Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க... இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும்
கோதுமைப் புல்லினுடைய அருமையான பலன்கள் பற்றி இங்கே விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளோம். இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உலக அளவில் இந்தியர்களின் பட்டியல் தான் முன்னணியில் இருக்கிறது. இது நமக்குப் பெருமை தரக்கூடிய வியமெல்லாம் ஒன்றும் கிடையாது. இது நம்மை அச்சுறுத்துகின்ற ஒரு செய்தி. இதில் நாம் சொல்ல வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தியும் இருக்கிறது.

வெளிநாடுகளில் உணவுக் கட்டுப்பாடும் மருத்துவ முறைகளும் மிகக் கராராகப் பின்பற்றப்படுகின்றன. நம்முடைய முன்னோர்கள் சில உணவுகளின் வழியாகவே சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். நாமோ நாகரீகம் என்ற பெயரில் அதைத் தவறவிட்டு விட்டோம். அதில் மிக முக்கியமான ஒன்று தான் இந்த கோதுமைப்புல்.

கோதுமைப்புல்
சர்க்கரை வியாதி உள்ளவர்களும் சரி, சர்க்கரை நோய் வந்துவிடுமோ என்று பயப்படுகிறவர்களுக்கும் மிக அற்புதமான மருந்தாக, இந்த கோதுமைப்புல். அறுகம்புல் உடலுக்கு எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் எல்லோருக்குமே தெரியுமம். அதேபோன்று தான் கோதுமைப்புல்லிலும் எக்கச்சக்கமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இரண்டும் பார்ப்பதற்கு ஓரளவுக்கு ஒன்று போலவே இருக்கும்.

எங்கு கிடைக்கும்?
இப்போதெல்லாம் ஜூஸ் கடைகளில் வீட் கிராஸ் ஜூஸ் என்று கிடைக்கிறது. ஃபிரஷ்ஷாக நமக்குப் போட்டுத் தருகிறார்கள். வெறுமனு இதை குடிக்கப் பிடிக்காதவர்கள் வேறு சில பழச்சாறுகளுடன் சேர்த்து இந்த கோதுமைப்புல் ஜூஸை குடிக்கிறார்கள். அதைவிடவும் இந்த கோதுமைப்புல்லை நம்முடைய வீட்டில் வளர்ப்பது மிகமிக எளிது. ஒரு சின்ன தொட்டியில் வசில கோதுமை விதைகளைப் போட்டு, நம்முடைய அடுப்பங்கறையிலேயே வைத்து வளர்க்க முடியும்.மிக எளிதாக ஓரிரு நாட்களில் வளர்ந்துவிடும். நான்கு இன்ச் வரையிலும் வளர்ந்தாலே போதும். அதைப் பறித்துப் பயன்படுத்தலாம்.

சத்துக்கள்
இந்த கோதுமைப் புல் செடியில் வேர் முதல் முழுமையும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
கோதுமைப் புல்லில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி1, பி2, பி1, 2, 3, 4, 5, 6, 8, 12 சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.

நன்மைகள் ஹீமோகுளோபின்
உடலில் உள்ள ரத்தத்தை சுத்தம் செய்கின்ற தன்மை கொண்டது. இதன்மூலம் உடலின் ரத்த சிகப்பணுக்களை அதிகரிக்கும். அதாவது ஹீமோகுளுாபினை கூட்டும் தன்மை கொண்டது இந்த கோதுமைப்புல்.

நச்சுக்கள்
நீண்ட காலமாக ஏதாவது பிரச்சினைக்காக தொடர்நு்து மருந்து சாப்பிடுகின்றவர்களுக்கு கல்லீரல் மற்றும் ரத்தத்தில் சில நச்சுத் தன்மைகள் இருக்கும். அத்தகைய நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் ஆற்றல் இந்த கோதுமைப் புல் சாறுக்கு உண்டு.

மலச்சிக்கல்
பெருங்குடலைச் சுத்தம் செய்யும். இதனால் ஜீரண சக்தி துரிதப்படுத்தப்பட்டு, மலச்சிக்கலை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

ரத்த அழுத்தம்
கோதுமைப் புல் சாறு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கச் செய்யும். இதை உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் தொடர்ந்து தினமும் கோதுமைப்புல் சாறு ஒரு டம்ளர் அளவுக்குக் குடித்து வரலாம்.

முகப்பருக்கள்
சருமப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் அதிக ஆற்றல் கொண்டது இந்த கோதுமைப்புல். முகப்பரு மற்றும் உடலில் இருக்கின்ற கரும்புள்ளிகள் மற்றும் வடுக்கள் மறைவதற்குப் பெரிதும் உதவுகிறது. இது உடலுக்குள் இருக்கும் ஆக்சிஸனின் அளவைச் சமன்படுத்தும்.

ரத்த சர்க்கரை
நம்முடைய உடலில் ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகின்ற உடல் சோர்வினால் ஏற்படும் பாதிப்புகள், பாதத்தில் உண்டாகின்ற எரிச்சல், உடல் சதைகளுக்குள் உண்டாகும் குத்தல் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

இளமை
இந்த கோதுமைப்புல் சாறினை தினமும் குடித்து வந்தால் ஐம்பது ஆண்டுகள் வரையிலும் நரைமுடி என்பதே உங்களை எட்டிப் பார்க்காது. என்றுமே இளமையாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் கோதுமைப்புல் சாறு அல்லது கோதுமைப் பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

கொழுப்பு
உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதைத் தடுக்கும். உங்களுடைய உடல் செரிமாணத்தைத் துரிதப்படுத்தும். உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கும்.

சிறுநீரகக் கோளாறுகள்
சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். சிறுநீரகப் பாதையில் உண்டாகின்ற அனைத்துவிதமான தொற்றுக்கள், விரை வீக்கங்கள், சிறுநீரகக் கற்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பல பிரச்சினைகளை இந்த கோதுமைப்புல் சாறு தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

நுரையீரல்
நுரையீரல் சம்பந்தப்பட்ட தொற்றுக்கள், சுவாச மண்டலங்களைத் தீர்க்கும் ஆறு்றல் கொண்டது. நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்கள், சளி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றில் இருந்து காப்பாற்றும் ஆற்றல் கொண்டது.

புற்றுநோய்
சருமத்தில் உண்டாகும் வெண் புள்ளிகள் சில சமயங்களில் புற்றுநோய் உண்டாகக் காரணமாக நாம் அறிந்திருப்போம். வெண்புள்ளி, தேமல், சொரியாஸிஸ் போன்ற சரும வியாதிகள் குணமடையும். இந்த பொடியை தினமும் குடித்து வந்தால், அது கேன்சர் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications