Just In
- 3 hrs ago
இன்றைய ராசிப்பலன் (25.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடவும்…
- 15 hrs ago
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
- 16 hrs ago
பார்ப்போரின் வாயைப் பிளக்க வைக்கும் செக்ஸியான உடையை அணிந்து வந்த பிரபலங்கள்!
- 17 hrs ago
இந்த வகை பெண்களை காதலிக்கும் ஆண்கள் ரொம்ப பாவம்... இவங்க கண்டிப்பா உங்கள கழட்டி விட்ருவாங்க...!
Don't Miss
- News
மதுரை டவுன்ஹால் ரோட்டில் மின்னணு கடைகளில் பயங்கர தீ விபத்து
- Movies
அள்ளி இறைக்கறீங்களே இப்படி.. உருகிய அமலா பால்.. பிளவுஸ் டிசைன் சூப்பர்!
- Automobiles
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
- Sports
போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே நாள்ல உடம்புல இருக்கற கழிவெல்லாம் வெளியேறணுமா? இந்த சூப் குடிங்க போதும்...
'ஹெர்பல் பிராத்' என்று அழைக்கப்படும் மூலிகை வெந்த சாறு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதாகும். இதை மற்ற உணவுகளுடன் சேர்த்தும் அருந்தலாம். எந்த உணவுடனும் சேர்க்காமல் தனியாகவும் அருந்தலாம்.
உங்கள் விருப்பத்திற்கேற்ற மூலிகையை பயன்படுத்தி நீங்களே வீட்டில் ஹெர்பல் பிராத் என்னும் மூலிகை வெந்த சாற்றினை தயாரித்து அருந்தி ஊட்டச்சத்தை பெற்று நலமாக வாழ முடியும்.

ஹெர்பல் பிராத்
மூலிகையை அவித்து சாறு தயாரிக்கும் முன்பு மூன்று விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவது, ஏன் இந்தச் சாறை தயாரிக்கிறீர்கள்? இரண்டாவது, குறிப்பிட்ட ஓர் உடல்நல தேவைக்காக இதை தயாரிக்கிறோமா? மூன்றாவது, இதற்கென்று பிரத்தியேகமாக ஓர் உணவை பயன்படுத்த விரும்புகிறீர்களா? இவற்றை நோக்குவதோடு சுவை, பலன், தயாரித்தல் ஆகியவற்றில் குழப்பம் ஏற்படாமல் இருக்கும்வண்ணம் மூன்று விஷயங்களுக்கு மேல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
உதாரணத்திற்கு, உணவில் கூடுதல் வைட்டமின்கள் மற்றும் தாதுகள் சேர்வதற்காக ஊட்டச்சத்துக்கான மூலிகை சாறு, ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ ஆகியவை தாக்கக்கூடிய காலங்களில் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தக்கூடிய சாறு, நீங்கள் விரும்பி அருந்தும் சுவையிலான சூப் தயாரிக்க பயன்படுத்துவதற்கான மூலிகை சாறு என்று வரையறுத்துக் கொள்ளலாம்.

மூலிகை தேர்ந்தெடுத்தல்
மூலிகை சாறு தயாரிப்பதற்கான நோக்கத்தை வரையறுத்துக்கொண்டபின், சைவம் அல்லது அசைவம் என்று எந்த அடிப்படையில் இதை தயாரிக்க இருக்கிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். மூலிகை ஊறிய சாற்றினை எதைக் கொண்டு தயாரிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பத்தை பொறுத்ததுதான். சைவம் அல்லது அசைவம் என்று தீர்மானித்தபின்னர், அதற்கு ஏற்ற சுவை தரும் மூலிகையையும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உதாரணமாக, மீன் முள் அல்லது எலும்பு கொண்டு ஹெர்பல் பிராத் தயாரிப்பதற்கும் காளானை முதன்மை பொருளாக கொண்டு தயாரிப்பதற்கும் சுவையில் பெருத்த வேறுபாடு உண்டு. சைவ மற்றும் அசைவ தேர்வு, ஊட்டச்சத்து மற்றும் உடல் நல நோக்கினாலான பார்வையிலும் அமையும்.
MOST READ: உங்க ராசிப்படி உங்க உடம்புக்குள்ள இருக்கிற அதீத ஆற்றல் என்னனு தெரியுமா? இத படிங்க...

மூலிகைகள் மற்றும் காளான்கள்
எந்த மூலிகையுடன் எந்த மூலிகை மற்றும் மூலப்பொருள் சுவையில் ஒத்துப்போகும் என்று தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. சாகே, ரோஸ்மேரி மற்றும் பார்ஸ்லே ஆகியவற்றை ஒரு தொகுப்பாக கருதலாம். இதேபோன்று ஒன்றுக்கொன்று சுவையில் இணையும் மூலிகைகளை தொகுத்து அவற்றைக் கொண்டு மூலிகை அவித்த சாற்றினை தயாரிக்கலாம்.
சாகே, ரோஸ்மேரி, பார்ஸ்லே, தைமே, கற்பூரவள்ளி, லெமன்கிராஸ், ரெய்ஸி, இஞ்சி, பெருஞ்சீரகம், சிவப்பு மிளகாய், பூண்டு, அஸ்ட்ராகாலஸ், ஹவ்தார்ன் பெர்ரி, எல்டர்பெர்ரி, சாகா காளான், மஞ்சள், சோம்பு மற்றும் கிராம்பு ஆகிய மூலிகைகள் மற்றும் காளான்கள், ஹெர்பல் பிராத் செய்வதற்கு ஏற்றவையாகும்.

ஹெர்பல் பிராத் மற்றும் இணை உணவுகள்
காய்கறிகள் மற்றும் காளான்கள் எவற்றை ஹெர்பல் பிராத்தில் முக்கிய பொருளாக பயன்படுத்துகிறோம் என்பது பொருட்டல்ல. ஆனால், ஸ்குவாஷ் சூப் போன்று வேறு ஏதாவது ஒன்றை தயாரிக்க இதை முக்கியமாக பயன்படுத்தப்போகிறோம் என்றால் அதனுடன் இணைந்து போகும் சுவை உள்ளதாக ஹெர்பல் பிராத்தினை தயாரிப்பது முக்கியம். கார சுவை மற்றும் மூக்கை துளைக்கும் நெடி கொண்ட காய்கறிகள் மற்றும் காளான்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
சாகே மற்றும் ரோஸ்மேரி ஆகிய வீட்டில் கிடைக்கக்கூடிய மூலிகைகள் சூப்பின் சுவையுடன் ஒத்துச் செல்லக்கூடியவை என்பதுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலை தருவதுடன் சுவாச மண்டலத்துக்குள் உதவக்கூடியவை. இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவையும் நோய் கிருமிகளை எதிர்க்கும் இயல்பை கொண்டிருப்பவை.
ஹெர்பல் பிராத் என்னும் மூலிகை அவித்த சாற்றினை தயாரிக்க பயன்படுத்தக்கூடிய இன்னொரு சிறந்த மூலிகை அஸ்ட்ராகாலஸ் வேர் ஆகும். நடுநிலையான சுவை கொண்ட இது, நோய் தடுப்பு ஆற்றலை ஊக்குவிக்கக்கூடியதும் ஆகும்.

மூலிகைகளின் அளவு
எந்தெந்த மூலிகைகளை பயன்படுத்துவது என்று முடிவு செய்த பின்னர், நாம் எவ்வளவு சாறு தயாரிக்கப்போகிறோம் என்பதைப் பொறுத்து, பயன்படுத்தப்போகும் மூலிகைகளின் அளவினை தீர்மானிக்க வேண்டும். தேவைப்படும் மூலிகைகளின் அளவு பயன்பாட்டில்தான் தெரிய வரும்.
மூலிகைகளின் சுவை மற்றும் மணம் இவற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு எந்த அளவு மூலிகையை பயன்படுத்தவேண்டும் என்பதையும் முடிவு செய்யவேண்டும். மணமுள்ள மூலிகைகள் மற்றும் விதைகளை ஹெர்பல் பிராத்தில் பயன்படுத்தும் முன்னர் அவற்றை சிறிது நசுக்கி மூலிகை சாற்றில் இட்டால் அவற்றிலுள்ள எண்ணெய் மூலிகை சாற்றுடன் இணைந்து நல்ல மணத்தை அளிக்கும்.
செய்முறை
எலும்பினை பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய அசைவ மூலிகை சாறு மற்றும் சைவ மூலிகை சாறு ஆகியவற்றுக்கான செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
MOST READ: ராகியை தினமும் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன மாதிரியான பிரச்சினை வரும்?

மூலிகை எலும்பு பிராத்
தேவையானவை:
நீர் - ஒரு கலன் (ஒரு கலன் என்பது ஏறக்குறைய 4.5 லிட்டர்)
பார்ஸ்லே என்னும் வேர்க்கோசு - 4 முதல் 6 தழை
தைம் என்னும் நறுமண கறியிலை - 4 முதல் 6 அல்லது உலர்ந்த தைம் 1 மேசைக் கரண்டி அளவு
ரோஸ்மேரி - 2 தழை அல்லது உலர்ந்தது 1 மேசைக்கரண்டி
சாகே - 2 தழை அல்லது உலர்ந்தது 1 மேசைக்கரண்டி
லாரல் என்னும் புன்னைவகை இலை -1 கொத்து
ஆப்பிள் சிடர் வினீகர் - ¼ கப்
ஆடு, மாடு அல்லது மீன் எலும்பு - 2 பவுண்டு (1 பவுண்டு ஏறக்குறைய அரை கிலோ)
செய்முறை:
எலும்புகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து அவற்றுடன் வினிகர் சேர்க்கவும். எலும்புகள் மூழ்குமளவுக்கு நீர் ஊற்றவும். எலும்புகளுக்கு ஓர் அங்குலம் மேலே நீர் மட்டம் இருக்கட்டும். நீர் வெதுவெதுப்பாகி குமிழ்கள் வருமளவுக்கு சூடாக்கவும். பின்னர் ஜூவாலையை குறைத்து இரண்டு முதல் மூன்று நாள்கள் (48 முதல் 72 மணி நேரம்) அடுப்பில் வைக்கவும். நீர் குறைய குறைய எலும்புகள் மூழ்குமளவுக்கு நீரை சேர்த்துக்கொண்டே இருக்கவும். எலும்புகள் மிதக்க ஆரம்பித்தால் அதற்கேற்ப நீர் மட்டத்தின் அளவை கூட்டவும்.
தயாரிப்பு முடிய இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இருக்கும்போது பார்ஸ்லே, தைம், ரோஸ்மேரி, சாகே மற்றும் லாரல் என்னும் புன்னைவகை இலைகளை சேர்க்கவும்.
அடுப்பை அணைத்துவிட்டு ஹெர்பல் பிராத்தை குளிர விடவும்.எலும்புகள், மூலிகைகளை இறுத்து சாற்றினை மட்டும் பாத்திரத்தில் எடுத்து குளிர வைக்கவும். பின்னர், குளிர்சாதன பெட்டியில் (ரெப்ரிஜிரேட்டர்) வைக்கவும். சாதாரண நிலையில் வைத்தால் 1 வாரமும் அதிலேயே உறைநிலையில் வைத்தால் 6 மாதமும் இதை வைத்து பயன்படுத்தலாம்.
MOST READ: முதுகு பிடிச்சிடுச்சா? எப்படி வலிக்காம உடனே சரிசெய்யலாம்?

எலுமிச்சைப் புல் பிராத்
தேவையானவை:
சுத்தமான நயம் ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஷீடாக் காளான் (புதியது அல்லது உலர்ந்தது) -10 முதல் 15 எண்ணம் (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (நசுக்கியது)
இஞ்சி - 1 அங்குல துண்டு (நசுக்கியது)
உலர்ந்த ஏஞ்சலிக்கா வேர் - 1 தேக்கரண்டி (பொடித்தது)
அஸ்ட்ராகாலஸ் வேர் (உலர்ந்தது) -2 தேக்கரண்டி (அல்லது உலர்ந்த அஸ்ட்ராகாலஸ் வேர் 2 அங்குல துண்டுகள் - 2 எண்ணம்)
லெமன்கிராஸ் என்னும் எலுமிச்சைப் புல் (உலர்ந்தது) - 1 மேசைக்கரண்டி
நீர் - 2 குவார்ட்ஸ் (2.5 லிட்டர்)
பார்ஸ்லே இலை - கையளவு (உலர்ந்ததாயின் 2 தேக்கரண்டி)
கடல் உப்பு மற்றும் மிளகு - சுவைக்காக தேவையான அளவு
எலுமிச்சை சாறு -2 தேக்கரண்டி (ஒருவருக்கு)
செய்முறை:
பெரிய பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெயை எடுத்து மிதமாக சூடுபடுத்தவும். காளான், பூண்டு, இஞ்சி, ஏஞ்சிலிக்கா (பயன்படுத்தினால்), அஸ்ட்ராகாலஸ் மற்றும் எலுமிச்சைப் புல் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் சூடாக்கவும். அப்போது நன்கு கலக்கிக்கொண்டே இருக்கவும்.
நீர் சேர்த்து இந்தக் கலவை கொதிக்குமளவுக்கு சூடாக்கவும். பின் ஜூவாலையை குறைக்கவும். கொதிநிலையை எட்டாமல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மிதமாக சூடாக்கவும். வேர்கள் மிருதுவாகும்வரைக்கும் சூடாக்கவும்.
இறுதியில் பார்ஸ்லே இலை, உப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

எல்லா காலத்துக்கும் ஏற்றது
குளிர்காலத்தில்தான் ஹெர்பல் பிராத் என்னும் மூலிகை கொதித்த சாறு மற்றும் சூப் ஆகியவற்றை பருகுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஹெர்பல் பிராத் எல்லா காலநிலைக்கும் ஏற்றதாகும். அதேபோன்று அனைத்து உணவுகளோடு இணைந்து பருகவும் இது ஏற்றது.
MOST READ: சிறுநீர் கழிக்கும்போது கடுகடுனு வலிக்குதா? இத கொஞ்சம் தடவுங்க உடனே சரியாகிடும்...