Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மூலிகைகள்!
இந்த மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள், இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பெருமளவு உதவுகின்றன.
குறைந்த எண்ணிக்கையிளான பிளேட்லெட் (இரத்த தட்டு) களின் எண்ணிக்கை ஒருவரின் ஆரோக்கியக் குறைபாடைக் குறிக்கின்றது. சரியான அளவை விட கீழே குறையும் பிளேட்லெட்களின் எண்ணிக்கை ஒருவர் நோய்வாய்பட்டிருக்கின்றார் என்பதைக் குறிக்கின்றது.

மருத்துவ உலகம் இந்த நோயை த்றோம்போசைடோபீனியா என அழைக்கின்றது. ஒருவருக்கு சாதாரண சூழ்நிலையில், ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் சுமார் 1,50,000 முதல் 4,50,000 க்கு இடையேயான எண்ணிக்கையில் பிளேட்லெட்கள் உள்ளன. அதே நபர் நோய் வாய்ப்பட்டால் இந்த எண்ணிக்கை சுமார் 1,50,000 க்கு கீழ் சென்று விடும்.
ஒரு நபரின் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்களின் எண்ணிக்கையை ஒரு ஆய்வக பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.
பிளேட்லெட்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது?
எலும்பு மஜ்ஜையில் பிளேட்லெட்களின் உற்பத்தி குறையும் பொழுது அல்லது இரத்த ஓட்டத்தில் பிளேட்லெட்கள் அழிக்கப்படும் பொழுது, அல்லது கல்லீரல் அல்லது மண்ணீரல் போன்றவற்றில் ப்ளேட்லெட்கள் அழிக்கப்படும் பொழுது, ரத்தத்தில் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை குறைகின்றது. ஒரு சில புற்று நோய்கள், சிறுநீரக பிரச்சினைகள், ஆட்டோ இம்யூன் குறைபாடுகள், மற்றும் மது அருந்து பழக்கம் போன்றவற்றாலும் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை குறைகின்றது.
ஒருவரின் மூக்கு, பல் ஈறுகள் முதலியவற்றில் இருந்து அடிக்கடி இரத்தம் வருவது அல்லது ஒருவருக்கு எளிதில் காயம்பட்டுவிடுவது போன்றவை ஒருவருக்கு ப்ளேட்லெட்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை குறிக்கும் அறிகுறிகளாகும்.
ஒருவரின் குறைந்த அளவிளான ப்ளேட்லெட்களை குணப்படுத்த மருந்துகள், மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் ப்ளேட்லெட்டுகளை ரத்த நாளத்தில் ஏற்றுவது போன்ற சில சிகிச்சைகள் உள்ளன. மருந்து மற்றும் சிகிச்சைகள் தவிர ஒருவரின் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சில மூலிகைகள் உள்ளன. எனவே ஒருவர் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சிகிச்சையை தொடங்கும் முன்னர் இந்த மூலிகைகளைப் பயன்படுத்திப் பார்ப்பது மிகவும் நல்லது.
ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சுமார் 15 முறைகளை நாங்கள் இங்கு பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் பயன்படுத்தி உங்களின் குறைந்த அளவிலான ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இயலும்.
1. பப்பாளி இலைச் சாறு: த்றோம்போசைடோபீனியா மற்றும் டெங்குவை குணப்படுத்தும் ஒரு சரியான சிகிச்சை,பப்பாளி இலைச் சாறு ஆகும். இது ஆயுர்வேத சிகிச்சை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பப்பாளி இலைச் சாறு ரத்தத்தில் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. காரிகா பப்பாளி இலைச் சாறு கணிசமாக இரத்த ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பப்பாளி இலைச் சாற்றுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்வது நல்லது.
2. வீட் க்ராஸ்: பச்சையம், மெக்னீசியம், துத்தநாகம், பீட்டா கரோட்டின் மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் நிறைந்த வீட் க்ராஸ் இரத்தசோகை வியாதிகளை குணமாக்கும் ஒரு சிறந்த மூலிகை ஆகும்.
3. அலோ வேரா: சுமார் 200 க்கும் மேற்பட்ட சத்துக்கள் உள்ள இந்த மூலிகை ஒருவரின் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
4. அமிழ்தவள்ளி: குறைந்த ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மற்றொரு சிறந்த மூலிகை இது. இந்த மூலிகையில் உள்ள பாக்டீரியா, கீல்வாத மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. அமிழ்தவள்ளி தாவரத்தின் தண்டு சாறு அருந்துவது மிகவும் நல்லது.
5. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தேன் உடன் கலந்து எடுத்துக் கொள்ளது ஒருவரின் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இது ஒருவரின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஒரு அதிசய உணவாகும்.
6. ஆம்லா: ஆம்லா அல்லது நெல்லிக்காய் ஒருவரின் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி நெல்லிக் சாறு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
7. அஸ்வகந்தா வேர்: இரத்த அணுக்கள் மற்றும் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் இது உண்மையில் ஒரு மந்திர மூலிகை ஆகும்.
8. ரோஹித்ஹரிஷ்தா சாறு: ஆயுர்வேட மருந்தான இது குறைந்த ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது.
9. டாவா டாவா தேநீர்: இந்த மூலிகை தேநீரை ஒரு நாளைக்கு சுமார் 2 முதல் 3 முறை எடுத்துகொள்வது உங்களின் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் .
10. கோட்டு கோலா: ஒரு பண்டைய அருமருந்தான இது பிளேட்டுலெட்டுகளின் உற்பத்தியை அதிகரிக்கின்றது.
இவை தவிர, நீங்கள் சிறந்த முடிவுகளுக்காக ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்:
11. வைட்டமின் கே: வைட்டமின் கே நிறைந்த அந்த உணவுகள் இரத்த உறைதல் மற்றும் வீக்கம் குறைவதற்கு உதவியாக இருக்கும், மேலும் இது ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் கே நிறைந்த உணவுப் பொருட்கள்:
கீரை மற்றும் காலே போன்ற பச்சைக் காய்கறிகள்
சாலட்
ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகள்
சோயா
முட்டைகள்
12. வைட்டமின் பி9: இந்த வைட்டமின் ( ஃபோலேட்) செல்கள் பிரிவு நிகழ்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பிளேட்டுலெட்டுகளும் ஒரு வகை செல்கள் தான். எனவே இது ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த வைட்டமின் கீரை, முழு தானியம், மற்றும் ஆரஞ்சு, போன்றவற்றில் காணப்படுகிறது
13. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்: வீக்கத்தை குறைக்க உதவும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீன், அக்ரூட் பருப்புகள், முட்டை, ஆளிவிதை முதலியனவற்றில் உள்ளன. இந்த உணவுகள் ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன.
14. பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள்: பெர்ரி, சிவப்பு கொய்யா, கரும் பச்சை காய்கறிகள், பூசணி, ஸ்குவாஷ், பீட்ரூட், முதலியன ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன.
15. வைட்டமின் சி: வைட்டமின் சி நுகர்வு ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை அதிகரிக்க அவசியம். எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு, ப்ராக்கோலி, முதலியனவற்றில் வைட்டமில் சி அதிக அளவில் உள்ளன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












