Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
மலட்டுத்தன்மை போக்கும் தண்ணீர் முட்டான் கிழங்கு!

எகிப்திய கல்லறை சித்திரங்களின் அடிப்படையில் இத்தாவரம் கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது. இது கசப்பானது, மலமிளக்கி, தூக்கத்தை தூண்டும். இந்திய மருத்துவத்தில் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. பால் உணர்வு தூண்டுவி. வலுவேற்றி, தசை சுருக்கத்திற்கு எதிரான செயல்திறன் கொண்டதாக கருதப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் ஸ்டிராய்டல்,குளுக்கோசைட்டுகளான அஸ்பரகோசைடுகள், கசப்பு குளுக்கோசைடுகள்,அஸ்பராகைன் மற்றும் ஃபிளேவனாய்டுகள் காணப்படுகின்றன.
சிறுநீர் நோய்களை குணமாக்கும்
இத்தாவரம் சிறுநீர் போக்கினை தூண்டும். பலவிதமான சிறுநீர் கோளாறுகள் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகளை குணப்படுத்த உதவுகிறது. மூட்டுக்களில் சேரும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றி கீழ் வாதத்தினைத் தீர்க்கும்.
கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் டயாஸ்கொரிடஸ் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் கசாயத்தின் மருத்துவ குணம் பற்றி குறிப்பிட்டுள்ளார். சிறுநீர்ப்போக்கினைச் சீர்படுத்தவும், சிறுநீரக கோளாறுகள், மஞ்சள்காமாலை மற்றும் தொடை நரம்பு வலி போக்கவும் இதனை சிபாரிசு செய்துள்ளார்.
நரம்பு மண்டல நோய்
இது தைலங்கள் தயாரித்தலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை மூட்டுவலி, கழுத்து சுளுக்கு, நரம்பு மண்டல நோய்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது.
குடல்வலி,வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை போன்றவற்றை போக்கவும் பயன்படுகிறது. வேர் கிழங்கு வெல்லப்பாகுடன் சேர்த்து இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. புதிய வேரின் சாறு தேனுடன் கலந்து சுகமளிக்கும் மருந்தாகிறது. பட்டை நச்சுத்தன்மை கொண்டது.
மலட்டுத்தன்மை போக்கும்
இத்தாவரத்தில் இருந்து பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுள் சதாவேரி கிரிதா, ஃபாலகிரிதா, நாராயணதைலம், விஷ்ணுதைலம்,பிரமேக மிகிர தைலம் ஆகியவை முக்கியமானவை. இத்தாவரத்தின் சாறுடன், வெண்ணெய், பால் ஆகியவை கலந்து கொதிக்க வைக்கப்பட்டு சதாவேரி கிருதா தயாரிக்கப்படுகிறது. இத்துடன் வால்மிளகு,தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து பால் உணர்வு தூண்டும் வலுவேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.
சதாவேரி சாறுடன் வெண்ணெய், பசுவின் பால் ஆகியவற்றுடன் வேறுசில மருந்துகள் மிகச்சிறிய அளவில் கலந்து ஃபாலகிரிதா தயாரிக்கப்படுகிறது. இது விந்து சுரப்பினை அதிகரிக்கப்பயன்படுத்தப்படுகிறது.
பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்கி பெண்குறி கோளாறுகளைப் போக்கவும் உதவுகிறது. பால்வினை நோயான கோனேரியாவுக்கு பாலுடன் கலந்து தரப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications