Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
மலட்டுத் தன்மை போக்கும் நெருஞ்சி
களைச்செடியாக காணப்படும் பல தாவரங்கள் மருத்துவகுணங்களை கொண்டிருக்கின்றன. முட்களைக் கொண்ட கனிகளை உடைய நெருஞ்சிமுள் இந்தியாமுழுவதும் பரவலாக வளர்ந்துள்ளது. இத் தாவரத்தின் தண்டு, இலை, வேர், கனி ஆகியவை நோய் தீர்க்க உதவுகின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் சபோனின்கள், குளுக்கோசைடுகள், சர்க்கரைகள், ஸ்டீரால்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. குளோரோஜெனின் டயோஸ்ஜெனின், கிரேசிலின், டிரில்லின் சபோனின் குளுக்கோஸ், ராம்னோஸ், ரூட்டின், ஹார்மைன், ஸ்டிங்கோஸ்டீரால்.
மருத்துவப் பயன்
தண்டு தசை இருக்கும் தன்மை கொண்டது. இதன் வடிநீர், கோனோரியா எனும் பால்வினை நோய் தீர்க்கும். சிறுநீர்ப் பைகளில் கற்கள் உருவாவதை இலைகள் போக்கும். வயிற்றுவலி தீர்க்கும்.
வேர் பல மருத்துவ பயன்களை கொண்டது. இது சிறிய அளவு மலமிளக்கி. சுகம் தருவது. வலுவேற்றி, சிறுநீர்த்தொல்லைகள் மற்றும் மலட்டுத்தன்மை நீக்க உதவுகிறது.
பால்வினை நோய் போக்கும்
கனிகளின் வடிநீர் அல்லது கசாயம் மிகுந்த பயன் உடையவை. சிறுநீர் உறுப்புகளில் கல் நீக்கவும், கோனேரியா பால்வினை நோய் போக்கவும், கீழ்வாதம் நீக்கவும், மலடு போக்கவும் பயன்படுகிறது. இவைமட்டுமின்றி சிறுநீரக கோளாறுகள் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க விரும்பும் நோயினை போக்கவும் உதவுகிறது. சம அளவு விதைகளை ஆட்டுப்பால், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.உலர்ந்த கனிகள் பால் உணர்வு தூண்டுவி. சிறுநீர் போக்குத்தூண்டுவி. வலுவேற்றியாக செயல்படும்.
மலட்டுத்தன்மை நீங்கும்
நெருஞ்சில் செடியின் காய் மிருதுவானது. முட்கள் கெட்டியாக இருப்பதில்லை. கனிந்தபின் கடினமாகி முட்களாக மாறிவிடும். இடம் பரவ ஏதுவாக அமைகிறது.
தசமூலா எனும் ஆயுர்வேத தயாரிப்பில் நெருஞ்சில்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. நெருஞ்சித்தாவரத்தை முழுவதுமாக தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தினாலும் மலடு நீங்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications