For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கம்ப்யூட்டர் வேலை மன அழுத்தத்தை தருதா? அப்ப தியானம் செய்யுங்க...

By Super
|

இன்றைய நவீன உலகில் மன அழுத்தத்திற்கு ஆளாகாத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும் மணிக் கணக்கில் கணினி முன் வேலை செய்பவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த மன அழுத்தத்தை போக்க என்ன வழி இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தவுடன், நினைவில் வரும் முதல் யோசனை தியானம் செய்வது. ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்க தியானமும் ஒரு கருவியாக பயன்படுகிறது.

தியானம் மன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது. இது தவிர, உடல் நலத்தை ஆதரிக்கிறது மற்றும் நாள்பட்ட வலிகளை தாங்குவதற்கு சக்தியைத் தருகிறது. மேலும் தியானத்தால் நல்ல தூக்கம், மகழ்ச்சி, அமைதியான மனநிலை ஏற்படுகிறது. கணினியில் வேலை செய்யும் போது, சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு பிடித்த விதமாக தியானம் செய்வதே கணினி தியானம் எனப்படுகிறது. இதை செய்வதற்கான சில வழிமுறைகளைக் காண்போமா!!!

How to Do Computer Meditation

* கணினிக்கு முன் அமர்ந்து கொண்டு ஆழமான, சுத்தமான சுவாசத்தை இழுத்து, மெதுவாக வெளியே விடவும். வேலை செய்யும் போது இவ்வாறு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

* கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, சுவாசம் தாறுமாறாக இருப்பதாக உணர்ந்தால், உடனே வேலை செய்வதை ஒரு நிமிடம் நிறுத்தி விடவும். கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக மூக்கு வழியே இழுக்கவும். முதலில் நுரையீரலில் காற்றை நிரப்பிய பின், கீழே கொண்டு செல்லவும். பின் மேல் நெஞ்சுக் கூடு விரிவதையும், பின்பு நெஞ்சுக் கூட்டின் கீழ் பகுதி விரிவதையும் உணர வேண்டும். பின்பு மெதுவாக உதட்டின் வழியே சுவாசத்தை வெளியே விட வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் செய்த பின் நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தியானத்தால் செய்யப்படும் இந்த மூச்சுப் பயிற்சி எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யப்படும் ஒரு எளிய பயிற்சியாகும்.

* கணினி முன் அமர்ந்து கொண்டு இவ்வகை தியான முறைகளை எளிதாக செய்யலாம். இதற்கு மூளை பலத்தை உபயோகிக்க வேண்டும். மனத்தால் செய்யும் தியானத்தில், நீங்கள் செய்யும் வேலையையே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இன்று இந்த வேலையை முடித்துவிடுவேன் என்று அடிக்கடி மனதில் உறுதியோடு கூறிக் கொள்ள வேண்டும்.

இப்படி அடிக்கடி நினைக்கும் போது, மற்ற தேவையில்லாத சிந்தனைகள் மனதை விட்டு நீங்கிவிடும். மனம் வெற்றிடமாகிவிடும். அதில் வேலையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்காது. மேலும் தொடங்கிய வேலைகளை எளிதாக குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விடலாம்.

* அலுவலகத்தில் வேலை செய்பவர்களையும் சேர்த்துக் கொண்டு அனைவரும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரி, நாங்கள் இந்த வேலையை செய்து முடிப்போம் என்று மனதாலோ அல்லது வார்த்தைகளாலோ கூற வேண்டும். இவ்வாறு கூறும் போது அங்கு ஒரு அசாத்திய அமைதி நிலவும். இதனால் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனம் ஓரளவு அமைதி அடையும்.

* கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும் போது, மன அழுத்தம் அதிகரித்தால் சில வார்த்தைகளை மனதிற்குள் சொல்ல, மனம் அமைதி பெரும். உதாரணத்திற்கு, வேலைக்கிடையே 'ஓம் சாந்தி, ஓம் சாந்தி' என்ற வார்த்தைகளை சிறிது நேரம் கூறலாம். பிடித்த கடவுள் அல்லது பிடித்த மகான்களின் படங்களை வேலை செய்யும் அறையில் வைத்துக் கொண்டோ அல்லது அவர்களை மனதில் நினைத்துக் கொண்டோ 'எனக்கு அமைதியும் நிம்மதியும் வேண்டும். அதற்கு உங்களது வழிகாட்டுதல் தேவை' என்று மனமுருக பிரார்த்தனை செய்யலாம். இதனால் மன அழுத்தம் குறைந்து, சில நிமிடங்களில் மனம் அமைதியடைந்து விடும்.

* 5 நிமிட தியானத்தை, 10 நிமிடமாக மாற்றலாம். இந்த தாமதம் மன அமைதியை மேலும் அதிகரிக்கும். இதனால் இறுதி கட்டத்தில் சொல்ல முடியாத இன்பத்தை அனுபவிக்கலாம். மேலும் மனம் மகிழ்ச்சி அடைவதை நன்கு உணரலாம்.

English summary

How to Do Computer Meditation | கம்ப்யூட்டர் வேலை மன அழுத்தத்தை தருதா? அப்ப தியானம் செய்யுங்க...

A guided meditation while taking a break from working at the computer is a fast way to find relaxation. Through simple yoga movements associated with positive phrases, you can dissolve inner blockages and recharge your mind positive.
Desktop Bottom Promotion