இந்திய இளைஞர்களுக்கு மாரடைப்பு வர காரணம் அவர்க்ளின் இந்த 2 பழக்கங்கள்தானாம்... என்னென்ன தெரியுமா?

மாரடைப்பு என்பது இனி வயதானவர்களை மட்டுமே தாக்கும் நோயாக இருக்கப்போவதில்லை. ஏனெனில் 10 வயது முதல் உள்ள குழந்தைகள் முதல் 30 வயதில் உள்ள இளைஞர்கள் வரை அனைவரும் மாரடைப்பால் இறக்கின்றனர். இந்த ஆபத்தை அதிகரிப்பதில் அவர்களின் உணவுமுறை முக்கியப்பங்கு வகிக்கிறது. காலை உணவைத் தவிர்ப்பது மற்றும் இரவு நேர உணவை உட்கொள்வது ஆகிய இரண்டு குறிப்பிட்ட உணவுப் பழக்கங்கள் இந்த ஆபத்தான போக்கு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

QJM இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, இந்தியா முழுவதும் உள்ள நகர்ப்புற இளைஞர்களின் உணவு முறைகளை ஆராய்ந்து, காலை உணவைத் தவறவிடுவதும், இரவில் தாமதமாக சாப்பிடுவதும் கரோனரி தமனி நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயத்தை கணிசமாக அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளது.

Heart Attack Two Eating Habits Thar Are Raising Heart Attack Risk in Young Indians

இந்த மோசமான பழக்கங்கள் உடலின் இயற்கையான வளர்சிதை மாற்ற செயல்முறைகளை சீர்குலைத்து, மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன மற்றும் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை துரிதப்படுத்துகின்றன. இந்த ஆரோக்கியமற்ற பழக்கங்கள் நீண்ட காலம் நீடிக்கும் போது இதற்கு முன் இதய நோய்கள் இல்லாதவர்களுக்கும் கூட இது கடுமையான இருதய நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

காலை உணவை புறக்கணிப்பது

வேலைப்பளு அதிகமுள்ள இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் வேலையில் இருப்பவர்களிடையே காலை உணவைத் தவிர்ப்பது பொதுவான பழக்கமாக மாறிவிட்டது. இருப்பினும், இந்த பழக்கம் இதய ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். QJM ஆய்வின்படி, அடிக்கடி காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு கரோனரி தமனி நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

காலை உணவைத் தவிர்ப்பது உணவருந்ததா நேரத்தை நீட்டிக்கிறது, இது கார்டிசோல் அளவை அதிகரிக்கிறது, இது உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய மன அழுத்த ஹார்மோன் ஆகும். இது தமனி பிளேக் உருவாவதற்கு காரணமாகிறது. காலை உணவைத் தவிர்ப்பது நாளின் பிற்பகுதியில் அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். இதனால் இளைஞர்கள் அதிக அளவு சாப்பிடலாம் அல்லது ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளைத் தேர்வு செய்யலாம். இது அதிக கலோரி உட்கொள்ளல், எடை அதிகரிப்பு மற்றும் இதய அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இந்த மோசமான பழக்கம் இளைஞர்களுக்கு கூட இதய ஆபத்து ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.

இரவு உணவைத் தாமதமாக சாப்பிடுவது

இரவு உணவை தாமதமாக உட்கொள்வது என்பது கடுமையான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும் மற்றொரு பரவலான பழக்கமாகும். நகர்ப்புற வாழ்க்கை முறைகள், நீண்ட வேலை நேரம் மற்றும் ஒழுங்கற்ற கால அட்டவணைகள் இளைஞர்கள் மாலையில் அதிக உணவை சாப்பிடுவதை வழக்கமாக்குகின்றன. தாமதமாக சாப்பிடுவது வளர்சிதை மாற்றம், ஹார்மோன் வெளியீடு மற்றும் ஆற்றல் சமநிலையை நிர்வகிக்கும் சர்க்காடியன் தாளத்தை சீர்குலைக்கிறது.

இந்த பழக்கம் அதிக கொழுப்பு குவிப்பு, உயர்ந்த இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இரவு நேர உணவுகள் பெரும்பாலும் கலோரிகள் நிறைந்தவை அல்லது சர்க்கரை நிறைந்தவையாக இருப்பது, இதய ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. குறிப்பாக குறைந்த உடல் செயல்பாடு மற்றும் மோசமான தூக்க முறைகள் போன்ற பிற ஆரோக்கியமற்ற பழக்கங்களுடன் இது இணையும்போது அது ஆபத்தை மேலும் அதிகரிக்கும்.

இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள்

காலை உணவைத் தவிர்ப்பதும், இரவில் தாமதமாக சாப்பிடுவதும் உடலில் உள்ள பல உறுப்புகளைப் பாதிக்கிறது. நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது கார்டிசோலை உயர்த்தி, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. ஒழுங்கற்ற கலோரி உட்கொள்ளல் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறையை சீர்குலைத்து, இன்சுலின் எதிர்ப்பை ஊக்குவிக்கிறது. மிகவும் தாமதமாக சாப்பிடுவது சர்க்காடியன் தாளங்களைத் தொந்தரவு செய்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இந்த காரணிகள் அனைத்தும் இணைந்து மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, September 27, 2025, 15:40 [IST]
Desktop Bottom Promotion