மஞ்சள் எண்ணெயை உபயோகிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Posted By: Lekhaka
Subscribe to Boldsky

நறுமண மருத்துவம் அல்லது அரோமாதெரபி மற்றும் பிற சிகிச்சைகளில் அதிகம் பயன்படும் இது கடந்த சில வருடங்களில் மிகுந்த வரவேற்பையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

குறிப்பாக நவீன மருத்துவங்களில் ஏற்படும் பயங்கர பக்கவிளைவுகளை பார்த்த பிறகு மேலும் மேலும் மக்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறது.

top 8 health benefits of turmeric essential oil

உங்களுக்கு இதனை எளிதில் விளக்கி கூற போல்ட்ஸ்கை இந்த மஞ்சள் எண்ணெய் பற்றி கூறியுள்ளது. இது ஒரு தீர்வாக இல்லாவிட்டாலும் ஒரு உடல் நாளாக கோளாறை தடுக்கவோ அல்லது அதன் அறிகுறிகளில் இருந்து உங்களை காப்பாற்றவோ முடியும்.

கவனிக்க : நீங்கள் ஏற்கனவே ஒரு உடல் நாளாக கோளாறால் அவதிப்பட்டு வந்தால் எந்த ஒரு புதிய ஆகாரத்தை எடுத்துக் கொள்ளும் முன் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மூட்டு வழிகளில் இருந்து ஆறுதல் தருகிறது :

1. மூட்டு வழிகளில் இருந்து ஆறுதல் தருகிறது :

மஞ்சள் எண்ணெய் அழற்சியை தடுக்கும் பல்வேறு உட்பொருட்களின் களஞ்சியமாக உள்ளது. இதனால் மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

குறிப்பாக ஆர்திரிடிஸ் எனப்படும் மூட்டு அழற்சியினால் அவதியுறுபவர்கள் இதன் மூலம் நல்ல பலனைப் பெறமுடியும்.

 2. செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது :

2. செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது :

மஞ்சள் எண்ணையின் மற்றுமொரு குணம் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து அது அளிக்கும் தீர்வு.

வயிறு உப்புசம் அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு உங்கள் உணவில் மஞ்சள் எண்ணையை சேர்த்துக் கொண்டால் அது செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.

3. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் :

3. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் :

சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் கூட இந்த மஞ்சள் எண்ணையினால் பயனடைய முடியும். சில ஆய்வுகள் இந்த எண்ணையில் காணப்படும் கர்குமின் என்ற உட்பொருள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

4. டிமென்ஷியா அல்லது மூளை செயல்பாட்டுக் குறைபாடுகளை தடுக்கும் :

4. டிமென்ஷியா அல்லது மூளை செயல்பாட்டுக் குறைபாடுகளை தடுக்கும் :

மஞ்சள் எண்ணையில் காணப்படும் முக்கிய உட்பொருட்கள் மூளை செயல்பாட்டை பாதிக்கும் பல்வேறு விதமான சூழிநிலைகளைத் தடுக்கவல்லது.

 5. சரும அலர்ஜியை தடுக்க :

5. சரும அலர்ஜியை தடுக்க :

காலம்காலமாக மஞ்சள் உலகம் முழுவதும் உள்ள பெண்களால் சரும அழகு மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்போது இதன் எண்ணையை உங்கள் ஆகாரத்தில் சேர்த்து அதன் பலன்களை உங்கள் அழகிய சருமம் மற்றும் முடியில் பார்க்க முடியும்.

6. படபடப்பிலிருந்து ஆறுதல் :

6. படபடப்பிலிருந்து ஆறுதல் :

படபடப்பிலிருந்து ஆறுதல் பெற பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் இது சாந்தப்படுத்துவதற்குப் பெயர் பெற்றது. அதனால் தான் அரோமா தெரபியில் நரம்புகளை ஆறுதல் படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

7. புற்றுநோய்க்கு எதிரி :

7. புற்றுநோய்க்கு எதிரி :

சில ஆய்வுகள் மஞ்சள் எண்ணெய் புற்றுநோய் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதால் இந்த கொடிய நோயை தடுப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கின்றன.

உங்கள் ஆகாரத்தில் இதனை சேர்த்துக் கொண்டு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.

 8. கல்லீரல் ஆரோக்கியமாகும் :

8. கல்லீரல் ஆரோக்கியமாகும் :

சிறந்த கல்லீரலை பெற இந்த மஞ்சள் எண்ணையை உங்கள் ஆகாரத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இது உங்கள் ஈரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை போக்கி தொற்றுக்களை தவிர்க்கும். இதன் கிருமி எதிர்ப்பு பண்புகள் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்க்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

top 8 health benefits of turmeric essential oil

Health benefits of Turmeric essential oil
Story first published: Thursday, November 17, 2016, 18:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter