Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
மலம் கழிக்கும் போது ரொம்ப வலிக்குதா? இதோ உடனடி நிவாரணம் அளிக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!
Pain While Passing Stool In Tamil: நாம் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருப்போம். அப்படி நம்மில் பலர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். நிறைய பேர் மலச்சிக்கலை சாதாரணமாக நினைக்கிறார்கள். ஆனால் மலச்சிக்கலை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டால், பின் ஒரு கட்டத்தில் அதுவே மூல நோய்க்கு வழிவகுத்துவிடும்.
ஒருவருக்கு மலச்சிக்கலானது எப்போது ஏற்படுகிறது? செரிமானம் சரியில்லாத போது தான். நாம் உண்ணும் உணவுகள் சரியாக ஜீரணிக்கப்பட்டு, உடலில் இருந்து அவ்வப்போது எளிதில் வெளியேற்றப்பட வேண்டும். மலம் எளிதில் வெளியேற வேண்டுமானால் அதிகளவு நீரையும், நார்ச்சத்துள்ள உணவுகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

நீங்கள் மலம் கழிக்கும் போது இரத்தக்கசிவுடன், மிகுந்த வலியை சந்திக்கிறீர்கள் என்றால், நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இந்நிலையில் இதை உடனே கவனித்து சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
மலம் கழிக்கும் போது எதனால் வலிக்கிறது?
மலம் கழிக்கும் போது ஒருவருக்கு வலிக்கிறது என்றால், அவரது ஆசன வாய் பகுதியில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதுவும் இறுக்கமான மலத்தை கஷ்டப்பட்டு வெளியேற்றும் போது, ஆசன வாய்ப் பகுதியில் சிறு பிளவுகள் ஏற்பட்டு, அதன் காரணமாக வலியை அனுபவிக்கக்கூடும். இப்படி சந்திக்கும் வலியில் இருந்து நிவாரணத்தைப் பெற ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளின் மூலம் உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.
எப்சம் உப்பு
ஆசன வாய் பகுதியில் வலியை சந்திக்கும் போது, அதிலிருந்து நிவாரணம் பெற அகலமான பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, எப்சம் உப்பை சிறிது போட்டு, அந்நீரில் 20 நிமிடம் தினமும் உட்கார வேண்டும். இப்படி தினமும் உட்காரும் போது, மலம் கழித்த பின் சந்திக்கும் வலி படிப்படியாக குறைவதைக் காணலாம்.
தேங்காய் எண்ணெய்
பெரும்பாலானோர் தங்களின் பிரச்சனைகளுக்கு முதலில் இயற்கை வழிகளின் மூலமே தீர்வு காண விரும்புவார்கள். அப்படி பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஒரு அற்புத பொருள் தான் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெய் ஆசன வாய் பகுதியில் ஏற்படும் வலி, எரிச்சல் மற்றும் அரிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை ஆசன வாய் பகுதியில் தடவ வேண்டும். அதுவும் மலம் கழிப்பதற்கு முன்பும், மலம் கழித்த பின்னரும் தடவ வேண்டும்.
கற்றாழை ஜெல்
பெரும்பாலான இந்திய வீடுகளில் காணப்படும் ஒரு பொதுவான செடி தான் கற்றாழை. இந்த கற்றாழையின் ஜெல் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. முக்கியமாக மலம் கழிக்கும் போது சந்திக்கும் வலியில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கிறது. அதற்கு நற்பதமான கற்றாழை இலையை எடுத்து, அதன் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து, அதை ஆசன வாய் பகுதியில் நேரடியாக தடவ வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்கள், கற்றாழை ஜெல் ஜூஸைக் குடித்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
ஐஸ் ஒத்தடம்
எந்த ஒரு வலிக்கும் ஐஸ் ஒத்தடம் நல்ல பலனை அளிக்கும். முக்கியமாக ஆசன வாயில் சந்திக்கும் கடுமையான வலியைக் குறைக்கும். எனவே நீங்கள் மலம் கழித்த பின் ஆசன வாயில் தாங்க முடியாத வலியை சந்தித்தால், ஒரு துணியில் ஐஸ் கட்டியை வைத்து, பின் அதைக் கொண்டு ஆசன வாய் பகுதியில் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மிகவும் கடுமையான வலியை சந்தித்தால், 1 மணிநேரத்திற்கு ஒருமுறை வேண்டுமானாலும் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.
ஆயின்மெண்ட்
ஒருவேளை உங்களுக்கு வீட்டு வைத்தியம் வேலை செய்யாமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுகி, நிவாரணத்திற்கான ஆயின்மெண்ட்டுகளை வாங்கி பயன்படுத்துங்கள். அசெட்டமினோஃபென், ஆஸ்பிரின் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரண மருந்துகள் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
ஸ்குவாட் நிலையில் அமரவும்
தற்போது பலரது வீடுகளில் வெஸ்டர்ன் டாய்லெட் தான் உள்ளது. மலச்சிக்கல் மற்றும் மலம் கழிக்கும் போது வலியை சந்திப்பவர்கள், வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தும் போது ஒரு சிறிய ஸ்குவாட்டிங் ஸ்டூலை வாங்கி, அதன் மேல் கால்களை வைத்து, இரண்டு கால்களையும் ஒட்டி வைத்து, நேராக அமர்ந்து மலம் கழிக்க வேண்டும். இதனால் எளிதில் மலம் வெளியேறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











