Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
மூக்கிரட்டையின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்
பழங்காலம் முதலே மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தி வந்த ஒரு மூலிகைதான் மூக்கிரட்டை. மூக்கிரட்டை வெள்ளை மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணத்தில் விளைகிறது. இதில் வெள்ளை நிற கீரைஏ அதிக சத்துக்கள் நிறைந்தத
நம் முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்விற்கு முக்கிய காரணம் அவர்கள் இயற்கையை சார்ந்து வாழ்ந்ததுதான். ஏனெனில் மூலிகைகளை அவர்கள் மருந்தாக மட்டும் பயணப்படுத்தாமல் உணவாகவும் பயன்படுத்திவந்தனர். அவ்வாறு அவர்கள் பழங்காலம் முதலே மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தி வந்த ஒரு மூலிகைதான் மூக்கிரட்டை.

நம்மில் பலருக்கும் இது என்னவென்றே தெரியாது என்பதுதான் உண்மை. நம் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டால் தெரியும் இதன் மகத்துவம். மூக்கிரட்டை வெள்ளை மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணத்தில் விளைகிறது. இதில் வெள்ளை நிற கீரைஏ அதிக சத்துக்கள் நிறைந்தது. இங்கே மூக்கரட்டையின் சிறப்புக்களையும், அதன் மருத்துவ குணங்களையும் பார்க்கலாம்.

சுவாசக்கோளாறுகள்
பழங்காலம் முதலே மூக்கிரட்டை சுவாசக்கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்துமாவை குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் விளைந்த மூக்கிரட்டையுடன் மிளகும் மற்றும் இஞ்சிச்சாறு கலந்து சாறாக குடிக்கும்போது சுவாசக்கோளாறு விரைவில் குணமடையும். மேலும் இது சுவாசமண்டலத்தை சுத்தப்படுத்துவதாக மருத்துவர்க;ள் கூறுகிறார்கள்.

மனஅழுத்தம்
மனஅழுத்தத்தை குறைக்க இது அற்புதமான வழி ஆகும். குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்வரை மனிதர்களின் எண்ணம் ஒருபோதும் விரிவடையாது. இதற்காக நடத்திய ஆய்வில் ஒரு எலியை சிறிய இடத்திற்குள் விட்டு தொடர்ந்து ஓடும்படி செய்தார்கள். சிறிய இடமென்பதால் எலி ஓடமுடியாமல் சோர்ந்து அதன் மனஅழுத்தம் அதிகரித்தது. பின்னர் இதன் தண்டுகளை கொடுத்து மீண்டும் சோதனை செய்தபோது அதன் மனஅழுத்தம் குறைந்திருந்தது. அதேபோலத்தான் மனிதர்களுக்கும் இது உதவும். இதனை தண்டை சாப்பிடுவது மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் கரிஸ்டோல் 7 இ குறைக்கிறது.

வீக்கம்
பொதுவாக வீக்கம் என்பது நமக்கு ஏற்படும் அலர்ஜிகளுக்கோ அல்லது காயங்களுக்கோ நமது நோயெதிர்ப்பு மண்டலம் ஆற்றும் எதிர்வினையாகும். ஆனால் நமது நீயெதிர்பு மண்டலம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கும்போது அது கடுமையான வீக்கம், கரோனரி இதயநோய், சர்க்கரைநோய், ஆஸ்த்மா போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடும். மூக்கிரட்டையில் வீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய செக்ரட்டரி போஸ்ப்பிலோபெஸ் என்னும் மூலக்கூறு உள்ளது மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கக்கூடியது.

கல்லீரல் பாதுகாப்பு
பழங்காலம் முதலே மூக்கிரட்டை கல்லீரல் தொடர்பான வலிகளை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு மஞ்சள் காமாலையை குணப்படுத்துவதில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் இரண்டிலுமே உள்ள ஹெபெப்ரோடெக்ட்டிவ் மூலக்கூறுகள் தீங்கை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் மூலப்பொருட்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. குறிப்பாக குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உங்கள் கல்லீரலை பாதுகாக்கும்.

கண் நோய்கள்
கண் தொடர்பான நோய்களை குணப்படுத்துவதற்கு மூக்கிரட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை இலைகளின் சாறை எடுத்து தேனுடன் கலந்து கண்ணில் சில துளிகள் விட்டால் கண்வலி உடனடியாக குணமடையும். இதன் தண்டுகள் கண் தொடர்பான தொற்றுநோய்களை குணப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி மாலைக்கண் நோயை குணப்படுத்துவதிலும் மூக்கிரட்டை முக்கியப்பங்கு வகிக்கிறது. கண் சம்பந்தப்பட்ட அலர்ஜிகள், வீக்கங்கள், ஒவ்வாமைகள் என அனைத்தையும் மூக்கிரட்டை குணப்படுத்தக்கூடியது.

வலிப்பு
நைஜீரியாவில் மூக்கிரட்டை வலிப்பு நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. ஆய்வுகளின் படி இதன் தண்டிலுள்ள லிரோடென்ரான்ட் என்னும் மூலப்பொருள் வலிப்பு நோய்க்கு எதிராக ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டாக்குகிறது. இதற்கு முக்கிய காரணம் இதிலுள்ள கால்சியம ஆகும். வலிப்பு என்பது மூளைக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக்கப்படுவதால் ஏற்படுவது. இந்த தொடர்பு சீராய் இருக்க அவசியமானது கால்சியமாகும். இந்த பணியை மூக்கிரட்டை சிறப்பாக செய்கிறது.

இதய பாதுகாப்பு
மூக்கிரட்டையில் போதுமான அளவு கார்டியோடானிக் உள்ளது. கார்டியோ ஹைபரதெரபி என்பது இதயத்தின் செயல்பாடுகள் குறைவதுடன் தொடர்புடையது.ஆக்ஸிடேடிவ் மன அழுத்தம் கார்டியாக் ஹைபர்டிராபி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூக்கிரட்டையில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் பீனால்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

சர்க்கரை நோய்
ஆயுர்வேத மருத்துவர்கள் சர்க்கரை நோயை குணப்படுத்த மூக்கிரட்டையித்தான் முதன்மையாக பயன்படுத்துகிறார்கள். ஆய்வுகளின் படி இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது. இது உங்கள் உடலில் இன்சுலின் சுரப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய்க்காக சாப்பிடும் மருந்துகளை நிறுத்திவிடக்கூடாது.



Click it and Unblock the Notifications











