Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
தோல்நோய்களை நீக்கும் பசு கோமியம்!

கோமியத்தில் உள்ள சத்துக்கள்
பசுவின் சிறுநீரில் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி, டி, இ போன்றவை அடங்கியுள்ளன. தாது உப்புக்களும், லாக்டோஸ், என்ஸைம் போன்றவை காணப்படுகின்றன. மேலும் நைட்ரஜன், சல்ஃபர், பாஸ்பேட், சோடியம், மாங்கனீஸ், சிலிகான், குளோரின், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. கார்பாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஆகியவையும் இதில் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவுக்கு மருந்து
பெங்களூருவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பசு கோமியத்தில் நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் உள்ள எலிகளுக்கு வாய்மூலம் உட்கொள்ளும் வகையில் பசு கோமியம் 25 மிலி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவை விரைவில் நோயில் இருந்து விடுபடுவது தெரியவந்தது. ஆயுர்வேத மருத்துவ முறையில் ஏற்கனவே கோமியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தோல் நோய், புற்றுநோய், இதய நோய், பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு கோமியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் எடுத்துக் கொள்வோர், அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு ஆளாகின்றனர். பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாக்கவும், கோமியம் உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து, கோமியத்தில் இருந்து பல்வேறு மருந்துகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்று தோஷங்களை நீக்கும்
பசுவின் கோமியமானது மூன்றுவிதமான தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை நீக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களின் உடலில் இந்த மூன்று குணங்களும் அதிகரிக்காமல் சமநிலையில் வைக்கிறது. பசுவின் சிறுநீரை உபயோகிப்பதன் மூலம் இருமல், மைக்ரேன் தலைவலி, தைராய்டு, போன்றவை குணமடைவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தோல்நோய்களை குணமாக்கும்
தோல் நோய்களான எக்ஸைமா, அரிப்பு, படை, சொரி போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுவின் கோமியத்தை பூசுவதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவைகளுக்கும் கூட இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
நினைவாற்றல் அதிகரிக்கும்
பசுவின் கோமியமானது உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. டென்சனை நீக்குகிறது. நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் இதயம், மூளையின் சக்தியை வலுவாக்குகிறது. அதேபோல் வயதாவதை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications