Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த விதையை கலந்து 15 நாட்கள் குடிச்சா.. கெட்ட கொலஸ்ட்ரால் மடமடன்னு குறையுமாம்..
High Cholesterol In Tamil: உலகளவில் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை எதனால் வருகிறது, உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றும் அதை எப்படி சமாளிப்பது என்பது பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது முக்கியம்.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதை 'ஹைப்பர்கொலஸ்ட்ரோலீமியா' என்று அழைப்பர். இது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதைக் குறிக்கிறது. பொதுவாக கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒரு பொருள். இது உடல் செல்கள் மற்றும் குறிப்பிட்ட உணவுகளில் காணப்படுகிறது.

கொலஸ்ட்ரால் முழுமையாக கெட்டது அல்ல. நமது உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்க கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையைத் தர தொடங்குகிறது. இதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL). இதில் கெட்ட கொலஸ்ட்ரால் கணிசமாக அதிகரிக்கும் போது இதய நோயின் அபாயம் இருமடங்கு அதிகரிக்கிறது. எப்படியெனில் இந்த கெட்ட கொலஸ்ட்ராலானது இரத்தக் குழாய்களில் தங்கி ப்ளேக்குகளை உருவாக்கி, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
பொதுவாக வயது அதிகரிக்கும் போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க தொடங்குகிறது. எனவே இந்த கொலஸ்ட்ராலைக் குறைக்க ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். அதுவும் இயற்கை வழியில் குறைக்க முயற்சிப்பது நல்லது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பல இயற்கை வழிகள் உள்ளன.
அவற்றில் ஆப்பிள் சீடர் வினிகரில் சியா விதைகளை சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால், திறம்பட கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம். இப்போது ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஆளி விதைகள் எப்படி கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கின்றன என்பதைக் காண்போம்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்
நமது உடலில் பிரச்சனைகள் வருவதற்கான முக்கிய காரணம் ப்ரீ-ராடிக்கல்கள் தான். இவையே உடலினுள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், வீக்கத்தையும் உண்டாக்குகின்றன. ஆனால் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சியா விதைகள் இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் உடலினுள் ஏற்படும் சேதத்தை எதிர்ப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது.
நார்ச்சத்து அதிகம்
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சியா விதைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. இந்த நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, கொலஸ்ட்ராலை திறம்பட கரைத்து உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. இப்படிப்பட்ட சியா விதைகளை ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து எடுக்கும் போது, கொலஸ்ட்ராலைக் கரைக்கும் பணி துரிதப்படுத்தப்படுவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
எடை இழப்புக்கு உதவும்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், முதலில் ஒருவர் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். சியா விதைகள் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இவை நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, உடல் எடையை மட்டுமின்றி, கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.
இரத்த சர்க்கரை கட்டுப்படும்
உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் பராமரிக்க வேண்டுமானால், முதலில் இரத்த சர்க்கரை அளவை ஒருவர் கண்காணிக்க வேண்டும். ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சியா விதைகளானது ஒருவரது இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
இதய ஆரோக்கியம் மேம்படும்
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சியா விதைகளில ஏராளமான நன்மை விளைவிக்கும் சத்துக்கள் உள்ளன. இவற்றை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், அவை கொலஸ்ட்ரால் மற்றும் உடலினுள் ஏற்படும் அழற்சியை கட்டுப்படுத்துவதோடு, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் இந்த பானத்தைக் குடித்து வருவது நல்லது.
செரிமானம் மேம்படும்
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சியா விதைகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. அதுவும் இதில் உள்ள ஆப்பிள் சீடர் வினிகர் உணவுகளை உடைத்தெறிந்து, ஊட்டச்சத்துக்கள் உறிஞ்ச உதவுகிறது. அதேப் போல் சியா விதைகளை செரிமானத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. ஒருவரது செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட்டு வந்தாலே, கொலஸ்ட்ரால் அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இரத்தக்குழாய்கள் சுத்தமாகும்
கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது இரத்தக் குழாய்களில் கொழுப்புக்களை தேங்கச் செய்து, இதய செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்திவிடும். ஆனால் ஆப்பிள் சீடர் வினிகருடன் சியா விதைகளை கலந்து உட்கொண்டு வரும் போது, இரத்தக் குழாய்களில் தேங்கியுள்ள கொலஸ்ட்ரால் கரைந்து வெளியேற்றப்பட்டு, இரத்தக் குழாய்கள் சுத்தமாவதோடு, இதய நோய்களின் அபாயமும் தடுக்கப்படுகிறது.
எப்படி தயாரிப்பது?
* ஒரு ஸ்பூன் சியா விதைகளை ஒரு டம்ளர் நீரில் இரவு தூங்கும் முன் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் எழுந்ததும், ஊறிய சியா விதைகளுடன் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications