முகம், உடல் ஆரோக்கியம், முடி ஆகிய எல்லாத்துக்கும் பயன்பாடும் ஒரு காய்..!

"மருத்துவரின் காதலி" என்று அழைக்கப்படும் இந்த கடுக்காய்தான் அது. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும், அதிகப்படியான அழகு குறிப்புகளும் நிறைந்துள்ளது. ஆதிகாலம் முதலே இந்த கடுக்காயை எல்லாவித உடல் சார்ந்த ப

என்னது..! ஒரே காய் உடலின் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறதா..? உண்மைதாங்க..."மருத்துவரின் காதலி" என்று அழைக்கப்படும் இந்த கடுக்காய்தான் அது. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும், அதிகப்படியான அழகு குறிப்புகளும் நிறைந்துள்ளது. ஆதிகாலம் முதலே இந்த கடுக்காயை எல்லாவித உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

health

கடுக்காய் பவ்டரை தினமும் 1 டீஸ்பூன் எடுத்து கொண்டு அதனை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து இரவு சாப்பிட்டதற்கு பின்பு குடித்தால் உடலில் எந்தவித நோயும் வராது என்றே சித்தர்கள் எழுதி வைத்துள்ளனர். இப்படி எண்ணற்ற பயன்களை கொண்ட கடுக்காயின் எளிமையான டிப்ஸ்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 ஹேர் பேக்

#1 ஹேர் பேக்

தேவையானவை :-

- கடுக்காய் பவுடர்

- ஆம்லா பவுடர்

- கருவேப்பிலை பவுடர்

செய்முறை :-

1 டீஸ்பூன் கடுக்காய் பவுடர் ,2 டீஸ்பூன் ஆம்லா பவுடர், 1 டீஸ்பூன் கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு இந்த பேஸ்டை இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு அடுத்த நாள் காலையில் தலையின் ஒவ்வொரு அடுக்கிலும் தடவி விடவும். 1 மணி நேரம் இந்த ஹேர் பேக்கை தலையில் ஊற வைத்து பின்பு சிறிதளவு ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலச வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே உங்கள் முடியில் உள்ள பொடுகு, பேன்கள் என அனைத்தும் நீங்கும். மேலும் முடி உதிர்வதையும் தடுக்க இந்த கடுக்காய் உதவுகிறது.

#2 கடுக்காய் எண்ணெய்

#2 கடுக்காய் எண்ணெய்

தேவையானவை :-

- கடுக்காய்

- தேங்காய் எண்ணெய்

செய்முறை :-

கடுக்காயை உடைத்து விட்டு அதிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும். பின்னர் இந்த உடைத்தெடுத்த கடுக்காயை தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும். வேண்டுமென்றால் மிதமான சூட்டில் இவற்றை பிரௌன் கலர் வரும்வரை சூடு செய்யவும். அல்லது கடுக்காய் பவ்டரை தேங்காய் எண்ணெய்யில் கலந்து 3 நாட்கள் வெயிலில் வைத்து பிறகு தலை குளிப்பதற்கு முன்பு இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள். இது முடியின் வேரை உறுதிபடுத்தி முடி உதிர்வதை தடுக்க செய்யும். மேலும் மென்மையான முடியை பெறவும் வழி செய்யும்.

#3 இளநரை மறைய

#3 இளநரை மறைய

தேவையானவை :-

- கடுக்காய் பவுடர்

- ஆம்லா பவுடர்

-நல்லெண்ணெய்

- கருவேப்பிலை பவுடர்

செய்முறை :-

1 டீஸ்பூன் கடுக்காய், 2 டீஸ்பூன் ஆம்லா பவுடர், 1 டீஸ்பூன் கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அடுத்து 4 டீஸ்பூன் நல்லெண்ணெய்யை எடுத்து கொண்டு அதனை லேசாக சூடு செய்து இந்த மூன்று பவ்டரையும் அதனுள் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ்ட் தேய்த்து கொண்டு தலைக்கு குளித்தால் இளநரைகள் ஓடி போய்விடும். அதோடு சேர்த்து முடியும் கருகருவென வளர ஆரம்பித்து விடும்.

#4 உடல் எடை குறைய

#4 உடல் எடை குறைய

தேவையானவை :-

- கடுக்காய் பவுடர்

- தேன்

செய்முறை :-

கடுக்காய் பவ்டரை 1/4 டீஸ்பூன் எடுத்து கொண்டு அதனை தேனுடன் கலக்கி தினமும் சாப்பிட்டு வர உடல் எடை கச்சிதமாக இருக்கும். மேலும் 1 கிளாஸ் மிதமான சுடு தண்ணீரில் 1/4 டீஸ்பூன் கடுக்காய் பவ்டரை சேர்த்து நன்கு கலக்கி தினமும் குடித்து வந்தால் செரிமானம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமடையும். அத்துடன் மலசிக்கல் போன்ற உடல் கோளாறுகளையும் இது சீர்படுத்தும்.

#5 ஜீரண சக்தி அதிகரிக்க

#5 ஜீரண சக்தி அதிகரிக்க

தேவையானவை :-

- கடுக்காய்

- புளி

- மிளகாய்

- உளுத்தம் பருப்பு

- இஞ்சி

செய்முறை :-

கடுக்காய் தோல்களை எடுத்து கொண்டு, சிறிதளவு இஞ்சி, புளி, மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நெய்யில் வதக்கி எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து துவையல் போல செய்து சாப்பிட்டால் எந்தவித ஜீரண பிரச்சனைகளும் குணமடையும்.மேலும் இது உடலுக்கு அதிக பலத்தையும் தந்து மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

#6 கொழுப்பு கரைய

#6 கொழுப்பு கரைய

தேவையானவை :-

- கடுக்காய் பவுடர்

- தான்றிக்காய் பவுடர்

- ஆம்லா பவுடர்

- கொள்ளு

செய்முறை :-

1/2 டீஸ்பூன் கடுக்காய் பவுடர் , 1/2 டீஸ்பூன் தான்றிக்காய் பவுடர் , 1 டீஸ்பூன் ஆம்லா பவுடர் ஆகியவற்றை கொள்ளு ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு இந்த தண்ணீரை காலை,மாலை என இருவேளை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து நோயற்ற உடலை பெறலாம்.

#7 இருமல் குணமாக :-

#7 இருமல் குணமாக :-

தேவையானவை :-

- கடுக்காய் பவுடர்

- திப்பிலி

செய்முறை :-

1/2 டீஸ்பூன் கடுக்காய் பவ்டரை எடுத்து கொண்டு அதனை தேனில் கலந்து 1 நாளைக்கு 2 வேளை சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே இந்த இருமல், சளி போன்ற பிரச்சனைகள் குணமடையும். அல்லது இந்த 2 பவ்டரையும் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம்.

செய்ய கூடாதவை :-

செய்ய கூடாதவை :-

#கர்ப்பமாக உள்ளவர்கள் இந்த கடுக்காயை எடுத்து கொள்ள வேண்டாம்.

#கடுக்காயின் மேல் தோலை மட்டும் பயன்படுத்த வேண்டும். அதன் உள்ளே இருக்கும் கொட்டைகளை பயன்படுத்த கூடாது.

#கடுக்காய் பவ்டரை நீரில் சூடுபடுத்த கூடாது. வெதுவெதுப்பான நீரிலேயே அதனை மிக்ஸ் செய்து குடிக்கவும்.

#அதிக அளவில் கடுக்காயை பயன்படுத்த கூடாது. மேல குறிப்பிட்ட அளவே பயன்படுத்த வேண்டும்.

#சர்க்கரை நோயாளிகளும் இந்த கடுக்காயை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, July 20, 2018, 15:40 [IST]
Desktop Bottom Promotion