ஜிம்மிற்கு செல்லும் ஆரோக்கியமானவர்களும் மாரடைப்பில் மரணமடைய இவைதான் காரணமாம்... ஜாக்கிரதையா இருங்க...!

உடற்தகுதியைப் பற்றி பேசும்போது, தோற்றம், கவர்ச்சி, நன்கு கட்டமைக்கப்பட்ட உடல், அழகு மற்றும் சில சமயங்களில் அந்தஸ்து போன்றவற்றில் நம் கவனம் செலுத்துகிறோம்.

உடற்தகுதியைப் பற்றி பேசும்போது, தோற்றம், கவர்ச்சி, நன்கு கட்டமைக்கப்பட்ட உடல், அழகு மற்றும் சில சமயங்களில் அந்தஸ்து போன்றவற்றில் நம் கவனம் செலுத்துகிறோம். ஆனால் உடற்தகுதி என்பது ஒரு சிறந்த உடல் நிலை என்று ஆரோக்கியமான முறையில் புரிந்து கொள்ளப்படவில்லை; உடற்தகுதி பற்றிய எண்ணம் தெளிவற்றது மற்றும் கற்பனையானது. உடற்தகுதி பற்றிய தெளிவின்மை பெரும்பாலும் நம்மைப் பாதிக்கிறது அல்லது எதிலிருந்து நமது உந்துதலைப் பெறுகிறோம் என்பதிலிருந்து இந்த தவறான எண்ணம் உருவாகிறது.

Why Does Physically Fit People Getting a Heart Attack in Tamil

சமீபத்தில் பல பிரபலங்கள் வொர்க் அவுட்டின் போது மரணமடைந்தனர், இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் அனைவரும் உடல்ரீதியாக மிகவும் கச்சிதமாக இருந்தார்கள். அவர்கள் ஜிம்மிற்குத் தவறாமல் சென்று, உடற்பயிற்சி செய்து, நல்ல மற்றும் சுத்தமான டயட்டைக் கொண்டிருந்தனர். உடல்ரீதியாக கச்சிதானவர்களாக இருப்பவர்களும் ஏன் மாரடைப்பால் மரணமடைகின்றனர் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கும். அதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடற்தகுதி பற்றிய எண்ணம் மாற வேண்டும்

உடற்தகுதி பற்றிய எண்ணம் மாற வேண்டும்

உடற்தகுதி என்பது மன மற்றும் உடல் ஆரோக்கியம் ஆரோக்கியமாக இருக்கும் உடலின் சீரான நிலையாகும். இதில் உடல் அமைப்பு, மற்றும் உயிரியல் செயல்பாடுகள் உள்ளடங்கும், வெறும் தோற்றம் மட்டுமே உடல் தகுதியல்ல. உடற்தகுதி பற்றி நாம் நினைக்கும்போது அதில் சில விஷயங்களை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

தூக்கம்

தூக்கம்

தூக்கமின்மை இப்போது பொதுவான பிரச்சினையாகி விட்டது. உடலுக்குத் தேவையான அளவு ஓய்வு கொடுப்பதில் யாரும் அக்கறை காட்டுவதில்லை. ஒரு இளம் மனித உடலுக்கு தினமும் 7-8 மணிநேர தூக்கம் தேவை. குறைவான தூக்கம் ஆரம்பத்தில் உங்களுக்கு மந்தமான உணர்வை ஏற்படுத்தாது, ஆனால் தூக்கத்தை இழக்க நேரிடும் என்பது உறுதி. நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கடுமையான சேதத்தை நோக்கித் தள்ளுகிறீர்கள். தூக்கமின்மை இதய ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

டயட்

டயட்

சமநிலையற்ற உணவு முறையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று சரியான அளவு ஊட்டச்சத்தை உட்கொள்ளாமல், பசியை அடக்குவதற்காக வயிற்றை நிரப்புவது. இரண்டாவது, எந்த மருத்துவரின் ஆலோசனையும் இல்லாமல், உடலை பல்வேறு வகையான டயட்களை பரிசோதிப்பது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சார்ந்திருப்பதே நமது உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம். இன்டர்நெட்டில் படிக்கும் அனைத்து தகவல்களையும் நம்பி எந்த மருத்துவரின் ஆலோசனையும் இல்லாமல் புதிய டயட்டுகளை முயற்சிப்பது நிச்சயம் உங்கள் உயிருக்கு ஆபத்தானதுதான்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஃபிட்னஸ் என்பது அதிகளவு உடற்பயிற்சியை எப்போதும் குறிக்காது. உடற்தகுதி என்பது உடலுக்கு சரியான வகையான பயிற்சியை அளிப்பதே தவிர, அதற்கு அதிகமாக பயிற்சி அளிப்பதல்ல. இது உடலின் தசைகள் ஓய்வெடுக்கவும், அடுத்த சுற்று உடற்பயிற்சிகளை தொடங்கும் முன் சரியாக குணமடையவும் கொடுக்கிறது. உடலுக்கு போதிய ஓய்வு கொடுக்காமல், மீண்டும் மீண்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

ஆரோக்கிய நிலைகள்

ஆரோக்கிய நிலைகள்

உடற்தகுதி என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியமான உடலையும், மனதையும் உறுதி செய்வதாகும், ஆனால் அதற்காக மற்ற ஆரோக்கிய நிலைமைகளை புறக்கணிக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, கடுமையான நோய்த்தொற்றிலிருந்து நீங்கள் மீண்ட பிறகு, எந்தவொரு கனமான உடற்பயிற்சியையும் செய்வதற்கு முன்பு சரியாக ஓய்வெடுக்க மருத்துவரீதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், பலர் தொற்றுநோயிலிருந்து மீண்ட பிறகு உடனடியாக ஜிம்மிற்கு வருகிறார்கள். இது அவர்களுக்கு கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion