Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
மாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? என்னென்ன அறிகுறிகள் வரும்?
ஆண்கள் பெண்கள் இருவருக்கும் இதய நோய்கள் என்னென்ன மாதிரியான வேறுபாட்டுடன் வருகிறது என்பது பற்றி இங்கு விளக்கமாகக் காண்போம்.
பொதுவாக இதய நோய்கள் என்றாலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்று தான் என இதுவரைக்கும் நினைத்து இருக்கோம். ஆனால் உண்மையில் அது தவறு.
பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை போன்ற அமைப்பை கொண்டு இருந்தாலும் அவற்றிற்கிடையை சில வித்தியாசங்கள் காணப்படுகிறது. பெண்களின் இதய அறைகள் சற்று சிறியதாக இருக்கும். மேலும் சில அறைகள் ரொம்ப மெல்லிசாக இருக்கும். ஆண்களை விட பெண்களின் இதயம் சற்று வேகமாக துடிக்கும்.

10%குறைவான அளவே இரத்தம் பம்ப் செய்யப்படுகிறது. ஒரு பெண் மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களின் நாடித்துடிப்பு மட்டுமே அதிகரிக்கிறது. இதனால் இதயத்திலிருந்து அதிகமான இரத்தம் பம்ப் செய்யப்படுகிறது. இதுவே ஒரு ஆண் மன அழுத்தத்தில் இருந்தால் அவரின் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
இந்த வித்தியாசம் ஏன் காணப்படுகிறது? இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும், அதன் சிகச்சைகள் எல்லாமே இதை பொருத்து மாறுபட்டு காணப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

கரோனரி தமனி நோய்
இந்த கரோனரி தமனி நோய் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ஏற்படும் நோயாகும். இந்த நோயில் கொழுப்புகள் இரத்த குழாய்களில் படிந்து அப்படியே அது வளர்ந்து இதயத்திற்கு போகும் இரத்த ஓட்டத்தை தடுக்க ஆரம்பித்து விடும். இந்த படிக கொழுப்புகள் பார்ப்பதற்கு மென்மையாக இருந்தாலும் இதை சிதைக்க முடியாது. இதனால் இதய இரத்த ஓட்ட பாதையில் அடைப்பு ஏற்பட்டு இரத்தம் உறைவு ஏற்படுகிறது. இதுவே இறுதியாக ஹார்ட் அட்டாக்கை உண்டாக்கி விடும்.
இந்த நோய் பெண்களைத் தான் அதிகளவு பாதிக்கிறது. இது ஹார்ட் அட்டாக்கை காட்டிலும் வித்தியாசமான அறிகுறிகளை காட்டுவதால் இதை கண்டறிவதும் சிரமமாக உள்ளது.
இதனால் பெண்களுக்கு இதன் அறிகுறிகளே தெரிவதில்லை. எனவே சிகிச்சையும் சிரமமாக இருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

அபாய காரணிகள்
பெண்களுக்கு கரோனரி தமனி நோய் ஏற்பட முக்கி காரணம் எண்டோமெட்ரோஸிஸ், பாலி சிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம், டயாபெட்டீஸ் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்றவை கர்ப்ப காலத்தில் ஏற்படுகிறது. எண்டோமெட்ரோஸிஸ் என்ற நோய் 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 400 % கரோனரி தமனி நோய் அபாயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
அதே மாதிரி பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை அளவு, அதிக கொலஸ்ட்ரால், புகைப்பிடிக்கும் பழக்கம், உடல் பருமன் இருந்தால் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே மாதிரி பெண்களுக்கு பரம்பரை ரீதியாகவும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் 55 வயதிற்குட்பட்ட அப்பா, அண்ணா அல்லது 65 வயதிற்குட்பட்ட அம்மா, தங்கை போன்றவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது.

முதல் ஹார்ட் அட்டாக்
ஆண்களுக்கு பெண்களை காட்டிலும் இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் காரணமாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது மட்டுமே அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே தான் ஹார்ட் அட்டாக் வரும் ஒரு சராசரி பெண்ணின் வயது 70, அதுவே ஆணுக்கு 6 6 ஆக உள்ளது.

ஹார்ட் அட்டாக் அறிகுறிகள்
மார்பகத்தில் மிகுந்த வலி, கனம் ஏற்படுதல். மாரடைப்பு ஏற்படுவதற்கு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன் நுட்பமான அறிகுறிகள் தென்படும். உங்களுக்கு சோர்வாக இருக்கும். ஆனால் தூங்க முடியாது.நெஞ்சு கனமாக இருக்கும்.

மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் வியர்த்தல்
வேலையில் ஈடுபடும் போது அதிகமாக மூச்சிரைத்தல், உட்கார்ந்து இருக்கும் போதே வியர்த்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

கழுத்து, முதுகு மற்றும் தாடையில் வலி
கைகளில் வலி ஏற்பட்டு அப்படியே கழுத்து, முதுகு, தாடை மற்றும் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்படும்.

கண்டறிதல்
இதயத்தில் ஏற்பட்டுள்ள பெரிய இரத்த குழாய் அடைப்பை போக்க கத்தீட்டர் முறை மூலம் ஆஞ்சியோகிராம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த கரோனரி தமனி நோயில் சிறிய இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை ஆஞ்சியோகிராம் மூலம் கண்டறிய இயலாது.
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக் கடினமானது
பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு மிகவும் அபாரமாகமான ஒன்று. சிகச்சைக்கு பிறகு நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து செல்ல வேண்டும். சில சமயங்களில் இதில் இறப்பு கூட ஏற்படுகிறது. இந்த மாதிரியான மாரடைப்பு பெண்களுக்கு ஏற்பட முக்கிய காரணம் டயாபெட்டீஸ், இரத்த அழுத்தம் போன்றவற்றை பாதிப்பு தான்.

மருந்துகள்
ஒரு தடவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட உடன் தகுந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மறுபடியும் இரத்தம் கட்டுதல் ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதற்கான மருந்துகளை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சரியாக பின்பற்றாததால் தான் 12 மாதங்களில் மறுபடியும் மாரடைப்பு ஏற்படுகிறது.

இதயம் செயலிழப்பு
ஆண்களுக்கு இதயம் செயலிழப்பு என்பது இதயம் சுருங்கி விரிதலில் ஏற்படும் பாதிப்பால் ஏற்படுகிறது. இதுவே பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு, இதனால் உண்டாகிறது. பெண்களுக்கு இதயம் செயலிழப்பு காணப்பட்டாலும் ஆண்களை விட நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். இருப்பினும் அடிக்கடி மருத்துவ சிகிச்சை மேறுகொள்ளுவது, உடம்பை பராமரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.

ஆர்டரி பிஃபரலோசன்
இந்த பாதிப்பில் இதய மானது சரி வர துடிக்காது. இதய துடிப்பு ஒழுங்கற்றதாக இருக்கும். இந்த பாதிப்பால் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தகுந்த சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் நீண்ட காலம் வாழலாம்.

எப்படி நம்மை பாதுகாப்பது?
புகைப் பிடிப்பதை தவிர்த்து விடுங்கள்
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடப்பது நல்லது.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மீன், விலங்குகளின் இறைச்சி போன்றவற்றை குறைவாக எடுத்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடாதீர்கள்.
உடல் எடையை பராமரியுங்கள், இரத்த அழுத்தம், இரத்த லிப்பிடு, இரத்த சர்க்கரை அளவை பராமரியுங்கள்.



Click it and Unblock the Notifications