For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா?...

ஆயுர்வேதம் என்பது எந்த பக்க விளைவுகளும் இல்லாதது என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அத்தகைய ஆயுர்வேதத்தில் எல்லா மருந்துகளிலுமே நம்முடைய வீட்டிலேயே உள்ள சில அடிப்படை மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ம

|

ஆயுர்வேதம் என்பது மருத்துவம் மட்டும் அல்ல. அது பல பேரின் வாழ்க்கையாக மாறியுள்ளது. இயற்கையோடு இணைந்த ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆயுர்வேத மருத்துவம் ஒரு சிறந்த தீர்வு ஆகும்.

health

ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுவது இயற்கையாகவே கிடைக்கும் மூலிகை பொருட்கள் மற்றும் மருந்துகள் தான். இந்த மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்தும் போது இது நோய்களை விரைவில் குணப்படுத்தி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள்

மஞ்சள்

பல நூற்றாண்டுகளாக மஞ்சள் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு காரணம் இதிலுள்ள கிருமிநாசினி மற்றும் நோய்களுக்கு எதிராக போராடும் பண்புகள் தான். ஜலதோஷம் மற்றும் காய்ச்சலால் கஷ்டப்படும் போது ஒரு டம்ளர் சூடான பாலில், ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது நீர் கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வந்த பின் இதை தோலில் தடவி வர ரேசஸ் மற்றும் தோல் அலர்ஜிகள் சரியாகும்.

வேம்பு

வேம்பு

வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக அது பல விதமான அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான மருந்துகளில் பயன்படுகிறது. இதிலுள்ள ஆன்டி செப்டிக், பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் மற்றும் தோல் வீக்கத்திற்கு எதிரான பொருட்கள் இந்த வேம்பை என்சைமா மற்றும் முகப்பரு பிரச்சினைக்கு இதை சிறந்த மருத்தாக மாற்றுகிறது. வேப்பிலை மற்றும் நீர் சேர்ந்த பேஸ்ட் தீக்காயங்களையும், தோல் வீக்கங்களையும் இரண்டு நாளில் குணப்படுத்தி விடும்.

சீரகம்

சீரகம்

நமது சமையலில் தவிர்க்க முடியாத சீரகத்தில் ஆன்டி பேஸ்மோடிக், வலிப்பு நிவாரணிகள், மற்றும் வாயுத் தொல்லையை சரிசெய்யும் மூலப்பொருள்கள் ஏராளமாக உள்ளன. நீரை கொதிக்க வைத்து பின்னா் அதில் சீரகம் கலந்து குடித்து வர அசிடிட்டி, வாயு பிரச்சினை, செரிமான பிரச்சினை மற்றும் வயிற்றுப் வலி போன்ற பிரச்சினைகள் விரைவில் சரியாகும்.

துளசி

துளசி

பல பேரால் புனிதமாக கருதப்படும் துளசியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. பாக்டீரியா, பூஞ்சை, நுண்ணுயிர் மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்க்கும் பண்புகள் துளசியில் அளவுக்கு அதிகமாக உள்ளன. அதனால் இது தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம், டயாபட்டிஸ், மலேரியா மற்றும் படர் தாமரை போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.

அமலக்கி

அமலக்கி

அம்லா அல்லது நெல்லிக்காய் என அழைக்கப்படும் இந்த அமலக்கியில், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் டயூரிக் பண்புகள் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. இந்த இளம் பச்சை பழத்தை அதிகமாக சாப்பிட்டு வர மலச்சிக்கல், அல்சர், ஹெப்பட்டிஸ், நீரிழிவு மற்றும் அனிமியா சரியாகும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள உடலில் இரத்த ஓட்டம் அதிகமாகும் மற்றும் செரிமான பிரச்சினைகள் சரியாகும். இஞ்சி எண்ணெய் தசை பிடிப்புகளை சரியாக்கவும் மற்றும் மன புத்துணர்ச்சிக்கும் பயன்படுகிறது.

நெய்

நெய்

ஆயுர்வேத சிகிச்சையில், நாம் எடுத்து கொள்ளும் மருந்துகள் துரிதமாக வேலை செய்ய உதவும் தூண்டியாக நெய் பயன்படுகிறது. ஒரு டம்ளர் சூடான பாலில் சிறிதளவு நெய், கருவாப்பட்டை மற்றும் ஏலக்காய் கலந்து குடித்து வர தூக்கமின்மை பிரச்சினை தூர ஓடிவிடும்.

உங்களுடைய நோய் எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் ஆன்லைனில் ஆயுர்வேத மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது சிறந்தது. இதற்கு 'லைப்ரேட்' வெப்சைட் உதவும். நம்முடைய சந்தேகங்களை மருத்துவரிடம தீர்ப்பதும், மருத்துவரின் அப்பாயின்மென்ட் கிடைப்பதும் சுலபமல்ல. ஆனால் லைப்ரேட் வெப்சைட் உதவியுடன் சிறந்த ஆயுர்வேத மருத்துவரை சில நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Common Ingredients Used in Ayurvedic Remedies

Ayurveda recommends a number of herbs for preventing cancer and there is a growing body of scientific studies that backs this ancient knowledge.
Story first published: Wednesday, June 20, 2018, 9:46 [IST]
Desktop Bottom Promotion