Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் ஆண்களின் இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... உடனே டாக்டரை பாருங்க...!
வயதானவர்களுக்கு மட்டும்தான் மாரடைப்பு வரும் என்ற கருத்து கடந்த பாத்து வருடத்தில் மூடநம்பிக்கையாகவே மாறிவிட்டது.
வயதானவர்களுக்கு மட்டும்தான் மாரடைப்பு வரும் என்ற கருத்து கடந்த பாத்து வருடத்தில் மூடநம்பிக்கையாகவே மாறிவிட்டது. ஏனெனில் மாரடைப்பால் இறக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கவலையளிக்கும் விதமாக அதிகரித்து வருகிறது. உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு அளவுகள், உயர் இரத்த சர்க்கரை அளவுகள், புகைப்பிடிப்பவர்கள், அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றும் இளைஞர்கள் எளிதில் இதய பிரச்சினைகளுக்கு இரையாவார்கள்.

இதய செயலிழப்பு, கரோனரி இதய நோய், ஆஞ்சினா மற்றும் அரித்மியா போன்ற சில இதய பிரச்சனைகள் பொதுவாகக் காணப்படும் இந்தியாவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் இதய நோய் ஒன்றாகும். ஒப்பீட்டளவில் பெண்களை விட ஆண்கள் இதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்கள் புறக்கணிக்கக் கூடாத இதய நோயின் சில முக்கிய அறிகுறிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது உயிரைக் காப்பாற்ற உதவும்.

மார்பு அசௌகரியம்
உங்களுக்கு ஒரு நாளுக்கும் மேலாக மார்பு அசௌகரியம் இருந்தால் உங்கள் இதயத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம். சிலர் தங்கள் மார்பில் அழுத்தும் மற்றும் எரியும் உணர்வு இருப்பதாக உணர்கிறார்கள். குறிப்பாக நடைபயிற்சி அல்லது வேலை செய்த பிறகு. மார்பு அசௌகரியம் சில ஆண்களுக்கு கரோனரி தமனி நோயைக் குறிக்கலாம். மருத்துவரை அணுகி சிகிச்சையைத் தொடங்குவது நல்லது.

குமட்டல், அஜீரணம் மற்றும் வயிற்று வலி
இந்த அறிகுறிகள் பல்வேறு நோய்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. சில அசாதாரண சூழல்களில் இதய பிரச்சினைகளும் இதனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. சில நோயாளிகள் மாரடைப்பிற்கு முன் கடுமையான வயிற்று வலியை அனுபவிக்கின்றனர்.

தோள்பட்டை வலி
மார்பில் இருந்து இடது தோள்பட்டை நோக்கி வலி பரவினால், அது மாரடைப்பு என்று அறியப்படுகிறது. இது மட்டுமின்றி இடது தோள்பட்டை மற்றும் கைகளில் உணர்வின்மை மற்றும் பலவீனம் ஆகியவையும் மாரடைப்பின் அறிகுறிகளாகி இருக்கலாம்.

மயக்கம் அல்லது தலைசுற்றல்
இதயம் மூளை மற்றும் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்ய முடியாவிட்டால், ஒருவருக்கு மயக்கம் அல்லது லேசான தலைவலி கூட ஏற்படலாம். உடலில் தேவையான அளவு இரத்த ஓட்டம் இல்லாதபோது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இது நிகழ்கிறது. லேசான தலைச்சுற்றல் மற்றும் மயக்கம், இதய அரித்மியா மற்றும் கார்டியோமயோபதியுடன் கூட தொடர்புடையதாக இருக்கலாம்.

மார்பில் வலி
இதய வலி அல்லது ஆஞ்சினா என்பது இடது தோள்பட்டை அல்லது தொண்டை வலிக்கு பரவும் மைய மார்பு வலி ஆகும். நடைபயிற்சி அல்லது பிற செயல்களைச் செய்த பிறகு இது நிகழ்கிறது. பொதுவாக நடைப்பயிற்சிக்கு பின் நீண்ட நேரம் அசௌகரியம் இருந்தால் மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications