Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பால் சுரத்தலை ஊக்குவிக்கும் முக்கம்பாலை

உயரமான கிளைகளை உடைய முக்கம்பாலை மரம் மருத்துவ கொண்டது. இந்த மரத்தின் மலர்கள் பசும் வெண்மை நிறத்தை கொண்டவை. மணமுடையவை. கனிகள் மெலிந்த வெடிகனி. காம்பிலிருந்து கொத்தாக தொங்குபவை. விதைகள் பழுப்புநிறமுடையவை. முக்கம்பாலையின் இலைகள், பட்டை மற்றும் கட்டை மருத்துவ குணம் கொண்டவை. இந்தியாவில் இமயமலையின் அடிப்பகுதி, பீகார், அந்தமான் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளவற்றில் டிடாமைன், அல்ஸ்டோமைன், பிக்ரினைன், ராசிமைனைன் முக்கியமானவை.
பெரி-பெரி நோய்குணமாகும்
இலைகளின் கசாயம் பெரி-பெரி என்னும் தோல்நோய்க்கும், கல்லீரல் அடைப்புக்கும் மருந்தாகும் இதன் இலைகளை கசக்கி எண்ணெயில் சூடுபடுத்தி உள்ளுக்குள் தர நீர்க்கோவை நோய் குணமடையும். இலையை அரைத்து பற்றுப்போட நாட்பட்ட புண்கள் குணமடையும்.
குழந்தை பேற்றுக்குப்பின்னர் பெண்களுக்கு இலையின் சாறு இஞ்சியுடன் சேர்ந்து கலந்து கொடுக்கப்படும். இது பால் சுரத்தலை ஊக்குவிக்கும். சதையை இறுக்கும். தூக்கமின்மையை போக்கி நல்ல உறக்கத்தை தரும்.
ஜீரணமண்டல நோய் குணமடையும்
முக்கம்பாலை மரத்தின் பட்டை வயிற்றுப்பூச்சிகளை கொல்லும். வயிற்றுப்போக்கு, மலேரியா ஆகியவற்றிற்கு எதிரானாது. ஜீரண மண்டல நோய்களைத் தீர்க்க வல்லது.
மரத்தின் பால் காது வலியின் போது எண்ணெய் கலந்து மருந்தாக ஊற்றப்படுகிறது. மூட்டுவலி, பல்வலி, தோல்கட்டிகள் புண்களின் மேல் பூச்சாக உதவுகிறது. மரத்தின் கட்டையினை நீருடன் சேர்த்து மூட்டுவலி மற்றும் காயங்களுக்கு பயன்படுகிறது.
இத்தாவரத்துடன் வேறுபல தாவரங்களையும் சேர்த்து அமிர்த அரிஷ்டா என்னும் மருந்து தயாரிக்கப்படுகிறது. இது காய்ச்சல் நோய்க்கு மருந்தாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
