குழந்தையின்மையை- சர்க்கரை வியாதியை தடுக்கும் தானியம் எது தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் வருவது இயல்பானது. ஆனால் ஹார்மோன் குறைபாடு பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் குறைந்தால், PCOS எனப்படும் குறைபாடு உண்டாகும். அதாவது ஓவரியில் சிறு சிறு கட்டிகள் தோன்றும். இதனால் கருப்பை வீக்கமடைந்து குழந்தையின்மைக்கு வழிவகுக்கும். இந்த PCOS னால் இதய நோய்கள், சர்க்கரை வியாதி என பலதரப்பட்ட நோய்கள் உண்டாகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Soya may cut Risk in hormonal disorder for women

PCOSவினால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் ?

இந்த ஓவரி வீக்கத்தினால், பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பது குறைந்து, ஆண்களின் ஹார்மோன்களான டெஸ்டோஸ்டிரான், மற்றும் மற்ற ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் தூண்டப்படும். இதனால் முறையற்ற மாதவிலக்கு, உடல் பருமன், குழந்தையின்மை, முகத்தில் முடி வளர்ச்சி ஆகியவை உண்டாகும்.

Soya may cut Risk in hormonal disorder for women

இந்த குறைப்பாட்டினை தடுக்கும் சக்திவாய்ந்த தானியம் எது தெரியுமா? சோயா. நமது உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பது போல, இயற்கையாகவே இந்த தாவரத்திலும் ஈஸ்டரோஜன் உள்ளது.

சோயா தாவரத்தில் ஐஸோஃப்ளேவோன் என்ற மூலக்கூறாக காணப்படுகிறது. இது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பை தூண்டுகிறது என ஈரானிலுள்ள கஷன் பல்கலைக் கழக தலைமை ஆராய்ச்சியாளர் ஜடோல்லா கூறுகிறார்.

Soya may cut Risk in hormonal disorder for women

டயாபடிடை குறைக்கும் சோயா பீன்ஸ் ;

சோயா பீன்ஸ் ரத்தத்தில் குளுகோஸின் அளவை குறைக்கிறது. இதனால் டைப்- 2 டயாபடிஸை வர விடாமல், இன்சுலின் செய்ல்பாடுகளை அதிகரிக்கச் செய்கின்றது. அதோடு, பெண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் , LDL- கெட்ட கொலஸ்ட்ரால், கொழுப்பு ஆகியவற்றையும் குறைக்கும் ஆற்றல் படைத்தது.

Soya may cut Risk in hormonal disorder for women

சோயாவை PCOS பிரச்சனை கொண்ட பெண்களுக்கு கொடுத்து ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள் கஷன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள். சுமார் 18-40 வயதுள்ள பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் பாதிபேருக்கு தினமும் சோயா 50கி உணவில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் இறுதியில் அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்திருப்பதாக தெரிய வந்தது.

இந்த ஆய்வைப் பற்றிய தகவல்கள் ஜர்னல் ஆஃப் கிளினிகல் எண்டோகிரைனாலஜி அன்ட் மெட்டபாலிசம் என்ற இதழ் வெளியிட்டுள்ளது.

English summary

Soya may cut Risk in hormonal disorder for women

Soya may cut Risk in hormonal disorder for women
Story first published: Monday, August 8, 2016, 14:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter