Latest Updates
-
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்..
உங்கள் இதய தசையில் அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
மயோகார்டிடிஸ் என்பது இதய தசைகளில் ஏற்பட்டுள்ள அழற்சி நிலையாகும். இது இதய தசைகள் மற்றும் இதயத்தின் மின் அமைப்பை பாதித்து, இதயத்தின் திறனைக் குறைத்து விரைவான அல்லது அசாதாரண இதய தாளங்களை ஏற்படுத்தும்.
Recommended Video
ஆரோக்கியமற்ற மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையினால் இந்தியாவில் அதிக இதய நோய்கள் உள்ளன. 2016 இல், சுமார் 17.9 மில்லியன் மக்கள் இதய நோயால் மரணத்தை சந்தித்துள்ளனர். நோயின் உலகளாவிய சுமை, இந்திய மாநிலங்களில் 1990-2016 இடையே இதய நோய் மற்றும் அவற்றின் ஆபத்து காரணிகளின் வடிவ மாற்றுதல் குறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின் படி, 2016-இல் சுமார் 2.8 மில்லியன் மக்கள் இதய நோயால் இறந்துள்ளனர் என்றும், இது 1990 இல் மரணித்த 1.5 மில்லியனை விட அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.

அப்படிப்பட்ட இதய நோயின் ஒரு நிலை தான் மயோகார்டிடிஸ் என்னும் இதய தசை அழற்சி ஆகும். சொல்லப்போனால் பலருக்கும் இந்த இதய நோயைப் பற்றி விரிவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இதய தசை அழற்சியின் அறிகுறிகள், காரணங்கள், சிக்கல்கள் குறித்து விரிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மயோகார்டிடிஸ்/இதய தசை அழற்சி
மயோகார்டிடிஸ் என்பது இதய தசைகளில் ஏற்பட்டுள்ள அழற்சி நிலையாகும். இது இதய தசைகள் மற்றும் இதயத்தின் மின் அமைப்பை பாதித்து, பம்ப் செய்வதற்கான உங்கள் இதயத்தின் திறனைக் குறைத்து விரைவான அல்லது அசாதாரண இதய தாளங்களை ஏற்படுத்தும்.
மயோகார்டிடிஸ் ஏற்படுவதற்கு வைரஸ் தொற்றுக்கள் மட்டுமின்றி, குறிப்பிட்ட சில மருந்துகளின் தாக்கங்கள் அல்லது சில பொதுவான அழற்சி நிலையும் காரணங்களாக இருக்கலாம். ஒருவருக்கு கடுமையான இதய தசை அழற்சி இருப்பின், இதயம் பலவீனமாகி, உடலின் மற்ற பாகங்களுக்கு கிடைக்க வேண்டிய இரத்தம் கிடைக்காமல் போகும். மேலும் இதயத்தில் இரத்தக் கட்டிகள் உருவாகி, பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்றவற்றையும் உண்டாக்கலாம்.
இப்போது மயோகார்டிடிஸ் அல்லது இதய தசை அழற்சியின் அறிகுறிகள் என்னவென்று காண்போம்.

அறிகுறிகள்
ஒருவருக்கு இதய தசை அழற்சி மிதமானதாகவோ அல்லது அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலோ, எவ்வித அறிகுறியும் தெரியாது. அதுவே கடுமையாக இருந்தால், நோயின் தீவிரத்தைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும். அதில் சில பொதுவான அறிகுறிகளாவன:
* மார்பு வலி
* விரைவான அல்லது அசாதாரண இதய தாளங்கள்
* மூச்சு விடுவதில் சிரமம் (ஓய்வு நிலையிலோ அல்லது ஏதேனும் வேலையில் இருந்தாலோ)
* நீர்த்தேக்கத்தால் கால்கள், பாதங்கள் வீக்கத்துடன் காணப்படுவது
* களைப்பு
* இதர வைரஸ் தொற்றுகளின் அறிகுறிகளான தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், தொண்டைப்புண் அல்லது வயிற்றுப் போக்கு

குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள்
குழந்தைகளுக்கு இதய தசை அழற்சி இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளாவன:
* காய்ச்சல்
* மயக்கம்
* சுவாசிப்பதில் சிரமம்
* வேகமாக சுவாசிப்பது
* விரைவான அல்லது அசாதாரண இதய தாளங்கள்

எப்போது மருத்துவரைக் காண வேண்டும்?
ஒருவருக்கு மயோகார்டிடிஸ் அல்லது இதய தசை அழற்சி இருந்து, நெஞ்சு வலி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உங்களுக்கு தொற்று ஏற்பட்டு, மயோகார்டிடிஸின் அறிகுறிகள் தென்பட்டால், எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் உடனே மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள். ஒருவேளை கடுமையான அறிகுறிகள் தெரிந்தால், உடனே அவசர மருத்துவ உதவிக்கு அழையுங்கள்.

காரணங்கள்
மயோகார்டிடிஸிற்கான காரணங்கள் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. சாத்தியமான காரணங்கள் பல உள்ளன. ஆனால் மயோர்கார்டிடிஸ் ஒருவருக்கு உருவாகும் வாய்ப்பு அரிதானது. சாத்தியமான காரணங்கள் பின்வருமாறு:

வைரஸ்
மயோகார்டிடிஸ் ஏற்படுவதற்கு பல வைரஸ்கள் காரணமாக இருக்கலாம். அதில் சாதாரண சளிக்கு காரணமான அடினோவைரஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் சி, பார்வோவைரஸ், ஹெர்பீஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ், எக்கோவைரஸ், எப்ஸ்டின்-பார் வைரஸ் மற்றும் ருபெல்லா போன்றவை குறிப்பிடத்தக்கவை. எய்ட்ஸிற்கு காரணமான எச்.ஐ.வி கூட மயோகார்டிடிஸை உண்டாக்கலாம்.

பாக்டீரியா
பல்வேறு பாக்டீரியாக்களும் மயோகார்டிடிஸை உண்டாக்கலாம். அதில் ஸ்டேஃபிளோகோகஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், தொண்டை அழற்சியை ஏற்படுத்தும் பாக்டீரியம் மற்றும் லைம் நோய்க்கு காரணமான டிக் பாக்டீரியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஒட்டுண்ணிகள்
டிரிபனோசோமா க்ரூஸி மற்றும் டோக்ஸோபிளாஸ்மா போன்ற ஒட்டுண்ணிகள் உள்ளன. அவற்றில் சில பூச்சிகளால் பரவுகின்றன மற்றும் இவை சாகஸ் நோய் எனப்படும் ஒரு நிலையை ஏற்படுத்தும்.

பூஞ்சை
கேண்டிடா போன்ற ஈஸ்ட் நோய்த்தொற்றுகள், அஸ்பெர்கிலஸ் போன்ற மோல்ட்ஸ் மற்றும் பறவை எச்சங்களில் பெரும்பாலும் காணப்படும் ஹிஸ்டோபிளாஸ்மா போன்ற பிற பூஞ்சைகள் சில நேரங்களில் மயோகார்டிடிஸை ஏற்படுத்தும். குறிப்பாக பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

சில மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது போதை மருந்துகளின் தாக்கங்கள்
புற்றுநோயை சரிசெய்யும் மருந்துகள், ஆன்டி-பயாடிக்குகளான பென்சிலின் ம்ற்றும் சல்போனமைடு போன்றவை, சில வாதத்தை தடுக்கும் மருந்துகள் மற்றும் கொக்கைன் போன்ற சில போதைப் பொருட்கள், மயோகார்டிடிஸை உண்டாக்கலாம்.

கெமிக்கல்கள் அல்லது கதிர்வீச்சுக்கள்
குறிப்பிட்ட கெமிக்கல்களான கார்பன் மோனாக்ஸைடு மற்றும் கதிர்வீச்சுக்களின் வெளிப்பாடும் ஒருவருக்கு மயோகார்டிடிஸை ஏற்படுத்தும்.

மயோகார்டிடிஸ் / இதய தசை அழற்சியின் சிக்கல்கள்
மயோகார்டிடிஸ் ஒருவருக்கு தீவிரமானால், இதய தசைகள் நிரந்தரமாக பாதிப்படைவதோடு, வேறு சில பிரச்சனைகளையும் உண்டாக்கும் அவையாவன:

இதய செயலிழப்பு
போதிய சிகிச்சை வழங்காவிட்டால், மயோகார்டிடிஸ் இதய தசைகளை சேதப்படுத்தி, இரத்தத்தை திறம்பட அழுத்த முடியாமல் செய்துவிடும். தீவிர நிலையில், மயோகார்டிடிஸ் இதய செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.

மாரடைப்பு அல்லது பக்கவாதம்
இதய தசைகள் காயமடைந்தால், இரத்தம் திறம்பட அழுத்த முடியாமல், இதயத்திலேயே தங்கி கட்டிகளாகி, அடைப்பை உண்டாக்கி, திடீரென்று மாரடைப்பை ஏற்படுத்திவிடும். இப்படி இரத்தம் உறைந்து கட்டிகளாகி இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டால், அதன் விளைவாக பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

திடீர் இதய மரணம்
குறிப்பிட்ட தீவிரமான இதய தாளங்கள் இதயத்துடிப்பை சட்டென்று நிறுத்தி, மரணத்தை உண்டாக்கும். எனவே இதய தசை அழற்சியை ஒருவர் சாதாரணமாக விட்டுவிட்டால், மரணத்தை நிச்சயம் சந்திக்க வாய்ப்புள்ளது.

தடுப்பு முறைகள்
மயோகார்டிடிஸ் அல்லது இதய தசை அழற்சிக்கு என்று குறிப்பிட்ட தடுப்பு முறைகள் எதுவும் இல்லை. இருப்பினும், ஒருசிலவற்றை பின்பற்றுவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
* வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டால், மற்றவர்களின் அருகில் சென்று பேசுவதைத் தவிர்த்திடுங்கள்.
* எப்போதும் சுத்தமாக இருக்க பழகுங்கள்.
* பாதுகாப்பற்ற பாலியல் உறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.
* கிருமிகள் நிறைந்த பகுதிகளில் அதிகம் சுற்றுவதைத் தவிர்ப்பதோடு, வெளியே சுற்றும் போது சருமத்திற்கு முழு பாதுகாப்பையும் கொடுக்கும் மாதிரியான உடைகளை அணிந்து செல்லுங்கள்.
* ரூபெல்லா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களை எதிர்க்கும் தடுப்பூசிகளை மறக்காமல் போட்டுக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications