Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்திருப்பது உங்க ஆரோக்கியத்துக்கு கெட்டது தெரியுமா?
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை பெரும்பாலும் உட்கார்ந்த வாழ்க்கைமுறைக்குள் தள்ளிவிட்டது. நீண்ட நீரம் உட்கார்ந்த வாழ்க்கைமுறையானது நம் உடலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க ஒரே வழி அதிக உடல் உழைப்பில் ஈடுபடுவதாகும்.
போதுமான உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புக்ளை எதிர்த்துப் போராட அவசியமாகும். ஆனால் உடல் செயல்பாடுகளுக்கு எத்தனை மணி நேரம் ஒதுக்க வேண்டும், எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் அல்லது உட்கார வேண்டும்? ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு இந்த முக்கிய கேள்விகளுக்கானப் பதிலைக் கொண்டுள்ளது.

எத்தனை மணிநேர உடல் செயல்பாடு முக்கியமானது?
சிறந்த ஆரோக்கியத்திற்கு, ஒருவரின் நாளானது குறைந்தது எட்டு மணிநேர தூக்கம், மிதமான அல்லது தீவிரமான பயிற்சிகளை உள்ளடக்கிய நான்கு மணிநேர உடல் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மிதமான செயல்பாடு என்பது வேலைகளைச் செய்வதிலிருந்து இரவு உணவு தயாரிப்பது வரை இருக்கலாம், அதேசமயம் மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சியானது விறுவிறுப்பான நடை அல்லது ஜிம் பயிற்சி போன்ற இயக்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
நிபுணர்களின் கருத்துப்படி. சீரான இயக்கத்திற்கு 4 மணிநேர உடல் செயல்பாடு, 8 மணிநேர தூக்கம், 6 மணி நேரம் உட்கார வேண்டும், 5 மணி நேரம் நிற்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைமையிலான சர்வதேச குழு, 24 மணி நேர நாளுக்குள் 2,000 க்கும் மேற்பட்ட நபர்களின் நடத்தையை பகுப்பாய்வு செய்தது, அதன்படி விரும்பத்தக்க ஆரோக்கியத்திற்காக உட்கார்ந்து, தூங்குவது, நிற்கும் நேரம் மற்றும் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக செலவழித்த நேரத்தை கணக்கிட்டது.
"இந்த ஆய்வு பரவலான சுகாதார குறிப்பான்களை உள்ளடக்கியது மற்றும் ஒட்டுமொத்த சீரான ஆரோக்கியத்துடன் தொடர்புடைய 24 மணிநேரத்தில் ஒன்றிணைகிறது" என்று ஆய்வின் தலைவர் கூறினார்.
"வெவ்வேறு சுகாதார நிலைகளுக்கு, இடுப்பு சுற்றளவு முதல் சாப்பிடாத போது இரத்த குளுக்கோஸ் வரை, ஒவ்வொரு நடத்தைக்கும் வெவ்வேறு நிலைகள் இருக்கும்" என்று டயபெடோலாஜியா இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது.
உதாரணமாக, அதிக நேரம் உடல் சுறுசுறுப்புடன் உட்கார்ந்து செலவழித்த நேரத்தை குறைப்பது அல்லது மிதமான-தீவிர இயக்கங்களைச் செய்வது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த நிலை இல்லாதவர்களை விட அதிக நன்மை பயக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை மற்றொரு செயல்பாட்டால் மாற்றுவது ஒருவரின் முழு நாளையும் எவ்வாறு பாதிக்கும் என்பதையும் இந்த ஆய்வுகள் விளக்கியுள்ளன. "உடற்பயிற்சி நேரத்தை மாற்றினால் தூக்கம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், ஆனால் அது உட்கார்ந்த செயல்முறைக்கு பதில் அதனை செய்வது நன்மை பயக்கும்" என்று ஆய்வு கூறுகிறது.
இருப்பினும், உடற்பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், நேரத்தைப் பயன்படுத்துவது யதார்த்தமாகவும் சமநிலையாகவும் இருக்க வேண்டும், ஏனெனில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு அதனை மற்ற செயல்பாடுகளின் நேரத்தில் ஈடுசெய்ய நினைத்தால் அது ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கத்தையே ஏற்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

