Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
HMPV வைரஸ் உங்களை தாக்கக்கூடாதா? அப்ப இந்த கசாயத்தை தினமும் குடிங்க...
HMPV Virus: சீனாவில் பரவிக் கொண்டிருக்கும் HMPV வைரஸானது தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. அதுவும் முதன்முதலாக இந்த வைரஸ் பெங்களூருவில் உள்ள இரண்டு கைக்குழந்தைகளிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சென்னையிலும் இந்த வைரஸ் தொற்றின் வழக்கு பதிவாகியுள்ளது.
இந்த HMPV வைரஸ் கோவிட்-19 வைரஸ் போன்று ஆபத்தானது இல்லை என்று மருத்துவர்கள் கூறினாலும், இந்த வைரஸ் உடலினுள் புகுந்தால், அது முதலில் சுவாச மண்டலத்தை தான் பாதிக்கும். இதன் விளைவாக சுவாச பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் இந்த வைரஸ் நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் எளிதில் தொற்றக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

என்ன தான் இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இதன் தாக்கம் உடலில் இருக்கும் அல்லவா? எனவே இந்த வைரஸ் தொற்றாமல் இருக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகள், பானங்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். கீழே உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 3 விதமான கசாயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கசாயங்களைக் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கசாயம் - 1
தேவையான பொருட்கள்:
* இஞ்சி - 2 இன்ச்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 5
* ஏலக்காய் -5
* மிளகு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அம்மியில் இஞ்சி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை சேர்த்து தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ள மசாலாக்களை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் அதை வடிகட்டி, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தால், இஞ்சி மஞ்சள் கசாயம் தயார்.
கசாயம் - 2
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 4 கப்
* பிரியாணி இலை - 2
* துளசி இலைகள் - சிறிது
* இஞ்சி - 1 இன்ச்
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 3
* மிளகு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 5
* தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் 2 பிரியாணி இலை, சிறிது துளசி இலைகள், 1 இன்ச் இஞ்சி, 1 இன்ச் பட்டை, 3 ஏலக்காய், 1 டீஸ்பூன் மிளகு மற்றும் 5 கிராம்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதை நன்கு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பிறகு அதை வடிகட்டி, 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்தால், இஞ்சி துளசி கசாயம் தயார்.
கசாயம் - 3
தேவையான பொருட்கள்:
* புதினா - 1 கையளவு
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 5
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 4
* தண்ணீர் - 4 கப்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அம்மியில் 1 கையளவு புதினா, பட்டை, கிராம்பு, மிளகு, ஏலக்காய் சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ளதை சேர்த்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதை இறக்கி வடிகட்டி, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தால், புதினா கசாயம் தயார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கசாயங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, நோய்க்கிருமிகள் உடலைத் தாக்குவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications