Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
உங்க உடல் எடையை டக்குனு குறைக்க... கிரீன் டீயில் 'இந்த' ஒரு பொருளை கலந்து குடிச்சா போதுமாம்!
Weight Loss In Tamil: இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவதியடைந்து வருகிறார்கள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய காரணமாக உள்ளன.
உடல் பருமன் பல்வேறு உடல்நல அபாயங்களோடு தொடர்புடையது. இது விரைவில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆதலால், உடல் பருமனான மக்கள், உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறார்கள்.

ஆனால், உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல ஆண்டுகளாக உடல் எடையை குறைப்பதில் கிரீன் டீ பிரபலமாக அறியப்படுகிறது. அந்த வகையில், கிரீன் டீயோடு, எந்த பொருளை சேர்த்து அருந்துவது உங்களுக்கு சிறந்த பலனை தரும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்
உட்கார்ந்த வாழ்க்கை முறை உங்கள் உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, அந்த வாழ்க்கை முறையை கைவிட்டு, உடல் ரீதியாக எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், அவை உங்களை புத்துணர்ச்சியோடு வைத்திருப்பதோடு, உங்கள் வயிற்றை சுற்றி இருக்கும் கூடுதல் எடையைக் குறைக்க உதவும்.
உடல் எடையை குறைப்பதில் உங்கள் உணவும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் பானங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ? ஆம், உடல் எடையை குறைப்பதில் மிகவும் பிரபலமாக அறியப்படும் கிரீன் டீயை உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அனைவரும் அருந்துகிறார்கள். கிரீன் டீயில் தேனை சேர்த்து அருந்துவது, உங்களுக்கு சிறந்த பலனை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
கிரீன் டீயில் உள்ள ரகசிய பொருட்கள்
உடல் எடையை குறைப்பதில் கிரீன் டீ பிரபலமான பானமாக கருதப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க மற்ற தேயிலைகளை விட கிரீன் டீ ஏன் பிரபலமாக அறியப்படுகிறது என்பதற்கான காரணம் என்ன என்று யோசிக்கிறீர்களா? அதற்கான பதில், அதிலுள்ள மூலப்பொருளான கேடசின்கள்தான். இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
எபிகல்லோகேடசின் கேலேட் (EGCG) என்ற நன்கு அறியப்பட்ட வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் கேடசின் கிரீன் டீயில் அதிகமுள்ளது. இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. மற்றொரு முக்கியமான மூலப்பொருளான காஃபின், அனைவருக்கும் பிடித்தமானது. இது உங்கள் வழக்கமான கப் காபியில் இருப்பதை விட குறைவான அளவிலேயே காணப்படுகிறது. ஆனால், உடலிலுள்ள கொழுப்பை எரிக்கவும் உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்தவும் இது நன்றாக வேலை செய்கிறது.
தேன் சிறந்தது
இயற்கையான இனிப்பு முகவரான தேனை நீங்கள் குடிக்கும் பானத்தில் சேர்க்கலாம். கிரீன் டீயில் தேனை சேர்த்து அருந்துவது உங்கள் நாளை தொடங்க உதவும் சிறந்த தேர்வாகும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்றாக தேன் உள்ளது. கொலஸ்ட்ரால் இல்லாத தேனை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிடுவது, இனிப்பு பல் திருப்தியை நீண்ட காலத்திற்கு பூர்த்தி செய்கிறது. உடல் பருமனை சமாளிப்பதில் தேனின் பங்கை நிரூபிக்கும் ஆய்வுகள் பல உள்ளன.
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிப்பது, செல்லுலைட் எதிர்ப்பு சிகிச்சைக்கு அற்புதங்களைச் செய்கிறது. இது அடிபோசைட்டுகளில் செயல்படுவதன் மூலம் உடல் எடையை குறைக்கிறது. ஆற்றல் குறைவாக உணரும் மக்கள், தேனை தாங்கள் குடிக்கும் பானத்தில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில், தேன் சகிப்புத்தன்மையை மேம்படுத்தும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
கிரீன் டீ கசப்புச் சுவையைத் தடுப்பது எப்படி?
பொதுவாக இந்தியர்களுக்கு ருசியான உணவுப் பழக்கம் உண்டு. உணவு அல்லது பானங்கள் அவர்களின் சுவைக்கு ஈர்க்கவில்லை என்றால், அதை எடுத்துக்கொள்வது கேள்விக்குரியதுதான். கிரீன் டீயின் கசப்பு தன்மை காரணமாக, பலர் கிரீன் டீயை முயற்சி செய்யத் தயங்குகிறார்கள். சிலர் அதை தயாரிக்கும் வகையில் அதிக கசப்பு சுவையை பெறுகிறார்கள்.
கிரீன் டீ தயாரிக்கும்போது, சரியாக அவற்றை செய்ய வேண்டும். தேயிலை இலைகளை 3 முதல் 5 நிமிடங்கள் வரை 80 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சரியான கலவையைப் பெறுங்கள்.
இறுதிக்குறிப்பு
உடல் எடையை குறைப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கை வகிக்கிறது. உங்கள் உடலிலுள்ள கலோரிகளை எரிக்கவும் ஆற்றலை அதிகரிக்கவும் கிரீன் டீ உதவுகிறது. தேனின் கூடுதல் நன்மைகளுடன் கிரீன் டீயை எடுத்துக்கொள்வது எடை மேலாண்மை பயணத்தில் வேகத்தை எடுக்க சிறந்த வழியாகும்.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலமும், இன்னும் பிற நன்மைகளை வழங்குவதன் மூலமும், கிரீன் டீ மற்றும் தேன் ஆகியவற்றின் கலவையானது எடை இழப்பு பயணத்திற்கு ஒரு சிறந்த பானமாகும். உடல் எடையைக் குறைப்பதைத் தவிர, கிரீன் டீ மற்றும் தேன் ஆகியவை மனத் தளர்வை அளிப்பது முதல் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் சருமப் பொலிவை அதிகரிப்பது வரை பல நன்மைகளை வழங்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

