Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
ஆண்களின் அந்தரங்க பிரச்சினைகளை தீர்க்கும் இந்த மூலிகையை பற்றி தெரியுமா.?
மூலிகை என்றாலே மலை காடுகளில் மட்டுமே கிடைக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், நம் வீட்டில் இருக்க கூடிய பலவகை உணவு பொருட்கள் மூலிகை தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. இருப்பினும் ஒரு சில அரிய வகை மூலிகைகள் மலை அல்லது காடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. ஏனெனில், இவை அந்த சூழலில் மட்டுமே வளர கூடிய தன்மை வாய்ந்தவையாக இருக்க கூடும்.

PC: Krzysztof Ziarnek, Kenraiz
பல வகையான மூலிகைகள் இந்த் பூமியில் உள்ளன. அவற்றில் நமக்கு தெரிந்தவை மிக குறைவு. இதில் நமக்கு தெரியாத வகையில் தான் இந்த மூலிகையும் சேரும். இந்த மூலிகை முக்கியமாக ஆண்களின் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் தீர்வை தருகிறதாம். இந்த புதுவித மூலிகை என்னனு தெரிஞ்சிக்கணுமா..? இந்த பதிவ படிச்சி தெரிஞ்சிக்கோங்க...

சுவைமிக்க மூலிகை..!
பொதுவாக மூலிகை என்றால் பலருக்கும் கசப்பு தன்மை தான் ஞாபகத்துக்கு வரும். கசப்பு என்றதும் தலை தெறிக்க ஓடுபவர்களும் உண்டு. ஆனால், இந்த மூலிகை அப்படிப்பட்டது இல்லை. நீங்கள் ஒரு முறை சாப்பிட்டதும் உங்களுக்கு இதன் ருசி நாக்கிலே ஒட்டி கொள்ளுமாம். அந்த அளவிற்கு இதன் கார சுவை இருக்குமாம்.

சித்த மருத்துவம்..!
சித்த மருத்துவத்தில் இந்த மூலிகை அதிக பிரசித்தி பெற்றதாம். இதனை வேறு சில மூலிகையோடு சேர்த்து சாப்பிடுவதால் இதன் பலன் இரட்டிப்பாகும். குறிப்பாக இந்த கலவை மூலிகை நரம்பு தளர்ச்சி, கப நோய்கள் போனற்வற்றை குணப்படுத்த கூடும் என சித்த மருத்துவம் கூறுகிறது.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
இந்த மூலிகை எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு பெரிதும் உதவும். உடலில் ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய்கள் இல்லாமல் நீண்ட காலம் நம்மை வாழ வைக்கும் என ஆய்வுகள் சொல்கிறது.

என்னென்ன பொருட்கள்..?
இதன் பலனை இரட்டிப்பாக அடைய மிளகு, கிராம்பு, செஞ்சந்தனம், குங்குமப்பூ, சுக்கு, சாதிக்காய், ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கும் மருந்தை சாப்பிடுவதால் கிடைத்து விடுமாம். மேலும், இந்த மூலிகையோடு சுக்கு சிற்றரத்தை, பேரீச்சை, தேன் மற்றும் அதிமதுரம் சேர்த்து தயாரிக்கும் மருந்து பொருளை சாப்பிடுவதால் உடல் நோய்கள் பறந்து போய் விடுமாம்.

ஆண்களின் பிரச்சினை...
இன்று பல ஆண்களுக்கு இருக்க கூடிய விந்தணு குறைபாட்டை குணப்படுத்த கூடிய தன்மை இந்த மூலிகைக்கு உள்ளது இதனை பற்றிய ஆய்வுகள் சொல்கிறது. மேலும், டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனின் அளவை அதிகரிக்கவும் இது பயன்படுகிறதாம்.

மன நோய்களுக்கு
இந்த மூலிகை மன சோர்வு, மூளையின் செயல்திறனை அதிகரித்தல், புத்தி கூர்மை போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகிறது. அத்துடன் பல் வலி, பல் சொத்தை ஆகிய பிரச்சினைகளுக்கும் இந்த மூலிகை அருமையான தீர்வை தரும்.

இப்படி பயன்படுத்துங்க..!
PC: Krzysztof Ziarnek, Kenraiz
இந்த மருந்தை நாம் வீட்டில் இருக்கும் சில மூலிகை தன்மை வாய்ந்த பொருட்களோடு சேர்த்து உண்டால் பலவித நன்மை கிட்டும். இதற்கு தேவையானவை..
அக்கரகாரம்
கடுக்காய்
மிளகு

தயாரிப்பு முறை...
இந்த மூலிகையை தயாரிக்க முதலில் மிளகு, அக்கரகாரம், கடுக்காய் ஆகியவற்றை சிறிது மிதமான சூட்டில் வறுத்து கொள்ள வேண்டும். பிறகு 1/4 டீஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிடலாம். இவை இரும்பல், வாந்தி, நரம்பு மண்டலம் வலுபெறவும் உதவும்.

இப்படியும் ஒரு மூலிகையா..?
இப்படிப்பட்ட பலவகையான நன்மைகளை கொண்ட மூலிகையின் பெயரும் சற்று வித்தியாசமானது தான். இதனை அக்கிராகாரம் அல்லது அக்கராகாரம் என்கிற பெயரில் அழைப்பார்கள். இதன் தன்மை எச்சில் ஊற வைக்கும் அளவிற்கு காரமான சுவையை கொண்டிருக்கும்.

பூக்கள் நிறைந்த மூலிகை..!
இந்த மூலிகையை கண்டுபிடிப்பது மிக எளிது. இதன் பூக்களை வைத்தே இதனை அடையாளம் கண்டு கொள்ளலாம். குறிப்பாக இதன் மஞ்சள் நிற பூக்கள் தான் இந்த மூலிகையை கண்டறிய உதவும். மேலும் இது பார்ப்பதற்கு சிறிய செடியாக தான் இருக்கும்.
எங்கு கிடைக்கும்..?
கப வகை நோய்களை எளிதாக குணப்படுத்த கூடிய இந்த அரிய மூலிகை சித்த மருந்துகள் விற்கும் கடைகளில் கிடைக்கும். அல்லது ஆயுர்வேத மூலிகைகளை விற்கும் இடங்களிலும் இது கிடைக்கும். இப்படிப்பட்ட பலவித அற்புத குணங்கள் கொண்ட மூலிகைகள் நம் நாட்டில் அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications