For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு பைசா செலவில்லாமல் ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்க இதோ வழி இருக்குதே! எப்படி தெரியுமா?

|

இன்றைய சூழலில் ஏராளமான பிரச்சினைகள் நம்மை குறி வைத்து வருகின்றன. அவற்றில் சில நம் உயிருக்கே மிக மோசமான குறைபாடுகளை நமக்கு ஏற்படுத்துகின்றன. இது போன்ற நிலைகள் மனித இனத்தின் அடுத்த சங்கதியை உற்பத்தி செய்வதையே தடுக்கின்றன. இன்றைய தலைமுறையினர் மிகவும் அவதிப்படும் விஷயம் என்றால் அது இனவிரக்தி தான்.

ஆண்மை குறைவு, விந்தணு குறைபாடு, விந்து உற்பத்தி தடைபடுதல் போன்ற பல சிக்கல்களுக்குள் இவர்கள் சிக்கி தவிக்கின்றனர். இதை பல கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு வகையில் வியாபாரமாகவே மாற்றியும் உள்ளனர்.

ஆனால், ஒரு பைசா கூட செலவு இல்லாமல் நம்மால் இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இயலும். அதற்கு இந்த ஒரே ஒரு மூலிகை இருந்தால் போதும். இப்படிப்பட்ட மருத்துவ பயன் கொண்ட மூலிகை எது என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அற்புத மூலிகை

அற்புத மூலிகை

பலவித மூலிகை தன்மைகளை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் அற்புத மருந்து தான் இந்த அம்மான் பச்சரிசி. இது மற்ற மூலிகை செடிகளை காட்டிலும் தனித்துவம் கொண்டது.

சாதாரணமாகவே ஈரப்பதம் நிறைந்த இடங்களில் இந்த மூலிகை வளரும். வெளிப்புற நோய்களுக்கும், உட்புற நோய்களுக்கும் இது அருமருந்தாக செயல்படும்.

எதிர்ப்பு சக்தி மண்டலம்

எதிர்ப்பு சக்தி மண்டலம்

உடலானது நோய்களினால் தாக்கப்படாமல் இருந்தாலே எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை. உங்களின் எதிர்ப்பு சக்தியை அதிகாரித்தாலே இந்த வகை பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்.

இதற்கு தீர்வாக உள்ளது "அம்மான் பச்சரிசி " என்கிற இந்த அற்புத மூலிகை. இந்த மூலிகையை பயன்படுத்தி மிக விரைவில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடலாம்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

உடலுக்கு முக்கியம் உயிர் மூச்சு. இதுவே நின்றுவிட்டால் வெற்று உடலாக மாறி விடும். இந்த சுவாசத்தை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் செயல்பட அம்மான் பச்சரிசி மூலிகை உதவும்.

முக்கியமாக ஆஸ்துமா, தொண்டை வறட்சி, நாள்பட்ட இரும்பல், தொண்டை எரிச்சல் முதலிய பிரச்சினைகளை இது தீர்வுக்கு கொண்டு வரும்.

MOST READ: ஆயுளை அதிகரிக்க ஓலைச்சுவடியில் உள்ள குறிப்புகள் என்ன கூறுகிறது தெரியுமா?

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களில் பெரும் சிக்கல் இந்த மலச்சிக்கல் தான். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருந்தால் அதை மிக எளிதான முறையில் சரி செய்ய அம்மான் பச்சரிசி போதும்.

இதை துவையல் போன்றோ அல்லது கீரையாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால், உங்களை இனி எந்த சிக்கலும் அண்டாது நண்பர்களே.

விந்து உற்பத்தி

விந்து உற்பத்தி

விந்தணு குறைப்பாட்டால் பல ஆண்கள் இன்று அவதிப்படுகின்றனர். எவ்வளவோ இதற்காக மருந்துகள் வந்தாலும் இயற்கை மருந்துகளின் அளவிற்கு செயல்பட இயலாது. அந்த வகையில் அம்மான் பச்சரிசி ஆண்களின் விந்து உற்பத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இதை ஒரு சில விதிமுறையின் படி சாப்பிட்டு வந்தால் ஆண்மை பிரச்சினை நீங்கும். இதற்கு தேவையான பொருட்கள்...

அம்மான் பச்சரிசி (சிவப்பு)

பால்

தயாரிப்பு முறை

தயாரிப்பு முறை

சிவப்பு நிற இலைகளை கொண்ட அம்மான் பச்சரிசியை எடுத்து கொண்டு மிதமான வெயிலில் உலர்த்தி எடுத்து கொள்ள வேண்டும்.

அதன்பின் இதனை பொடி செய்து தினமும் 5 கிராம் அளவிற்கு பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி பெருகும். இனி ஆண்மை குறைபாடு பிரச்சினை இல்லாமல் ஆண்கள் நிம்மதியாக வாழலாம்.

பெண்களின் பிரச்சினை

பெண்களின் பிரச்சினை

ஆண்களை போலவே பெண்களுக்கும் சில அந்தரங்க பிரச்சினைகள் உண்டு. அந்த வரிசையில் முதன்மையானது வெள்ளைப்படுதல் தான். இதை தீர்வுக்கு கொண்டு வர அம்மான் பச்சரிசியே போதும். இதை இவ்வாறு தயாரித்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையானவை...

தயிர்

அம்மான் பச்சரிசி

தயாரிப்பு முறை

தயாரிப்பு முறை

அம்மான் பச்சரிசியை அரைத்து கொண்டு தயிரில் கலந்து கொள்ளவும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளை படுதல், வயிற்று புண் போன்றவை குணமாகி விடும். இதை பொடி போன்று செய்து வெந்நீரில் கலந்தும் குடித்து வரலாம்.

MOST READ: விஷ்ணு புராணத்தின் படி இதையெல்லாம் செய்தால் உங்களுக்கு இப்படிப்பட்ட கொடூர நோய்கள் ஏற்படுமாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Euphorbia Hirta

Health Benefits of Euphorbia Hirta
Story first published: Friday, February 15, 2019, 18:00 [IST]