Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
உங்ககிட்ட இந்த அறிகுறி தெரியுதா? அப்ப இதயம் செயலிழக்கப் போகுது-ன்னு அர்த்தம்.. உஷார்..
Symptoms Of Heart Failure In Tamil: உலகளவில் தற்போது இதயம் தொடர்பான பிரச்சனைகளால் நிறைய பேர் பாதிக்கப்படுவதோடு, மரணமடைந்தும் வருகிறார்கள். இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டால் தான் உடலுறுப்புக்கள் ஒவ்வொன்றும் போதுமான இரத்தத்தைப் பெற்று சிறப்பாக செயல்படும்.
இப்படிப்பட்ட இதயம் தொடர்பான ஒரு மோசமான ஆரோக்கிய பிரச்சனை தான் இதய செயலிழப்பு. இந்த இதய செயலிழப்பின் போது, இதய தசைகளால் இரத்தத்தை அழுத்த முடியாமல் போகும். இப்படி இதயம் இரத்தத்தை அழுத்தாமல் இருந்தால், அதன் விளைவாக இரத்தமானது நுரையீரலில் தேங்கி, சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். சொல்லப்போனால் இதய செயலிழப்பு என்பது உயிரைப் பறிக்கும் ஒரு ஆபத்தான நிலை மற்றும் இதை குணப்படுத்த முடியாது.

இதய செயலிழப்பு பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அந்த அறிகுறிகளை ஒருவர் ஆரம்பத்திலேயே கவனித்து மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சை பெற்று வந்தால், இதய செயலிழப்பால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆனால் இதய செயலிழப்பு ஒரு முக்கியமான அறிகுறியை நிறைய பேர் தவறவிடுகிறார்கள்.
ஏனெனில் இந்த அறிகுறியானது இதய பிரச்சனையுடன் தொடர்புடையது போன்று இருக்காது. அது என்னவெனில் கணுக்கால் மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கம். இப்படியான வீக்கத்தை எடிமா என்று அழைப்பர். பொதுவாக இந்த மாதிரியான வீக்கத்தை அதிகாலைப் பொழுதில் கவனிக்க முடியாது. ஆனால் நாள் செல்ல செல்ல வீக்கமானது நன்கு தெரியத் தொடங்கும்.
எடிமா என்றால் என்ன?
எடிமா என்பது ஒரு மருத்துவ நிலை. இது உடல் திசுக்களில் அதிகப்படியான திரம் தேங்குவதால் ஏற்படும் வீக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக இம்மாதிரியான வீக்கம் கால்கள், கணுக்கால், பாதங்கள் மற்றும் கைகளில் காணப்படும். இருப்பினும் உடலின் பிற பகுதிகளிலும் இது காணப்படலாம். இந்த எடிமா இதய செயலிழப்பினால் மட்டுமின்றி, நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்கார்ந்திருப்பது, கர்ப்ப காலம், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்களினாலும் ஏற்படலாம்.
இதய செயலிழப்பின் பிற அறிகுறிகள்
இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு இந்த அறிகுறியானது மெதுவாக வெளிப்படத் தொடங்கும். இருப்பினும் சில அறிகுறிகள் திடீரென்று தோன்றலாம். அந்த அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
* திடீரென்று மூச்சுத்திணறல்
* உடல் சோர்வு மற்றும் பலவீனம்
* கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம்
* ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
* உடற்பயிற்சி செய்யும் திறன் குறைவது
* மூச்சு வாங்குவது
* இளஞ்சிவப்பு சளியைக் கொண்ட தொடர்ச்சியான இருமல்
* வயிற்றுப் பகுதியில் வீக்கம்
* திடீரென்று உடல் எடை அதிகரிப்பது
* குமட்டல் மற்றும் பசியின்மை
* கவனம் செலுத்துவதில் சிரமம்
* நெஞ்சு வலி
இதய செயலிழப்புக்கான காரணங்கள்
இதய செயலிழப்பானது பொதுவாக பலவீனமான, சேதமடைந்த அல்லது கடினமான இதயத்தால் ஏற்படுகிறது. இதயமானது சேதமடைந்திருந்தாலோ அல்லது பலவீனமாக இருந்தாலோ, இதய அறைகள் விரிவடைந்து பெரிதாகலாம். இதயத்தால் போதுமான அளவு இரத்தத்தை வெளியேற்ற முடியாமல் போகும். இதயத்தின் முக்கிய உந்தி அறைகள் வென்ட்ரிக்கிள்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவை கடினமாக இருந்தால், அவற்றால் ஒவ்வொரு துடிப்புக்கு இடையே போதுமான இரத்தத்தை நிரப்ப முடியாது.
இதய தசைகளானது குறிப்பிட்ட தொற்றுகள், அதிகளவு மது பானம், சட்டவிரோதமான போதைப் பொருட்கள் மற்றும் குறிபிட்ட ஹீமோதெரபி மருந்துகளை எடுப்பதால் சேதமடையலாம். இது தவிர மரபணுக்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன. இப்போது வேறு எந்த காரணங்களால் இதய செயலிதுப்பு ஏற்படலாம் என்பதைக் காண்போம்.
* கரோனரி தமனி நோய் மற்றும் மாரடைப்பு
* உயர் இரத்த அழுத்தம்
* இதய வால்வு நோய்
* இதய தசைகளில் அழற்சி
* ஒழுங்கற்ற இதய நாளங்கள்
* சர்க்கரை நோய், எக்.டீ.வி தொற்றுகள், தைராய்டு பிரச்சனைகள் அல்லது இரும்புச்சத்து அல்லது புரோட்டீன் போன்றவை அதிகமாக இருந்தால் வரலாம்.
திடீர் இதய செயலிழப்பை ஏற்படுத்தும் பிற காரணங்கள்
* அலர்ஜி
* முழு உடலையும் பாதிக்கக்கூடிய நோய்
* நுரையீரலில் இரத்த கட்டிகள்
* தீவிரமான தொற்றுகள்
* குறிப்பிட்ட மருந்துகள்
* இதய தசைகளை தாக்கும் வைரஸ்கள்.
எனவே இதய செயலிழப்பு பிரச்சனையை சாதாரணமாக நினைக்காமல், உடலில் சிறு மாற்றங்கள் தெரிந்தாலும், அதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவர அணுகுஙகள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











