For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீரகத்தை எப்படி உபயோகித்தால் உடல் உபாதைகள் தீரும்!! உங்களுக்காக சில குறிப்புகள்!!

உடல் உபாதைகளை போக்கும் சீரகத்தை உபயோகிப்பது எப்படி என இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

|

சீரகம் என்ற பேரிற்கேற்ப ஜீரண மடலத்தின் ஆரோக்கியத்திற்கு சீரகம் பெரிதும் பலன் தருகிறது. செரிமானத்திற்கும் , எனசைம் சுரப்பிற்கும் உதவுகிறது. இன்றும் உடலில் உண்டாகும் சிறி சிறுபிரச்சனைகளுக்கு சமையல்றை பொருட்களைத்தான் கிராமத்தில் உபயோகிக்கிறார்கள்.

How to use jeera to cure common health issue

தொட்டதெற்கெல்லாம் மாத்திரை போடும் பழக்கம் அங்கில்லை. ஆகவேதான் இயற்கையாக தன்னைத்தானே உடல் சரிப்படுத்திக் கொள்கிறது. அவ்வாறு உடல் உபாதைகளை குணப்படுத்த சீரகத்தை எபப்டி கையாளலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலை சுற்றல் :

தலை சுற்றல் :

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

மன நோய் :

மன நோய் :

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

கல்லீரல் கோளாறு :

கல்லீரல் கோளாறு :

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

 வயிறு மந்தம் :

வயிறு மந்தம் :

மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

வாயுத் தொல்லை :

வாயுத் தொல்லை :

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

 உடல் உறுப்புகள் இயங்க

உடல் உறுப்புகள் இயங்க

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

கண் எரிச்சல் :

கண் எரிச்சல் :

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to use jeera to cure common health issue

Uses of jeera to cure common health issues
Story first published: Thursday, April 13, 2017, 17:02 [IST]
Desktop Bottom Promotion