Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்க வயித்துல அடிக்கடி 'கடமுடா'-ன்னு சத்தம் வருதா? ஏன் அந்த சத்தம் வருது? அப்ப நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
Growling Stomach In Tamil: பசியில இருக்கும்போது, ' வயிறு கத்துது'- ன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கீங்களா? நீங்கள் சும்மா இருக்கும்போது உங்கள் வயித்துல இருந்து கடமுடா- ன்னு சத்தம் வருதா? இது சில நேரங்களில் உங்களுக்கு எரிச்சலையும் அசெளகரியத்தையும் ஏற்படுத்தலாம்.
உங்கள் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது செரிமானம் மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த பொதுவான செரிமானப் பிரச்சனையை உடனடியாக சரிசெய்ய முடியாது. இருப்பினும், மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் வயித்துல இருந்து சத்தம் வருவது, பெரிய சங்கடமாக இருக்கும். இதை இயற்கை வைத்தியத்தின் மூலம் நீங்கள் சரிசெய்யலாம்.

ஆனால் திடீரென்று உங்கள் வயிறு ஏன் கத்துகிறது தெரியுமா? இந்த பொதுவான சிக்கலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
வயிறு ஏன் கத்துகிறது
வயிற்றில் கடமுடான்னு சத்தம் வருவது போர்போரிக்மி என்றும் அழைக்கப்படுகிறது. இது செரிமான அமைப்பின் இயற்கையான மற்றும் இயல்பான செயல்பாடாகும். இது பெரும்பாலும் செரிமான அமைப்பு, பசி, செரிமான சுருக்கங்கள், பாக்டீரியா செயல்பாடு ஆகியவற்றின் மூலம் வாயு மற்றும் திரவங்களின் இயக்கத்தால் தூண்டப்படுகிறது.
புதினா தேநீர்
உங்கள் செரிமான பிரச்சனையை தீர்க்க புதினா தேநீர் உதவும். புதினா தேநீர் தயாரித்து, அதில் சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம். இந்த எளிய கலவை உங்கள் செரிமான சுருக்கங்களை எளிதாக்கும். ஏனெனில், புதினா இயற்கையாகவே செரிமான மண்டலத்தின் தசைகளை தளர்த்தவும், வயிற்று அசௌகரியத்தை குறைக்கவும் உதவும்.
பெருஞ்சீரகம் மற்றும் கேரம் டீ
பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் கேரம் விதைகள் அவற்றின் குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை. ஆனால் இந்த இரண்டு விதைகளால் செய்யப்பட்ட தேநீரைப் பருகுவது வாயு மற்றும் உங்கள் வயிறு கத்தும் பிரச்சனையை சரி செய்ய உதவும்.
கேரம் மற்றும் பெருஞ்சீரகம் இரண்டும் உடலில் செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கும். எனவே, இந்த டீ குடிப்பது செரிமானத்தை அதிகரிக்கவும், பொதுவான செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவும்.
இஞ்சி தேநீர்
சிறிது பெருஞ்சீரக விதைகளுடன் துருவிய இஞ்சியை காய்ச்சி, தேநீர் தயாரிக்க வேண்டும். இந்த தேநீரை குடித்து வந்தால், இரைப்பை குடல் சுருக்கங்கள் மற்றும் செரிமான கோளாறுகளை போக்க உதவும். இதற்கு இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் விதைகளின் மெலஞ்ச் காரணமாகும். இது வாயு மற்றும் செரிமான சங்கடத்தை எளிதாக்கும் கார்மினேடிவ் பண்புகளைக் கொண்டுள்ளது.
தயிர்
வயிற்றில் கடமுடான்னு சத்தம் கேட்பது, குடல் உங்கள் செரிமான அமைப்பில் ஏதோ பிரச்சனை இருப்பதை குறிக்கிறது. இந்த பிரச்சனையை சரிசெய்ய, இனிக்காத தயிர் உதவும். தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன, அவை செரிமானத்தை சீராக்கவும் மற்றும் வயிற்று அசௌகரியத்தை எளிதாக்கவும் உதவும்.
ஒரு கிளாஸ் தயிரில் வறுத்த சீரகப் பொடி, கல் உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து பானமாக குடிக்க வேண்டும். இது உங்கள் வயிறு கத்தும் பிரச்சனையை சரி செய்யும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
