Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
புரோஸ்டேட் புற்று நோயின் பக்க விளைவுகளை குறைப்பது எது தெரியுமா?
யோகாவின் அற்புதங்கள் பற்றி இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வெளி நாட்டவர்கள் இதை செய்யவும் தொடங்கியாயிற்று.
உடலில் ஏற்படும் நோய்களை விரட்டியடிக்கும் சக்தி யோகாவிற்கு உண்டு என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் புற்று நோயின் பக்கவிளைவுகளை யோகா குறைக்கும் என்பதை அறிவீர்களா?

புரோஸ்டேட் புற்று நோய் ஆண்களுக்கான வரும் நோய். இது கல்லீரலுக்கு அடுத்ததாக ஆண்களை அதிகம் தாக்கும் புற்று நோயாகும். இந்த புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் சக்தி வாய்ந்த சிகிச்சைகளால், நிறைய பக்க விளைவுகள் உண்டாகும்.
சிறு நீர் கழிக்க கடினமாக இருக்கும், மன அழுத்தம், தாங்க முடியாத உடல் வலி, விறைப்புத் தன்மை என நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.
அவ்வாறு பாதிக்கப்பட்ட புற்று நோயாளிகள் யோகா செய்வதினால், பல்வேறு உபாதைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது என்று ஆய்வு கூறுகின்றது.
2013- 2014 வரை நடத்தப்பட்ட ஆய்வில், ப்ரோஸ்டேட் புற்று நோயாளிகளுக்கு வாரம் இருமுறை 75 நிமிடங்களுக்கு யோகா கற்றுத் தரப்பட்டது. இதில் உடல் மற்றும் மனம் சம்பந்தமான முன்னேற்றம் எல்லா நோயாளிகளிடமும் பார்க்க முடிந்தது என்று அமெரிக்காவிலுள்ள அப்ராம்ஸன் புற்று நோய் மையத்தின் யோகா பயிற்சியாளர் டாலி மஜார் கூறியுள்ளார்.
ஒவ்வொரு யோகா வகுப்பு முடிந்ததும் அடுத்தவகுப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக நோயாளிகள் கூறினர். முக்கிய பிரச்சனையான சிறு நீர் தடையில்லாமல் கழிக்க முடிந்தது. விறைப்புத்தன்மையும் குறைந்தது.
உடல் பலம்பெற்று, புத்துணர்வு பெற்றதாக கூறி வந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து தசைகளும் வலுப்பெற்றது என்று இந்திய வம்சாவளியான நேஹா என்ற மருத்துவர் கூறுகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


