நீங்கள் குடிக்கு அடிமையாகிவிட்டீர்கள் என எப்படி தெரிந்து கொள்வது ? இதப் படிங்க!!

Posted By: Lekhaka
Subscribe to Boldsky

எப்போதாவது ஒருமுறை மது குடிப்பது என்பது நம்மில் பலர் செய்யக்கூடியது. ஆனால் அது அப்படித்தானா?

ஒரு சமீபத்திய ஆய்வில் ஒரு கோடி இந்தியர்களுக்கும் அதிகமானோர் குடிப்பழக்கத்தினால் அதாவது கட்டுப்பாடற்ற குடிப் பிரச்சனையினால் அவதியுறுகிறார்கள்.

do you have a drinking problem

நீங்கள் இந்தப் பழக்கத்தின் கடும் விளைவுகளில் இருந்து உங்களைக் காத்துக் கொள்ள நீங்கள் அவ்வபோது கவனமுடன் இதற்கான அறிகுறிகளை பார்த்து எச்சரிக்கை அடையவேண்டும்.

கீழே கூறப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு அறிகுறி உங்களுக்குத் தென்பட்டால் உடனடியாக ஒரு மருத்துவரை சந்தித்து அதன் பின்னணியில் உள்ள காரணி என்ன என்பதை அறிந்துகொள்ள முயலுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடிப்பதற்கான தொடர்ந்த ஆவல்

குடிப்பதற்கான தொடர்ந்த ஆவல்

மது குடிக்க எழும் நீடித்த ஆவல் என்பது மறுபேச்சின்றி குடிப்பழக்கத்திற்கான அறிகுறியே.

இந்த பிரச்சனைக்குள்ளானவர்கள் எப்போது பார்த்தாலும் குடிப்பதற்கான ஒரு கடும் வேட்கையைக் கொண்டிருப்பர்.

அதை செய்ய இயலாதபோது அது மன மற்றும் உடல் ரீதியான அயர்வைத் தரும்.

மயக்க நிலை

மயக்க நிலை

இதுவும் ஒரு தவிர்க்க இயலாத குடிப்பழக்கத்தின் ஒரு அறிகுறி. மயக்க நிலையை அடைதல், தலைசுற்றல் போன்றவை குடிப்பழக்கத்திற்கு உள்ளானவர்கள் அதிகம் அவ்வபோது எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.

மறதி

மறதி

குடிப்பழக்கம் உங்களுடைய மூளை செயல்பாட்டை வெகுவாக பாதித்து அதனை திறம்பட செயல்படவிடாமல் தடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடும் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் அவ்வபோது நடந்தவைகளை மற்ந்துவிடுவர்.

மனத் தளர்ச்சி :

மனத் தளர்ச்சி :

மது உங்களுடைய மன நலத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

குடிப்பழக்கத்தினால் பாதிக்கப் பட்டவர்கள் படபடப்பு, மன அழுத்தம், தனிமை உள்ளிட்ட பல்வேறு மன நலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டிவரும்.

சில மோசமான சூழ்நிலைகளில், இது நீடித்த மனநலம் சார்ந்த குறைபாடுகளை அல்லது பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

உதறல் அல்லது நிலையற்ற தன்மை

உதறல் அல்லது நிலையற்ற தன்மை

குடிப்பழக்கம் உடையவர்கல் பெரும்பாலும் உதறல் அல்லது உடல் நிலையற்ற தன்மையை உணருவார்கள்.

இது ஒரு பெரிய பிரச்சனையாகத் தோன்றாவிட்டாலும், உங்களுடைய தினசரி வேலைகளை செய்வதில் பின்னடைவை ஏற்படுத்தி உங்களுடைய திறனை பாதிக்கும்.

குமட்டல்

குமட்டல்

மிதமிஞ்சிய குடிப்பழக்கம் ஒருவருக்குக் குமட்டலை ஏற்படுத்தும். பெரும்பாலனவர்கள் காலையில் எழும்போது இதை உணருவதோடு சில தீவிர நிலைகளில் சிலர் இந்த குமட்டலை நாள் முழுதும் உணர்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

do you have a drinking problem

Things you must know if you are addicited to alcohol consumption.
Story first published: Friday, November 18, 2016, 14:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter