Latest Updates
-
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
ஹை பிபி இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல மாரடைப்பு சீக்கிரம் வந்துடும்...
High Blood Pressure Diet In Tamil: தற்போது சர்க்கரை நோய்க்கு இணையாக உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தம் என்பது இதய நோயை வரத் தூண்டும் ஒரு ஆபத்தான நிலை. உயர் இரத்த அழுத்தம் இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உயர் இரத்த அழுத்தத்தின் போது இதயத்திற்கு செல்லும் தமனிகளின் சுவர்களுக்கு எதிராக இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. முக்கியமாக உயர் இரத்த அழுத்தம் இருந்தால் விரைவில் வரக்கூடிய ஒன்று தான் மாரடைப்பு. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அது எப்போதும் கவனிக்கத்தக்க அறிகுறிகளை கொண்டிருக்காது என்றாலும், ஒருசில பொதுவான அறிகுறிகளை அடிக்கடி வெளிக்காட்டும். அதில் மூக்கில் இரத்தம் வடிவது, தலைவலி, மூச்சுத்திணறல் போன்றவை அடங்கும். இந்த அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும். இது தவிர குறிப்பிட்ட வயதை எட்டிய பின் வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள், அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உணவில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஒருசில உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது விரைவில் மாரடைப்பைத் தூண்டி மரணத்தை பரிசாக அளித்துவிடும். இப்போது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம்.
காபி
காபியில் காப்ஃபைன் அதிகளவில் உள்ளன. இந்த காப்ஃபைன் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன. மேலும் காபி தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை சட்டென்று உயர்த்தும். எனவே தான் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி மற்றும் காப்ஃபைன் அதிகம் உள்ள பானங்களை எடுப்பதைத் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வேண்டுமானால் காபிக்கு பதிலாக, இஞ்சி டீ, புதினா டீ போன்ற காப்ஃபைன் இல்லாத பானங்களைக் குடிக்கலாம்.
இறைச்சிகள்
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஏன் ஆட்டிறைச்சிகளும் ஜீரணமாக நீண்ட நேரம் எடுப்பதோடு, இந்த வகை இறைச்சிகள் ஒருவரது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கின்றன. எனவே இறைச்சி வகைகளை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆல்வஹால்
ஆல்கஹாலை எப்போதாவது அருந்தினால் அது இரத்த அழுத்தத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று ஆய்வுகளும் தெரிவித்துள்ளன. ஆனால் அதிகளவிலான ஆல்கஹாலை அருந்தினால், அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். கூடுதலாக, நீண்ட நாட்களாக இப்படி அதிகளவு ஆல்கஹாலை அருந்தி வந்தால், அது நாள்பட்ட இதய நோய்களை உண்டாக்கும். எனவே கவனமாக இருங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்படட உணவுகளான பாக்கெட் சிப்ஸ், கேனில் அடைக்கப்பட்ட காய்கறிகள், ரெடி-டூ-ஈட் உணவுகள் போன்றவை பார்க்க ஆரோக்கியமானதாக தெரியலாம். ஆனால் உண்மையில் இவற்றில் உணவுகள் கெட்டுப் போகாமல், உணவுகளின் தரத்தை பாதுகாக்க நிறைய கெமிக்கல்கள் மற்றும் சோடியம் சேர்க்கப்பட்டுள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கை விளைவிக்கக்கூடியவை. முக்கியமாக இரத்த அழுத்தத்தை மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், இந்த வகை உணவுகளை முற்றிலும் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், அதுவே மாரடைப்பை விரைவில் தூண்டிவிடும்.
சோடியம் நிறைந்த உணவுகள்
ஏற்கனவே கூறியது போல், சோடியம் அதிகம் நிறைந்த உணவுகள் ஒருவரது இரத்த அழுத்தத்தை உடனடியாக அதிகரிக்கும். ஒருவரது இரத்த அழுத்தம் சட்டென்று அதிகரித்தால், அது இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். பொதுவாக இம்மாதிரியான சோடியம் ஜங்க் உணவுகள், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் அதிகமாக இருக்கும். எனவே இந்த வகை உணவுகளைத் தவிரத்திடுங்கள்.
சர்க்கரை நிறைந்த உணவுகள்
உப்புள்ள உணவுகளைப் போன்றே சர்க்கரை நிறைந்த உணவுகளும் ஒருவரது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக ஆய்வுகளில் நிருபிக்கப்பட்டுள்ளன. இந்த சர்க்கரையானது ஜங்க்உணவுகளிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் அதிகமாக காணப்படுகின்றன. பொதுவாக சர்க்கரையானது நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை குறைக்கிறது. நைட்ரிக் ஆக்சைடுஇரத்தக் குழாய்களின் நெகிழ்ச்சித்தன்மையை ஊக்குவிப்பதால், நைட்ரிக் ஆக்சைடு அளவு குறைவதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை நிறைந்த உணவுகளையும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
புகைப்பிடிப்பது
புகைப்பிடிப்பது ஒருவரது இரத்த அழுத்தத்தை சற்று அதிகரிக்கலாம். அதோடு அதில் உள்ள புகையிலை இதயத்திற்கு செல்லும் தமனிகளின் சுவர்களில் சேதமத்தை ஏற்படுத்தலாம். இப்படியான சேதம் தொடரும் போது, அது தொடர்ச்சியாக இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதய நோயின் ஆபத்தை அதிகரித்துவிடு. எனவே உயர் இரத்த அழுத்தம் இருந்து, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதை கைவிடுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்துமே ஒருவரது இரத்த அழுத்த அளவுகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்த வகை உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, மாரடைப்பு வருவதன் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க தங்களின் உணவுகளில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











