Latest Updates
-
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க
மருத்துவரின் காதலி கடுக்காய்!
நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது புராணங்களிலும் இம்மரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும் போது ஒரு துளி அமிர்தம் சிந்தியது. அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணங்கள் தெரிவிக்கின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
கடுக்காயில் டேனின், ஆன்த்ரோ குயினான்கள், செபுலிக் அமிலம், ரெசின் மற்றும் எண்ணெய் ஆகியவை காணப்படுகின்றன. டேனின் தோல் பதனிடும் தொழிலில் பயன்படுகிறது. துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச் சுத்தம் செய்ய டேனின் உதவுகிறது.
திரிபாலா கூட்டு மருந்து:
எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாலேயே கடுக்காய் மருத்துவரின் காதலி எனப்படுகிறது. தான்றிக்காய், நெல்லிக்காயுடன் கடுக்காய் சேர்த்து திரிபாலா எனப்படும் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. தினமும் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்து வர உடல்பலம் ஏற்படும், வயிற்றுக் கோளாறு மாறும்.
வலிமை தரும் காய்:
கடுக்காய் தசை இருக்கும் தன்மை கொண்டது. வயிற்றுவலி, அஜீரணம் மற்றும் வயிற்று அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்க, இந்திய மருத்துவத்தில் தரப்படுகிறது. கனிகளின் கசாயம் வாய் கொப்பளிப்பாக பயன்படுகிறது. இதன் வலிமை காரணமாகவே முந்தைய காலங்களில் கட்டடம் கட்டும் பணியில் கடுக்காய் அரைத்து பயன்படுத்தப்பட்டது.
இது வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமைச்சல், தலைநோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப் பொருமல், விக்கல் போன்றவைகளைக் குணப்படுத்தும்.
வாதம் குணமாகும்:
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி தினமும் இரவு உணவு உண்டவுடன் அரை தேக்கரண்டி குடித்து வர வாதம் குணமாகும். உடல் வலுவடையும்.
ஈரல்நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டைநோய், வயிற்றுப் புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.
மூக்கில் இருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய் தூளை எடுத்து மூக்கால் உறிய இரத்தம் வருவது நின்றுவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
