For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புளிய மரங்கள் சாலை ஓரத்தில் வளர்வதன் பிண்ணனி தெரியுமா உங்களுக்கு?

புளியம் பழம் , இலைகள், கொட்டை என எல்லாமே பலவித நன்மைகளை நமக்கு அளிக்கக் கூடியது. அதன் மிக முக்கிய மருத்துவ நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Gnaana
|

பண்டைய காலங்களில், இன்று போல நிமிடத்திற்கொரு பேருந்து வசதிகள் இல்லை, அருகில் இருக்கும் ஊருக்கு செல்வதனாலும் சரி, தொலைதூர ஊர்களுக்கு செல்வதானாலும் பெரும்பான்மை மக்கள் எல்லோரும் கால்நடையாகத்தான் செல்வார்கள், அந்த சமயங்களில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்த களைப்பு நீங்கி, சற்று ஓய்வெடுத்து செல்ல, அவர்களுக்கெல்லாம் இக்கால சாலையோர சிறு மோட்டல்கள் போல அக்காலத்தில் அமைந்தவைதான், நிழல் தரும் புளிய மரங்கள். பகலில் புளிய மரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் காற்று களைப்படைந்தவர்களை, புத்துணர்வூட்டி, நடையைத் தொய்வின்றித் தொடர வைக்கும்.

அக்காலங்களில், ஆண்மீகக் கருத்துகளை சொல்லும்போது, உலக விஷயங்களில், "புளியம் பழமும் ஓடும் போல இருங்கள்!" என்று குறிப்பிடுவார்கள், நன்கு பழுத்த புளியம் பழத்தின் சதை, அதன் ஓட்டில் ஒட்டாது விலகியே இருக்கும், அதுபோல, மனிதர்கள் உலகில் மக்களோடு கலந்து வாழ்ந்தாலும், உலக விசயங்களில் பற்றுக்களை விலக்கி வாழ்ந்து, நற்கதி அடையவேண்டும் என்பதே, இந்த சொலவடையின் பொருள்.

பாதசாரிகளுக்கு உதவும் வண்ணம் அக்கால ஆட்சியாளர்கள், சாலையோரங்களில் எல்லாம் நிழல் தரும் புளிய மரங்களை நட்டு வளர்த்தனர். இந்த காலத்தில் அதுபோல யாரும் நடப்பது இல்லையாகையால், வாகனங்களில் செல்வோர் தாக சாந்தி செய்ய, சாலையோரங்களில், தண்ணீர் கடைகளை (!?) திறந்து வைத்து, குடிமக்கள் திருப்தியடைய வழி வகைகள் செய்திருக்கின்றனர்.

புளிய மரம், மனிதருக்கு நிழல்கள் மட்டும் தருவதில்லை, தமிழர் உணவில் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும் ஒரு முக்கிய பொருளாகவும் திகழ்கின்றன.

எண்பது அடிகள் வரை உயர்ந்து வளரும் புளிய மரங்கள், நூறாண்டுகள் வரை வாழும் தன்மை மிக்கவை, செடியாக நட்டு வளர்ப்பதன் மூலம் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளில், காய்க்கத் தொடங்கிவிடும், வெப்ப மண்டல மரமான புளியமரத்திற்கு ஓரளவு வளர்ந்தபின் தண்ணீர் தேவையில்லை, வேறு எந்த பூச்சிகள் தொல்லையுமில்லை ஆயினும், குளிர் பிரதேசத்தில் மட்டும் இவை வளராது.

புளிய மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், பழத்தின் கொட்டைகள், பட்டைகள் அதன் பிசின்கள் என அனைத்தும் பலன் தரக்கூடியவை. அதன் மரம் உறுதிமிக்க மரச்சாமான்கள் செய்ய பயனாகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health benefits of tamarind leaves , fruits, and seeds

Health benefits of tamarind leaves , fruits, and seeds
Story first published: Sunday, October 15, 2017, 21:55 [IST]
Desktop Bottom Promotion