ஆவாரம் பூவிற்குள் ஒளிந்திருக்கும் ஆயுளை கூட்டும் ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

நமது நாட்டில் பலவிதமான மூலிகைகள் பயிராகின்றன. இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக விலைக்கும் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் தான் நமது வீட்டின் அருகிலேயே இருக்கும் மூலிகை கூட உபயோகப்படுத்தாமல் இருக்கிறோம்.

ஆரோக்கியமாக வாழ நீங்கள் காடுகளில் உள்ள மூலிகைகளை தேடி போய் பெற வேண்டும் என்பதில்லை. நமது கண் அருகே இருக்கும் ஆவாரம் பூ செடியே போதுமானது.

Health Benefits of tanner cassia

இன்று உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சக்கரை நோய்க்கும் ஆவராம் பூ மருந்தாக உள்ளது. இந்த பகுதியில் ஆவாரம் பூவின் மருத்துவ பயன்களை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஆவாரம் பூ

1. ஆவாரம் பூ

ஆவாரம் பூ கடுமையான வறட்சியில் கூட வளர கூடிய ஒரு மருத்துவ தாவரம். இதன் இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்தும் மருத்துவ குணம் கொண்டது. "ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ" என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்த அளவுக்கு ஆவாரம் பூ உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவ குணங்களை கொண்டது.

2. ஆண்டி ஆக்ஸிடண்டுகள்

2. ஆண்டி ஆக்ஸிடண்டுகள்

ஆவாரம் பூவில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அடங்கியுள்ளன. டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளாவனாய்டுகள், சபோன்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன

3. மலச்சிக்கல்

3. மலச்சிக்கல்

மலச்சிக்கல் பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. தினமும் இரண்டு முறை மலம் வெளியேறினாலே உடலில் பல நோய்கள் அண்டாது. உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் ஆவாரம் பூ தேனீரை பருகுங்கள்.

4. தொற்றுக்களுக்கு எதிரி

4. தொற்றுக்களுக்கு எதிரி

புதிய ஆவாரம் பூக்கள் சருமத்தில் ஏற்படும் பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுக்களுக்கு எதிரியாக விளங்குகிறது. இதனை சருமத்தின் மீது தடவலாம் அல்லது தேநீராகவும் பருகலாம்.

5. சிறுநீரக பாதை தொற்றுக்கள்

5. சிறுநீரக பாதை தொற்றுக்கள்

ஆவாரம் பூ தேநீரை பருகுவதால் சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்கள் நீங்கும். இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இரத்தமும் பெருகும்.

6. டைப்பாய்டு மற்றும் காலரா

6. டைப்பாய்டு மற்றும் காலரா

அதீத சக்திகள் கொண்ட ஆவாரம் பூ தேநீரை நீங்கள் தொடர்ந்து பருகுவதால், காலரா மற்றும் டைப்பாய்டு போன்ற நோய்களும், காய்ச்சல்களும் கூட குணமாகும்.

7. சக்கரை நோய்

7. சக்கரை நோய்

சக்கரை நோய்க்கு பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆவாரம் பூ பட்டை மிக சிறந்த பலனை தரும். இந்த ஆவாரம் பட்டை நீரானது சக்கரை நோய் மட்டுமில்லாமல் மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவற்றையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

8. செய்முறை:

8. செய்முறை:

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு அரை லிட்டர் நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினமும் இரண்டு முறை 1.5 அவுன்ஸ் வீதம் குடித்துவர சக்கரை நோய், மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும்.

9. தங்கமான நிறம்

9. தங்கமான நிறம்

ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் இரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும்.

10. ஆவாரம் பூ தேநீர்

10. ஆவாரம் பூ தேநீர்

காய வைத்த ஆவாரம் பூ அல்லது ஆவாரம் பூ பொடியை நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால், உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

11. கழிவுகளை வெளியேற்றும்

11. கழிவுகளை வெளியேற்றும்

ஆவாரம் பூ தேநீரை தொடர்ந்து பருகுவதால், உடலில் உள்ள நச்சுகள் வியர்வை மூலம் வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி குடற்ப்புண், வயிற்று புண் ஆகியவை குணமாகும்.

12. பெண்களுக்கு உதவும்

12. பெண்களுக்கு உதவும்

பெண்கள் இந்த ஆவாரம் பூ தேநீரை அருந்துவதால், உடல் வசிகரமாவதுடன், மாதவிடாய் பிரச்சனை, அதிக உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் ஆகிய பிரச்சனைகள் அறவே நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of tanner cassia

Health Benefits of tanner cassia
Please Wait while comments are loading...
Subscribe Newsletter