Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பெண்ணின் கண்களை விரியச்செய்யும் “அழகிய பெண்மணி”

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் டிரோபென் ஆல்கலாய்டுகள், ஃபிளேவனாய்டுகள், கௌமெரின்கள், எளிதில் ஆவியாகும் காரங்கள் உள்ளன. டிரோபென் ஆல்கலாய்டுகளில் அட்ரோஃபைன் மற்றும் அயோசயமைன் முக்கியமானவை.
மூட்டு வலியை நீக்கும்
இத்தாவரம் கண் பாப்பாவினை விரியச் செய்யும். இதனை இத்தாலிய மகளிர் தங்களது கண்களை விரியச் செய்வதற்குப் பயன்படுத்தினர். இதன் காரணமாகவே இதன் சிற்றினப்பெயர் இத்தாலிய மொழியில் 'அழகியப் பெண்மணி" என்னும் பொருளில் அமைந்துள்ளது. தலைவலியை குணமாக்கும், வயிற்றுவலியை போக்கும். பெண்களுக்கு மெனோபாஸ் கால வலியை நீக்கும். ருமாய்டாய்டிசம் என்னும் மூட்டுப்பிரச்சினைக்கு மருந்தாகிறது. நரம்பு தொடர்புடைய நோய்களையும் நீக்குகிறது. ஹைபர் தைராய்டினால் ஏற்படும் அதிக வியர்வையை போக்கும்.
பக்கவாத நோய் குணமாகும்
பார்கின்ஸன் நோயில் ஏற்படும் கை, கால் உதறல் மற்றும் விறைப்புத் தன்மையினைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இது கைகால் இயக்கத்தினையும், பேச்சினையும் சரி செய்யும். இதயத்துடிப்பினையும் அதிகரிக்கிறது. இயங்கு தசைகளைக் கட்டுப்படுத்த வல்லது. இத்தாவரம் நல்ல தொரு மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது ஜீரண மற்றும் மூச்சுக்குழல் சுரப்புகளை கட்டுப்படுத்துகிறது.
வயிற்றுப் புண் சரியாகும்
இது தளர்ந்த உறுப்புகளை நல்ல நிலைக்குக் கொண்டு வரும். வயிறு மற்றும் குடல் பகுதி மீது செயல் புரிந்து குடல் வலியினைப் போக்கும். பெப்டிக் எனப்படும் வயிற்றுப் புண் குணமடைய உதவுகிறது. ஜீரண அமிலங்கள் சுரப்பினைக் கட்டுப்படுத்தும். சிறுநீர் நுண் குழல்களின் பிடிப்பு வலியினை நீக்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
