Latest Updates
-
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்
முகவாதம் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் உங்களுக்கு தெரியுமா?
முகம் ஒருபக்கமாய் கோணி வாய் இழுத்துக் கொண்டு போவதை முகவாதம் அல்லது பால்சி என்று கூறுவார்கள். அதனைப் பற்றியும் அதனை எப்படி சரி செய்யலாம் என்றும் குறிப்பிடும் இந்த கட்டுரையை படிக்கக் தொடங்குங்கள்.
முகவாதம், ஸ்ட்ரோக் சம்பந்தபட்ட கோளாறு கிடையாது. இது முகத்தின் தசைகளில் திடீரென ஏற்படும் பக்கவாதம் எனக் குறிப்பிடலாம்.ஏன் இந்த வாதம் வருகிறது என சரியான மருத்துவ மற்றும் அறிவியல் விளக்கங்கள் இல்லை.

மூளையை தாக்கும் வைரஸ் தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதற்காக பயப்பட வேண்டியது இல்லை. இது ஒரு சில வாரங்களில் அதுவாகவே சரியாகிவிடும்.
நிச்சயம் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். அதே சமயம் நீங்கள் வீட்டிலிருந்தபடியே தீர்வுகளை காண முயற்சிக்கலாம். இதனால் சற்றும் பக்கவிளைவுகள் இல்லை.
ஆலிவ் எண்ணெய் மசாஜ் :
ஆலிவ் எண்ணெய் லேசாக சூடு படுத்தி, உதட்டிலிருந்து மேல் நோக்கி, காது வரை மெதுவாக மசாஜ் செய்யுங்கள். கன்னங்களின் ஒவ்வொரு இடத்திலும் வட்ட வடிவமாக மசாஜ் செய்து காதுவரைக்கும் கொண்டு செல்லுங்கள்.
மீண்டும் கழுத்தில் தொடங்கி நெற்றி வரை இதமான சூட்டில் நரம்புகளுக்கு அழுத்தம் தரும் வகையில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, நரம்புகளுக்கு நெகிழ்வுத்தன்மை தருகிறது. இறுக்கமடைந்த நரம்புகள் தளர்வாகி, விரைவில் இயல்பு நிலைக்கு வரலாம்.
மஞ்சள் :
மஞ்சள் கிருமிகளை எதிர்த்து போராடும். வீக்கங்கலை குறைக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு தரும். முகத்தில் மஞ்சளை பத்தாகவும் போட வேண்டும். அதே சமயம் உணவில் சேர்த்துக் கொள்ள வெண்டும். பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது பலனைத் தரும்.
முகத்திற்கு பயிற்சி :
எண்ணெய் மசாஜ் போல முகத்திற்கு பயிற்சி மிக முக்கியம். இவை இறுக்கமாக இருக்கும் நரம்புகளுக்கு தளர்வினை மெல்ல மெல்ல தரும். பிஸியோதெரபி உகந்ததாக இருக்கும். தலையை மேலும் கீழும் ஆட்டுவது, கண்களை சுருக்கி விரிப்பது என முதலில் மேலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பின்னர் மெல்ல பாதிக்கப்பட்ட பகுதிக்கு பயிற்சி தர வேண்டும்.
சூடான ஒத்தடம் :
நரம்புகளின் சேதம் மேலும் தவிர்க்க, சூடான ஒத்தடம் மிகவும் உதவியாக இருக்கும். வெதுவெதுப்பாய் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒத்தடம் தரும்போது, நரம்புகளுக்கு புத்துணர்வாய் அமையும். தினமும் 3 முறை ஒத்தடம் தந்தால், சீக்கிரம் குணமாகிவிடும்.
விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணெய் நரம்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. வெதுவெதுப்பான விளக்கெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால், நரம்புகளுக்கு புத்துணர்வு அளிக்கும். நரம்புகள் பலம் பெறும். தசைகளில் இருக்கும் வீக்கம் குறைந்து, வலி குறையும்.
பால்சி எனப்படும் இந்த முகத்தசை வாதத்தினால், சிலர் நாவின் சுவைத் தன்மையை இழந்துவிடுவார்கள். காதுகளில் வலி மற்றும் இரைச்சல் ஏற்படும்.
இதற்கு மருத்துவர் கொடுத்த மருந்தினை மட்டும் சாப்பிட்டால் போதும் என்று நினைக்காமல் கொஞ்சம் அதிகப்படியான கவனம் வீட்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். தகுந்த முறையில் மசாஜ், பிஸியோதெரபி என வீட்டில் கவனிக்கும்போது விரைவில் இயல்பு நிலைக்கு வரலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




