Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
இதயம் ஆரோக்கியமாக இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க...

ஒரு சில ஆய்வில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதனை அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்கிறோம். முக்கியமான மனதில் வைத்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமானது என்று அளவுக்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும் உடலுக்கு தீங்கு தான். ஏன் ஆலிவ் ஆயில் கூட இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் அவற்றை அதிகமாக உணவில் சேர்த்தால், உடலில் கலோரிகளின் எண்ணிக்கை தான் அதிகரிக்கும். ஆகவே இப்போது எந்த உணவுகளை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!
இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்...
நட்ஸ்
தினமும் உணவில் நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும். அதிலும் வேர்க்கடலையை சற்று வறுத்து, சிறிது உப்பை சேர்த்து சாப்பிடலாம. இதனால் இதய நோய் வராமல் தடுக்கலாம். ஏனெனில் வேர்க்கடலையில் ஊட்டச்சத்துக்கள், செறிவூட்டப்படாத கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு துணையாக உள்ளன.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
எப்போதும் சாப்பிடும் போதும் ஒரு கப் பழங்களை சாப்பிட்டு, பின் உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் அவற்றில் பொட்டாசியம், வைட்டமின் சி (ஆன்டி-ஆக்ஸிடன்ட்) மற்றும் பைட்டேநியூட்ரியண்ட்ஸ் இருக்கிறது. அவை உடலில் ஏற்படும் கிருமிகளை எதிர்த்து போரிட சிறந்தது.
நார்ச்சத்து உணவுகள்
உண்ணும் உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உணவுகளான சிட்ரஸ் பழங்கள், ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், பேரிக்காய், முட்டைக்கோஸ், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்றவற்றை சேர்க்க வேண்டும். அதிலும் ஓட்ஸ் மற்றும் பார்லியில் பீட்டா-குளுக்கான் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.
ஒமேகா-3 உணவுகள்
ஒமேகா-3 உள்ள உணவுகளான சாலமன், டூனா, வால் நட்ஸ் மற்றும் ஆளிவிதை போன்றவற்றை தினமும் சிறிது உடலில் சேர்க்க வேண்டும். வேண்டுமென்றால் இந்த ஒமேகா-3 சத்தை க்ரில் காப்ஸ்யூலின் (krill capsule) மூலமும் பெறலாம்.
டீ
தினமும் இரண்டு முதல் மூன்று கப் கிரீன் அல்லது பிளாக் டீயை குடிக்க வேண்டும்.
டார்க் சாக்லேட்
சாக்லேட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆகவே அதனை தினமும் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் மட்டுமே சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் பின்னர் அதுவே உடலுக்கு நஞ்சாகிவிடும்.
ஆலிவ் ஆயில்
தினமும் உடலில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்க்க வேண்டும் ஏனெனில் ஆலிவ் எண்ணெயில் செறிவூட்டப்படாத கொழுப்புக்கள், வைட்டமின் ஈ, பாலிஃபீனால் போன்றவை இருக்கிறது. இதனால் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு அதிகமாகிறது.
ஆகவே, மேற்கூறிய உணவுகளையெல்லாம் சரியான அளவில் உடலில் சேர்த்து வந்தால, உடல் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் நினைவில் கொண்டு, உணவை உண்ண வேண்டும்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
