நீங்கள் அறிந்திராத , இதய நோய் வருவதற்கான ஒரு காரணம் எது என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

இதய நோய் வர பல காரணங்கள் நீங்கள் அறிந்திருப்பீர்கள். கொழுப்பு உணவுகள், உடற்ப்யிற்சி இல்லாமல் இருப்பது, புகை பிடிப்பது, உடல் பருமன் என பல காரணங்கள் உண்டு. ஆனால் உங்களுக்கு தோன்றாத ஒரு விஷயமும் இதய நோய்க்கான குற்றவாளி என்பது தெரியுமா?

this is the culprit for your hear disease

நல்ல உணவுகள், நல்ல காற்று, உடற்ப்யிற்சி ஆகியவை உங்கள் இதயத்திற்கு தேவை. உணவு, உடற்ப்யிற்சி ஆகிய இரண்டையும் உங்களால் பெற்றிட முடியும். ஆனால் நல்ல காற்று?

ஆமாம்...இந்த மாசு கலந்து காற்றை சுவாசிப்பதால்தான். மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகையில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைட் போன்ற நச்சுக்கள் உங்கள் இதயத்தை பாதிக்கின்றன.

நீங்கள் எப்படி உங்களை பாதுகாக்கலாம் என்பதை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி பாதுகாக்கலாம்?

எப்படி பாதுகாக்கலாம்?

மாசு கலந்த காற்று ரத்த குழாய்களை பழுதடையச் செய்கிறதாம். இதனால் ஆரோக்கியமான ஒரு மனிதனின் ரத்தம் சரியாக ஆக்ஸிஜன் இதயத்திற்கு கடத்த முடியாமல் நோய்களில் தள்ளுகிறது.

இதனைப் பற்றி அமெரிக்கன் ஹார்ட் அஸோஸியேஷன் மெடிகல் ஜர்னல் ரிசார்ஸ் என்ற மருத்துவ இதழ் செய்து ஆராய்ச்சி செய்து முடிவை வெளையிட்டுள்ளது.

நீங்கள் எச்சரிக்கையாக இருகக் வேண்டிய 5 விஷயங்களைப் பற்றி கூறுகின்றனர்.

 சாலையில் செல்கையில் :

சாலையில் செல்கையில் :

நீங்கள் பரபரப்பான சாலையில் காலை நேரத்தில் செல்லும்போது முகத்தில் மாஸ்க் போல் அணிந்து கொள்வது நல்லது. நீங்கள் கார் போன்ற வாகனங்களில் செல்வீர்களென்றால் கூடுமானவரை வாகன ஜன்னலை மூடிவிட்டு செல்ல வேண்டும்.

சமையல் புகை :

சமையல் புகை :

வீட்டில் உண்டாகும் சமையல் புகையும் இதய நோய்களை உண்டாக்கும். நீண்ட நேரம் சமையல் வேலை செய்பவரகள் காற்றோட்டமான நிலையில் செய்ய வேண்டும். வீட்டிலிருக்கும் புகையும் இதயத்திற்கு கேடு விளைவிக்கும். எலக்ட்ரிக் சிம்னி நல்லது.

ரூம் ஃப்ரெஷ்னர் :

ரூம் ஃப்ரெஷ்னர் :

அறைகள் வாசமாக இருக்க நீங்கள் ரூம் ஃப்ரஷ்னர் உபயோகித்தால் அதனை தவிருங்கள். அவை ஓசோனுடன் வினைபுரிந்து ஓசோன் மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது.

நகர மாசுக்கட்டுப்பாடு :

நகர மாசுக்கட்டுப்பாடு :

உங்கள் நகரத்தில் மாசுக்கட்டுப்பாட்டின் அளவு எவ்வளவு என்று கண்டறிந்து கொள்ளுங்கள். அதிக மாசு இருப்பது தெரிய வந்தால் மாசுக்கட்டுப்பாட்டு துறையிடம் புகார் அளிப்பது முக்கியம். அளவுக்கு அதிகமான பாதிப்புகளை தவிர்க்க உங்கள் சுற்று புற சுகாதாரமும் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

this is the culprit for your hear disease

This factor may also be a culprit for your heart diseases,
Subscribe Newsletter