Latest Updates
-
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்..
கோடை காலத்தில் உங்களை பாடுபடுத்தும் சளியை விரட்ட இந்த வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க...!
இதுவரை மழைக்காலத்தில் மட்டும் தான் சளி பிடிக்கும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் கோடை காலத்தில் கூட சலதோஷம் பிடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் கோடை காலத்தில் ஏற்படும் சளியானது உடனே போகாது.
கோடை காலத்தில் நம்மில் நிறைய பேர் ஐஸ்க்ரீம், குளிர் பானங்கள் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது சலதோஷம் உடனே பிடிக்க வாய்ப்பு உள்ளது. கோடை காலத்தில் ஏற்படும் சலதோஷத்தால் வறட்டு இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே கோடை காலத்தில் ஏற்படும் சலதோஷத்தை போக்க கீழ்க்கண்ட சில இயற்கை வழிகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகிறது.

கோடைகாலத்தில் சலதோஷம் ஏற்படக் காரணங்கள்
கோடை காலத்தில் சலதோஷம் பெரும்பாலும் என்டோவைரஸ்களால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் தொடர்பு மூலமாக இது மற்றவருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இருமும் போது மற்றும் சளித் தொடர்பு மூலமாக இது மற்றவருக்கு பரவுகிறது.
கோடை கால சலதோஷம் அறிகுறிகள்
கோடை காலத்தில் நிறைய பேர்கள் ஒவ்வாமையை சந்திக்கின்றனர். இதனால் தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், இருமல் மற்றும் சளி போன்ற பல அறிகுறிகளை அவர்கள் சந்திக்கின்றனர். அதீத காய்ச்சல் மற்றும் சொறி பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
கோடை காலத்தில் ஏற்படும் சலதோஷத்தை போக்க இயற்கை வழிகள்:
உப்புக் கரைசல்
தேவையான பொருட்கள் :
1 டீ ஸ்பூன் கடல் உப்பு
ஒரு கப் தண்ணீர்
சிறுதளவு பேக்கிங் சோடா
ஒரு ஸ்ப்ரே பாட்டில்
பயன்படுத்தும் முறை :
முதலில் தண்ணீரை நன்றாக சூடாக்க வேண்டும். பிறகு நீங்கள் வைத்திருக்கும் ஸ்ப்ரே பாட்டிலில் உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அதனுடன் வெதுவெதுப்பான நீரை கலந்து நன்கு கலக்க வேண்டும். இந்த தண்ணீரை உங்கள் நாசித் துவாரங்களில் ஸ்ப்ரே செய்து விடுங்கள். பிறகு இதே மாதிரி புதிதாக தயாரித்து அவ்வப்போது பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வாருங்கள். உப்பு தண்ணீர் மூக்கடைப்பை பெரிதும் நீக்க உதவுகிறது. இது உங்கள் நாசிகள் மற்றும் தொண்டையில் இருக்கும் சளியை போக்க உதவுகிறது. கடல் உப்பிற்கு பதிலாக டேபிள் உப்பை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள். அது உங்களுக்கு எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
ஆப்பிள் சைடர் வினிகர்
தேவையான பொருட்கள் :
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்
ஒரு கிளாஸ் தண்ணீர்
பயன்படுத்தும் முறை :
ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தண்ணீரை நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் சிறுதளவு தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை 1-2 கிளாஸ் என தினமும் குடித்து வர சலதோஷம் நீங்கி விடும். ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு கார நிலையை உருவாக்குகிறது. இது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை விரைவாகவும் எளிதாகவும் கொல்ல உதவுகிறது.
வைட்டமின் சி
தேவையான பொருட்கள் :
வைட்டமின் சி மாத்திரைகள்
இந்த வைட்டமின் சி மாத்திரைகளை தினமும் மருத்துவரின் பரிந்துரை பேரில் எடுத்துக் கொண்டு வரலாம். வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இது நோய்களின் தாக்கத்தில் இருந்து உங்களை எளிதாக காக்க உதவுகிறது.
இஞ்சி
தேவையான பொருட்கள் :
1/2 அங்குல அளவிற்கு இஞ்சி வேர்
1 கப் சூடான நீர்
1 டீ ஸ்பூன் தேன்
பயன்படுத்தும் முறை :
வெதுவெதுப்பான நீரில் இஞ்சி துருவலை போட்டு அதில் தேன் சேர்த்து இஞ்சி டீ தயாரிக்கலாம். இந்த இஞ்சி டீ வறட்டு இருமல் மற்றும் சலதோஷத்திற்கு சிறந்த தீர்வளிக்கிறது. ஒரு நாளைக்கு 2-3 கப் என இஞ்சி டீ குடித்து வாருங்கள்.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சுவாசப் பாதையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து அதிகப்படியான சளியை வெளியேற்ற உதவுகிறது. இந்த டீ சுவாசப் பாதையில் உள்ள சளியை அகற்ற உதவுகிறது.
எக்கினேசியா
எக்கினேசியா மாத்திரைகள் சலதோஷத்தை போக்க பயன்படுகிறது. 900 மி. கி மாத்திரைகளை ஒரு நாளைக்கு 2-3 வேளை என எடுத்துக் கொண்டு வாருங்கள். எக்கினேசியா மாத்திரைகள் ஊதா நிற சங்குப் பூவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது நம் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. நோய்த்தொற்றை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
மஞ்சள்
தேவையான பொருட்கள் :.
1 டீ ஸ்பூன் உப்பு
1 டீ ஸ்பூன் மஞ்சள்
ஒரு டம்ளர் சூடான நீர்
பயன்படுத்தும் முறை
உப்பு மற்றும் மஞ்சளை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து கொள்ளுங்கள். இதைக் கொண்டு 3-4 மணிக்கு ஒரு முறை தொண்டையில் படும் படி கொப்பளிக்க வேண்டும். மஞ்சள் தொண்டையில் ஏற்படும் தொற்றுக்களை போக்க உதவுகிறது. இது ஒரு சிறந்த ஆன்டி மைக்ரோபியல் ஏஜெண்ட்டாக செயல்படுகிறது. இது உங்களை தொற்று நோய்கள் மற்றும் காய்ச்சலில் இருந்து காக்கிறது. மஞ்சள் மற்றும் உப்பு சேர்ந்த கலவை உங்கள் சளியை இளகச் செய்து வெளியேற்றுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













