தேக பலம் தரும் ஓரிதழ் தாமரை

Posted By:
Subscribe to Boldsky
Hybanthus Enneaspermus
மூலிகைகள் நிறைந்த பூமி பாரதம். இங்கு அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகளை கண்டறிந்து மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். மனிதர்களைத் தாக்கும் நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் சித்தர்கள் கூறியுள்ளனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர்.

இன்றோ பலரும் தம் உடல் நலம் பேணாமல் இரவு பகலாக பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப நல்ல ஆரோக்கியமான உடல் அமைந்தால்தான் நாம் பிறந்ததின் பலனை அனுபவிக்க முடியும். ஓரிதழ் தாமரை என்னும் மூலிகை மிகவும் பயனுள்ள மருந்தாகும்.

ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது. இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு.

உடல் வலுப்பெற

ஓரிதழ் தாமரை செடியை இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரை நல்ல மருந்தாகும். சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.

மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரையுடன் கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.

உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது. ஓரிதழ் தாமரை முழு மூலிகையையும் காய வைத்து பொடி செய்து தொடர்ந்து உண்ண தொப்பை குறையும். உடல் எடை குறையும், விந்தணுக்கள் கூடும், விந்து கட்டும், மேக சூடு குறையும்,தேக பலம் உண்டாக்கும்.

ஆண்களை காக்கும் காயகல்பம்

இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.

ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் ஓரிதழ் தாமரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

English summary

Medicinal benefits of Hybanthus enneaspermus | ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை

Hybanthus enneaspermus Muell, belonging to family Violaceae, is a herb or under shrub distributed in the tropical and subtropical regions of the world. It is a herb, often with woody troches, found in the warmer parts of India. the plant is used in case of pregnant and parturient women, and in case of gonorrhoea and urinary infections. The present study is intended to determine the antibacterial activity of the plant against selected urinary tract pathogens and compare it with eight standard drugs frequently used in the treatment of urinary tract infections.
Story first published: Saturday, August 27, 2011, 16:36 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter