வெறும் தரையில் படுப்பதால் ஏற்படும் பலன்கள் !!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

பலருக்கு பல கேள்விகள் மனதில் இருக்கும்.அந்த கேள்விகளுக்கு விடை தெரியாமலே வாழ்ந்து கொண்டிருப்பர். இப்படி விடை தெரியாத பல கேள்விகளில் ஒன்று, எந்த விதமான படுக்கை நல்ல தூக்கதிற்கு சிறந்தது? எவ்வளவோ விதங்களில் இன்று மெத்தைகள் செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றை வாங்கி பயன்படுத்தினாலும், சில நாட்களில் பலவித தூக்க பிரச்சனைகள் வருகின்றன. நீண்ட நேரம் படுக்கும்போது முதுகு தண்டு வலி, தலையனை சரியாக இல்லாமல், கழுத்து வலி போன்றவை ஏற்படுகின்றன.

Benefits of sleeping on floor

இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன என்று ஆராய்ந்து பார்க்கும்போது மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான தீர்வு ஒன்று நினைவுக்கு வந்தது. ஆராய்ந்து பார்த்ததில் இது ஒரு மிக சிறந்த தீர்வாகவும் இருந்தது. அது என்ன? தரையில் படுத்து உறங்குவது.

ஆம்! தரையில் படுத்து உறங்குவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றது. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தரையில் படுத்து உறங்குவதற்கு எந்த ஒரு பொருளும் தேவை படுவதில்லை. இது மிகவும் சுலபம் . எந்த ஒரு பொருளையும் உபயோகித்து உறங்குவதில்லை. அதனால் இதற்கு எந்த ஒரு பணமும் செலவழிக்க போவதில்லை. எளிய முறையில் நாம் தூங்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு நல்ல தோற்றத்தை பராமரித்தல்:

ஒரு நல்ல தோற்றத்தை பராமரித்தல்:

உங்களுக்கு நல்ல தோற்றம் இருந்தால் , உங்களால் முதுகு பகுதியை தரையில் வைத்து படுக்க முடிந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. இதுவே உறங்குவதற்கான நல்ல நிலை . இந்த நிலையில் உறங்கும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் எந்த ஒரு தவறான சீர்கேடும் ஏற்படாது. செயற்கையான கோணங்களால் தசையில் ஏற்படும் அழுத்தமும், எரிச்சலும் தவிர்க்கப்படும்.

எலும்பு சீரமைப்பு மேம்படுத்துதல்:

எலும்பு சீரமைப்பு மேம்படுத்துதல்:

மேலே கூறிய நிலையில் உறங்குவது உடலில் ஏற்கனவே தவறாக சீரமைக்கப்பட்ட எலும்பு மற்றும் மூட்டுகளை ரிப்பேர் செய்ய உதவுகிறது. இது மெதுவாகத்தான் நடைபெறும். ஆகவே பொறுமையாக இந்த முறையை தொடர வேண்டும். நிச்சயமாக உங்கள் உடல் சீரமைக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்டது.

உங்கள் முதுகு தண்டை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கிறது:

உங்கள் முதுகு தண்டை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கிறது:

மூளையுடன் நேராக இணைக்கப்பட்ட மத்திய நரம்பு மண்டலத்தை தாங்குவது உங்கள் முதுகு தண்டாகும். உடலில் இது ஒரு முக்கியமான பகுதியாகும். ஒரு நல்ல தோற்றம் உங்கள் முதுகு தண்டுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. நெரித்த நரம்புகள் மற்றும் மோசமான முதுகெலும்புகள் ஆகியவற்றின் சாத்தியக்கூறை உங்கள் நல்ல தோற்றம் குறைக்கின்றன.

 கீழ் முதுகு வலியை குறைக்கும்:

கீழ் முதுகு வலியை குறைக்கும்:

பொதுவாக பலரும் முதுகின் கீழ் பகுதி வலியால் பாதிக்கப்படுவர். மேலே கூறியபடி முதுகு பகுதியை தரையில் வைத்து படுக்கும்போது, இந்த வலிக்கு ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. இந்த கீழ் முதுகில் வலி வருவதற்கு காரணம் நரம்புகள் நெறிக்கப்படுவதுதான். சில நேரம் எலும்புகள் தடம் மாறுவதால் இவை ஏற்படலாம்.

 இடுப்பு மற்று ம் தோள் பகுதியை சீராக்குகிறது:

இடுப்பு மற்று ம் தோள் பகுதியை சீராக்குகிறது:

நமக்கு நிறைய வலிகள் ஏற்படுவது இடுப்பிலும் தோளிலும் சீரற்ற தன்மை ஏற்படுவதால் தான். தோள்கள் ,மேல் முதுகு, கீழ் முதுகு, கைகள், கழுத்து எலும்பு, கழுத்தின் அடி பாகம், தலை போன்ற இடங்களில் வலி ஏற்படலாம்.

முதுகை தரையில் வைத்து படுப்பதால் உங்கள் இடுப்புகளும், தோள்களும் வலி இல்லாமல் இருக்கும். இதனால் மற்ற பகுதிகளில் ஏற்படும் வலிகளும் நீங்கும். தோள்கள் வாளிப்பாகவும் மாறும்.

கவலை இன்றி உறங்கலாம்:

கவலை இன்றி உறங்கலாம்:

போர்வை, பெட் ஷீட் , தலையணை என்று எதை பற்றியும் கவலை பட வேண்டாம். மெத்தை மற்றும் கட்டில் நமது எடையை தாங்குமா அல்லது உடைந்து விழுமா என்ற சந்தேகம் வேண்டாம். உங்கள் உடலை ஆசுவாசமாக தரையில் கிடத்தி எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் உறங்கலாம்.

மூச்சு திணறலுக்கான வாய்ப்புகள் குறைவு:

மூச்சு திணறலுக்கான வாய்ப்புகள் குறைவு:

தரையில் படுத்து உறங்குவதால் உடலில் எந்த ஒரு பாகத்திலும் தவறான சீரமைப்பு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. தலையணை இன்றி உறங்குவதால் மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

சோர்வை குறைக்கிறது:

சோர்வை குறைக்கிறது:

நல்ல தோற்றத்தில் மற்றும் நல்ல நிலையில் படுக்கும்போது, உடல், மூளைக்கு தான் மிகவும் சௌகரியமாக உணர்வதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிக்னல் அனுப்புகிறது. இதனால் நேர்மறை எண்ணங்கள் தூண்டப்பட்டு மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.

தரையில் படுப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டோம். வீட்டில் உள்ள கட்டில் மெத்தைகளை கழற்றி வைத்து விட்டு இனி தரையில் படுத்து உறங்குவோம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits of sleeping on floor

Benefits of sleeping on floor
Story first published: Thursday, August 31, 2017, 12:12 [IST]
Subscribe Newsletter