Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி டீயுடன் இத கலந்து குடிங்க..
High Cholesterol In Tamil: உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது உலகளவில் ஏராளமானோர் அவதிப்பட்டு வரும் ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாகும். மெழுகு போன்று காணப்படும் கொலஸ்ட்ரால் உடலில் பலவிதமான முக்கியமான செயல்பாடுகளை செய்கிறது. அதில் புதிய செல்களை உருவாக்கவும், ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் பெரிதும் உதவி புரிகிறது. இவ்வளவு முக்கியமான கொலஸ்ட்ரால் நமது கல்லீரலால் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.
இது தவிர நாம் உண்ணும் உணவுகளினாலும் உடலில் கொலஸ்ட்ரால் சேர்கிறது. இவ்வாறு சேரும் கொலஸ்ட்ரால் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகும் போது, அது சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் சேதத்தை ஏற்படுத்துவதோடு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தி உயிரையும் பறித்துவிடும்.

எனவே கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருந்தால், அதை உடனே கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை படுமோசமாகிவிடும். உடலில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க ஏராளமான உணவுப் பொருட்கள் நமக்கு உதவி புரிகின்றன. அவற்றில் இஞ்சி மற்றும் மஞ்சள் மிகவும் முக்கியமானவை.
இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலுறுப்புக்கள் அனைத்தின் ஆரோக்கியமும் மேம்படும். அதுவும் அத்துடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து குடிக்கும் போது, உயர் கொலஸ்ட்ரால் இன்னும் சிறப்பான வழியில் கட்டுப்படும். இப்போது தினமும் காலையில் இஞ்சி டீயுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படும்
உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருமடங்கு அதிகமாக உள்ளன. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டவர்கள் அதை எளிய வழியில், அதுவும் இயற்கை வழியில் கட்டுப்படுத்த விரும்பினால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இஞ்சி டீயுடன் மஞ்சள் கலந்து குடிக்க வேண்டும். இதனால் இரத்தக்குழாய்களில் தேங்கியுள்ள கொலஸ்ட்ரால் கரைவதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளும் குறையும்.
அழற்சி/வீக்கம் குறையும்
இஞ்சி டீயுடன் மஞ்சள் தூளை கலந்து குடிக்கும் போது, அவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலினுள் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியைக் குறைக்க உதவுவதோடு, இரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கவும், கொலஸ்ட்ராலை மேலும் படிய விடாமலும் தடுக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்
மஞ்சளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் உள்ள குர்குமின் என்னும் செயலில் உள்ள பொருள், இரத்த குழாய்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதோடு, கொலஸ்ட்ராலைக் குறைக்க மறைமுகமாக உதவி புரிகிறது. இப்படிப்பட்ட மஞ்சளை இஞ்சி டீயுடன் கலந்து குடித்து வரும் போது, இதய ஆரோக்கியம் மேம்படும்.
இதய ஆரோக்கியம்
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக மஞ்சள் கலந்த இஞ்சி டீயைக் குடித்து வந்தால், அது உடலில் ஏற்படும் வீக்கத்தை உடனே எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டத்தையும் அதிகரித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மெட்டபாலிசம் மேம்படும்
உடல் எடை அதிகமாக இருப்பவர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, காலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக மஞ்சள் கலந்த இஞ்சி டீயைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். உடலின் மெட்டபாலிசம் அதிகரித்தால், கொழுப்பு செல்கள் விரைவில் உடலால் திறம்பட பயன்படுத்தப்பட்டு, இதன் விளைவாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
செரிமானம் மேம்படும்
ஒருவரது செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படாமல் இருந்தாலும், அதன் விளைவாக உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகிய இரண்டுமே செரிமானத்தை ஊக்குவிக்கும். எனவே உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு காலையில் காபி, டீ-க்கு பதிலாக மஞ்சள் கலந்த இஞ்சி டீயைக் குடித்து வர வேண்டும்.
இரத்த குழாய்கள் சுத்தமாகும்
மஞ்சள் கலந்த இஞ்சி டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதோடு, கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. முக்கியமாக இந்த டீ மூலைமுடுக்குகளின் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுவதால், தினமும் இதை குடித்து வரும் போது, கொலஸ்ட்ராலின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications