For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லீரல் நோயை குணமாக்கும் அகில்புகை

By Sutha
|

சந்தனமரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற மரம் அகில். பலவித நோய்களை குணப்படுத்தக்கூடிய அகில் சந்தன மரவகையை சேர்ந்த ஒன்றாகும். காடுகளில் பல இடங்களில் சந்தன மரத்தை ஒட்டியே அகில் மரங்களும் வளர்ந்திருக்கும். அகில் மரத்தின் கட்டை மருத்துவப் பயனுடையதாகும்.

கட்டமைப்பு உடலுக்கு அகில்

அகில் கட்டையை பசுவின் பால்விட்டு நன்றாக சந்தனம் அரைப்பது போல அரைத்து அந்த விழுதை உடல் சருமத்தில் தொடர்ந்து பூசி வந்தால் சருமத்தின் சுருக்கம் அகன்றுவிடும். ஊளைச்சதை எனப்படும், அதிக சதை போட்ட உடலைப் பெற்றவர்கள் இந்த அகில் கட்டை விழுதை தொடர்ந்து உடலில் பூசி வந்தால் சதை குறைந்து இறுகி உடல் நல்ல கட்டமைப்பாகக் காட்சியளிக்கும். சரியானபடி மருத்துவப் பக்குவம் செய்து சாப்பிட்டால் நரை, திரை போன்ற முதுமைக் கால சருமக் குறைபாடுகளையும் அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

வீக்கத்தை குறைக்கும்

உடலில் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதைக் குறைக்கும் சக்தி பெற்றது அகில். உடல் சோர்வினை உடனே போக்கும் இயல்பும் இதற்கு உண்டு. ஒற்றைத் தலைவலி, மண்டையிடி, சில வகைக் காய்ச்சல், பொதுவான வாத நோய்கள், படை மற்றும் சரும நோய்கள், வாந்தி, போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் அகிலுக்கு உண்டு.

கல்லீரல் நோய்களை குணமாக்கும்

கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் ஆற்றலும் இதனிடம் அமைந்திருக்கிறது. அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தி சிறிது எரிந்த பின்னர் நெருப்பை ஊதி அணைத்துவிட்டு அதிலிருந்து வரும் புகையை மட்டும் மூக்கு, வாய் வழியாக உள்ளுக்கு இழுத்தால் கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமாகிவிடும். வாந்தி ஏற்படும் பொழுது இவ்வாறு புகை பிடித்தால் வாந்தி நின்றுவிடும்.

சுவாச கோசத்தில் ஏற்படக் கூடிய அழற்சியும் சமன்படும். உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதன்மீது அகில் புகைபடுமாறு செய்தால் காயம் வெகு விரைவில் குணமாகிவிடும்.

அகில் கட்டை தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் உட்புறத்தில் ஏற்படக் கூடிய பல நோய்களை அகற்றும். தலைவலியையும் குணமாக்கும்.

English summary

Essential Oil of Eaglewood Tree | முதுமையை தடுக்கும் அகில்

The eaglewood tree Aquilaria agallocha Roxb. (syn. Acquilaria malaccensis Lamk., family: Thymelaeaceae) is a precious floral wealth of India . The oil obtained from agar is described as a stimulant, cardiatonic and carminative. It is also used in the cosmetic and pharmaceutical industries.
Story first published: Sunday, June 26, 2011, 12:37 [IST]
Desktop Bottom Promotion