Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
புகைப்பிடிப்பதிலிருந்து விடுபட வேண்டுமா?திரிகோணாசனா செய்யுங்கள் -தினம் ஒரு யோகா
புகைப்பிடிப்பது எவ்வளவு கேடு என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் இழுக்கும் ஒவ்வொரு புகையிலும் சுமார் 4000 ரசாயனங்கள் கலந்துள்ளன.
சர்வதேச சுகாதார மையமான WHO எடுத்த கணக்கெடுப்பின்படி, வருடத்திற்கு 6 மில்லியன் மக்கள் புகைப்பிடிப்பதால் இறக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.

இதில் சோகம் என்னவென்றால் நிறைய பேருக்கு புகைப்பிடிப்பதை விடவேண்டும் என்ற ஆசை. ஆனால் அதற்கு அடிமையாகிவிட்ட நரம்புகள் அவர்களை தூண்டுகின்றன. கவலைப் படாதீர்கள்..
புகைப்பிடிப்பதை ஸ்டைலாகவும், மகிழ்ச்சியாகவும் எண்ணுபவர்களை நிச்சயம் திருத்த முடியாது. ஆனால் உண்மையாகவே உங்களுக்கு புகைப்பிடிப்பதை விடவேண்டும் என்ற எண்ணம் வந்தால் நிச்சயம் இந்த யோகா உங்களை அந்த தீய பழக்கத்திலிருந்து விடுவிக்கும். முயன்று பாருங்கள்.
திரிகோணாசனா :
திரிகோசணா முக்கோண நிலையில் நின்று செய்வதால் இந்த பெயர் பெற்றுள்ளது. இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் கால்களை விரித்து நில்லுங்கள். ஆழ்ந்து மூச்சை விட வேண்டும். கைகளையும் மெல்ல விரித்து நில்லுங்கள். நன்றாக சம நிலைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்போது வலது பாதத்தை வெளி நோக்கி திருப்புங்கள். இடது பாதம் உள் நோக்கி, வலது காலை பார்த்தவாறு திருப்ப வேண்டும்.
ஸ்டெடியான நில்லுங்கள் மூச்சை ஆழ்ந்து இழுங்கள். மெதுவாய் மூச்சை விட்டவாறு உடலை வலது பக்கம் குனிந்து வலது கையால் பாதத்தை தொட முயற்சிக்கவும். பாதத்தை தொட முடியவில்லையென்றால் கணுக்காலையாவது தொட முயற்சியுங்கள்.இப்போது, இடது கையை மேலே தூக்குங்கள். முகம் இடது கையை பார்க்குமாறு திருப்புங்கள். இந்த நிலையில் 1 நிமிடம் நிற்க வேண்டும். பிறகு காலை மாற்றி இப்போது இடது பக்கம் செய்ய வேண்டும்.
பலன்கள் :
இடுப்பு வலி நீங்கும். மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். உடலின் வளர்சிதை மாற்றம் நன்றாக நடக்கும். பதட்டம், நரம்புத் தளர்ச்சி ஆகியவை குணமாகும். புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்காது.
குறிப்பு :
கழுத்து மற்றும் முதுகில் அடிபட்டிருந்தால், ஒற்றை தலைவலி ,வயிற்றுப் போக்கு ஆகியவற்றில் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




