For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஞ்சள்காமாலை போக்கும் கீழாநெல்லி

By Sutha
|

மஞ்சள்காமாலை நோய்க்கு அருமருந்தாக விளங்கும் கீழாநெல்லி இன்றும் கிராமங்களில் மூலிகை மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கீழ்காய் நெல்லி என்ற பெயரே பேச்சுவழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிடப்பட்டது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்:

கீழ்காய்நெல்லியில் பைல் நிரூலின், நார் செக்குரினின், நிர் பைலின், தேலிக் ஆஸிட், எல்லாஜிக் ஆசிட், ஹேலிக் ஆஸிட் போன்ற 50-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன

மருத்துவகுணம்:

கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.

மஞ்சள் காமாலை, மட்டுமல்லாது குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

மஞ்சள்காமலை நோய்:

கீழாநெல்லி சமூலம் - கரிசலாங்கண்ணி, தும்பை - சீரகம் - பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.

ரத்தசோகை:

கீழா நெல்லியும் - கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும். கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.

தோல்நோய்கள் தீரும்:

கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும். கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும்.

கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

English summary

Medicinal uses of Phyllanthus fraternus | காமாலை போக்கும் கீழாநெல்லி

Aqueous extracts of Phyllanthus fraternus (used in Ayurveda and Siddha systems of medicine for the treatment of jaundice) possesses anti-hepatitis virus DNA polymerase activity. As the availability of P. fraternus is restricted by geographical distribution and seasonal growth, the present investigations were aimed at standardizing procedures for micropropagation of P. fraternus using shoot tip and nodal cultures to make it available all-year-round.
Story first published: Thursday, May 12, 2011, 12:57 [IST]
Desktop Bottom Promotion