Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்க...
Heart Healthy Foods: சமீப காலமாக மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துவது தான். இவ்வாறு கெட்ட கொழுப்புக்கள் தேங்க நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் தான் முக்கிய காரணம்.
ஆனால் எப்படி உணவுகளால் இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் படிகிறதோ, அதேப் போல் உணவுகளைக் கொண்டே இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்களை அகற்றலாம். அதுவும் ஒருசில பழங்களை தினமும் சிறிது உட்கொண்டு வந்தாலே, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்தக்குழாய்களை சுத்தமாக வைத்து, மாரடைப்பு வரும் அபாயத்தைத் தடுக்கலாம். இப்போது எந்த பழங்களை உட்கொண்டால் மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம் என்பதைக் காண்போம்.

கொய்யாப்பழம்
ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட ஒரு பழம் தான் கொய்யாப்பழம். இந்த பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளேக்குகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. மாரடைப்பு வரக்கூடாதெனில் கொய்யாப்பழத்தை வாங்கி அடிக்கடி சாப்பிடுங்கள்.
பெர்ரி பழங்கள்
பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்தக்குழாய்களில் ப்ளேக்குகள் உருவாவதைத் தடுக்கிறது. ஆகவே பெர்ரிப் பழங்களை முடிந்தால் அவ்வப்போது வாங்கி சாப்பிடுங்கள்.
ஆரஞ்சு
சிட்ரஸ் பழமான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸின்ட்டுகள் உள்ளன. இவை தமனிகளில் ப்ளேக்குகள் உருவாக்கத்தைத் தடுப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. எனவே அடிக்கடி ஆரஞ்சு பழத்தை வாங்கி சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
மாதுளை
மாதுளம் பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்க உதவுகின்றன. எனவே மாரடைப்பு ஏற்படக்கூடாதெனில் தினமும் ஒரு மாதுளையை சாப்பிட முயற்சித்து வாருங்கள்.
திராட்சை
திராட்சையிலும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன. இதுவரை திராட்சையை உட்கொள்ளாமல் இருந்தால், இனிமேல் திராட்சையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். இப்படி உட்கொண்டு வந்தால் மாரடைப்பில் அபாயத்தைத் தடுக்கலாம்.
பப்பாளி
அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளிப் பழத்தில் பாப்பைன் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவுவதோடு, ப்ளேக்குகளின் உருவாக்கத்தையும் தடுக்கிறது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதுவும் ஆப்பிளை தினமும் உட்கொண்டு வந்தால் இதய நோயின் அபாயத்தைத் தடுக்கலாம். குறிப்பாக உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
