Latest Updates
-
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்!
தாது விருத்தி உண்டாக்கும் அமுக்கிராங் கிழங்கு

இதை அசுவகெந்திக்கிழங்கு, அமுக்கனாங் கிழங்கு, அமுக்குரவு, வராக கன்னி, இடிச்செவி என்று இன்னும் பல பெயரிட்டுக் கூறுவர். இது துவர்ப்புச்சுவையுடையது.
உடல்பருமன் போக்கும்
அமுக்கிராங்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவைக்க வேண்டும். அவ்வாறு வேக வைக்க நீருக்குப் பதில் பசும்பாலை ஊற்றி சுண்டும் வரை சிறு தீயில் வேக வைத்து பின் அக்கிழங்கை சுத்தமான இடத்தில் வைத்து வெயிலில் நன்கு உலரும் படி செய்யவேண்டும். பின் இக்கிழங்கை தூளாக்கி சலித்து சூரணமாக்கி நோய் பாதிப்பு சமயங்களில் உட்கொள்ள வேண்டும்.
உடல் பருமன் உள்ளவர்கள் பல வித நோய்களால் பாதிக்கப்படுவது இயற்கை. அவர்கள் அமுக்கிராங்கிழங்கு சூரணத்தை வெந்நீருடன் சிறிது உட்கொண்டால் நாளடைவில் உடல் பருமன் குறையும். 48 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் பலன் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி குணமடையும்
நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுபவர்கள் இந்த சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிடவேண்டும். இதனால் நரம்புத்தளர்ச்சி நீங்குவதோடு மேனி பளபளப்பாகும். உடலில் வீக்கங்கள் தோன்றி வலியால் அவதிப்படுபவர்கள், வாயுக்கோளாறால் இடுப்பு பிடிப்பினால் பாதிக்கப்படுபவர்கள் இந்த சூரணத்துடன் தேனைக் குழைத்துச் சாப்பிட குணமாகும். இதனால் சளித்தொல்லையும் நீங்கும்.
தாது விருத்தி உண்டாக்கும்
அமுக்கராங்கிழங்கு புண்கள், மேக சம்பந்தமான கட்டிகள், கண்டமாலை, கிராந்தி புண்கள் போன்றவற்றை ஆற்றும் தன்மையுடையது. இக்கிழங்கைக் கொண்டு, அமுக்கராச் சூரணம், அஸ்வகந்தி லேகியம், அமுக்கரா மாத்திரை, போன்ற மருந்துகளை தயாரிக்கின்றனர். இம் மருந்துகள் உடல் உஷ்ணத்தை தணிக்கவும், தாது விருத்திக்கும், ஆண்மை தன்மை அதிகரிப்பிற்கும் பயன்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
