் :

உங்களை அழகாக வைத்துக் கொள்வதில் விருப்பமென்றால் இந்த சாறு அருமையான பலனை உங்களுக்கு தரும். இந்த கலவையின் ஸ்பெஷக் என்னவென்றால் இதனை குடிக்கவும் செய்யலாம் .சருமம் மற்றும் கூந்தலுக்கு தடவவும் செய்யலாம். இது ஆரோக்கியமான நகம் சருமம், மற்றும் கூந்தலை வளரச் செய்கின்றது.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

இன்றைய காலக்கட்டத்தில் மன அழுத்தத்தில் இல்லாதவர்கள் விரல் விட்டு என்ணலாம். ஆலிவ் எண்ணெய் நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தை குறைக்கும். மன அழுத்தத்தை தடுக்கிறது. மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

சர்க்கரை வியாதி :

சர்க்கரை வியாதி :

சர்க்கரை வியாதியை தடுக்கும் முக்கிய கொழுப்பான மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் ஆலிவ் எண்ணெயில் இருப்பதால் சர்க்கரை வியாதியை இது முற்றிலும் தடுப்பதாக ஒரு ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது.

ஏன் அவசியம் :

ஏன் அவசியம் :

இப்படி குடிப்பதால் நன்மை உண்டாகிறது. ஆனால் இப்படி குடிப்பதால் நடக்கும் மிக முக்கிய நன்மை என்னவென்றால் கல்லீரல் நோய்கள் தாக்காது. ஏனென்றால் கல்லீரல்தான் நமது உடலிலேயே அதிக வேலை செய்யும் உறுப்பு. அதனை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். கல்லீரல் மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த கலவை உதவும்.

கல்லீரலை சுத்தப்படுத்த :

கல்லீரலை சுத்தப்படுத்த :

நீங்கள் மாதம் ஒருமுறை கல்லீரல் சுத்தப்படுத்த இதனை சாப்பிடலாம். அரை ஸ்பூன் பதிலாக கால் கப் ஆலிவ் எண்ணெய் மற்றும் கால் கப் எலுமிச்சை சாறு கலந்து அதனை குடிக்க வேண்டும். அந்த நாள் மட்டும் வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டும் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் உங்கள் ஆயுள் நீளும்.

எச்சரிக்கை :

எச்சரிக்கை :

உங்களுக்கு பித்தப்பை கற்கள் இருந்தால் இதனை குடிக்க வேண்டாம். இது வயிற்று வலியை உண்டாக்கிவிடும். ஆகவே பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் இதனைமுயற்சிக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drink this mixture once in a week to get its actual benefits for your healthy liver

Drink this mixture once in a week to get its actual benefits for your healthy liver
Story first published: Thursday, December 7, 2017, 9:00 [IST]