Latest Updates
-
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க -
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு பஞ்சு போல சாப்ட்டான சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க.. -
சிம்ம ராசியில் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது!
இதயத்தை வலிமையாக்கி இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க இந்த 5 தந்திரங்கள் போதுமாம்...!
மூச்சுத்திணறல், மூட்டு, கல்லீரல், சிறுநீரகப் பிரச்சனைகளைப் போலவே இருதய நோய்களும் மக்களிடையே பெருமளவில் அதிகரித்து வருகின்றன.
மூச்சுத்திணறல், மூட்டு, கல்லீரல், சிறுநீரகப் பிரச்சனைகளைப் போலவே இருதய நோய்களும் மக்களிடையே பெருமளவில் அதிகரித்து வருகின்றன. தற்போது, 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படும் கவலையளிக்கும் போக்கு உள்ளது. இதயக் கோளாறுகளைத் தடுத்து, ஆரோக்கியமாக இருப்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் இன்றியமையாததாக உள்ளது.

இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதய நிபுணர்கள், பல்வேறு இதய நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் சில பழக்கவழக்கங்களை பரிந்துரைத்துள்ளார்கள். இதயத்தை பாதுகாக்க உதவும் அந்த அடிப்படை ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நடைப்பயிற்சி இன்றியமையாதது
நீங்கள் போதுமான அளவு நடக்கவில்லை என்றால், நீங்கள் உங்கள் இதயத்திற்கு பெரிய துரோகம் செய்கிறீர்கள். நடைபயிற்சி இதயத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், இரத்த அழுத்த ஆற்றல் அளவை அதிகரிக்கவும், எடை இழப்பை தூண்டவும் உதவும். இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது.

தினசரி உடற்பயிற்சி
நடைபயிற்சி தவிர, நீச்சல், வலிமை பயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், யோகா மற்றும் ஏரோபிக்ஸ் போன்றவையும் செய்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். லிஃப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டுகளில் ஏறுங்கள். அருகில் செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகனத்தை பயன்படுத்தாதீர்கள்.

சமச்சீரான டயட்
நீங்கள் ஆரோக்கியமான டயட் முறைகளை கடைப்பிடிப்பது அவசியம். பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள். கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை குறைக்கவும்.

போதுமான அளவு தண்ணீர் குடித்தல்
ஒரு நாளைக்கு சுமார் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் பல அதிசயங்களை செய்ய முடியும். இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும், செரிமானத்தை எளிதாக்கும் மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடாது
இரத்த நாளங்களைச் சுருக்கி மாரடைப்பை உண்டாக்கும் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆல்கஹால் கூட நிறைய கலோரிகளைக் கொண்டுள்ளது மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது, இது இதய பிரச்சனைகளின் அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
