Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
வாயில் இந்த அறிகுறி தெரிஞ்சா.. மாரடைப்பு வரப்போகுது-ன்னு அர்த்தமாம்... உஷாரா இருங்க...
Heart Attack Symptoms: உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17.9 மில்லியன் பேர் இதய நோய்களால் (Cardiovascular Diseases) உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இதய நோய்கள் என்பது இதயம் மற்றும் இரத்த குழாய்கள் தொடர்பான கோளாறுகள் ஆகும். இதில் கரோனரி இதய நோய், செரிப்ரோவாஸ்குலர் நோய், ருமாட்டிக் இதய நோய் மற்றும் பிற நிலைமைகள் அடங்கும். இவற்றில் மாரடைப்பு என்று அழைக்கப்படும் மயோகார்டியல் இன்ப்ராக்ஷன் என்னும் நிலையின் போது, இதய தசைகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காமல் இருக்கும்.
இப்படி இதய தசைகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காமல் போது, அதன் விளைவாக இதய தசைகள் இறக்கத் தொடங்கும். இதற்கு உடனே மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு இரத்த ஓட்டத்தை சீராக்காமல் போனால், அது இதயத்தில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்திவிடும். அல்லது தீவிர நிலையில் மரணத்தை உண்டாக்கும். மாரடைப்பு ஒருவருக்கு வரப்போகிறது என்றால், அவர்களுக்கு ஒருசில அறிகுறிகள் முன்னரே தெரியத் தொடங்கும். இந்த அறிகுறிகளை கவனித்து, சிகிச்சை மேற்கொண்டால், உயிரிழப்பைத் தடுக்கலாம்.

மாரடைப்பின் அறிகுறிகள்
இப்படிப்பட்ட மாரடைப்பின் சில அறிகுறிகளாவன நெஞ்சு வலி அல்லது நெஞ்சு பகுதிகளில் மிகுந்த அசௌகரியத்தை சந்திக்க நேரிடும். அதாவது நெஞ்சு பகுதியில் மிகுந்த அழுத்தம், பிழிவது போன்ற உணர்வு அல்லது நெஞ்சின் வலது பக்கம் அல்லது மையப் பகுதியில் வலியை சந்திக்க நேரிடும். இது தவிர தோள்பட்டை, கைகள், முதுகு, கழுத்து, தாடை அல்லது மேல் வயிற்றுப் பகுதியிலும் வலி அல்லது அசௌகரியத்தை சந்திக்க நேரிடும். மேலும் மூச்சுச் திணறல், குளிர்ச்சியான சூழ்நிலையிலும் வியர்ப்பது, குமட்டல். தலைவலி, தலைச்சுற்றல் போன்றவற்றையும் சந்திக்கலாம்.
வாயில் தெரியும் மாரடைப்பின் அறிகுறிகள்
இது மட்டுமின்றி, மாரடைப்பு அல்லது பக்கவாதத்தின் மற்றொரு முக்கியமான அறிகுறியை வாயில் சந்திக்க நேரிடும். அதில் ஈறு நோய்கள் மற்றும் மோசமான வாய் சுகாதாரம் போன்றவை அடங்கும். பொதுவாக நமது ஈறு நோய்களானது வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களை அழித்து, உடலினுள் பொதுவான வீக்கத்தை உண்டாக்கி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, உடலில் மிகுதியான அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.
வாயின் ஆரோக்கியம் இதயத்தை எப்படி பாதிக்கும்?
பெரும்பாலான இதய நோய்களின் முடிவுகளானது இரத்த நாள பிரச்சனைகளினால் தான் ஏற்படுகிறது. குறிப்பாக பெருநாடியில் அடைப்பு ஏற்படுகிறது. பெருநாடி என்பது இதயத்தில் இருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தை பிற உறுப்புகளுக்கு விநியோகிக்கும் முக்கிய வேலையை செய்கிறது. இந்த பெருநாடியில் ஒருவரின் வாயின் ஆரோக்கியம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் வாயின் ஆரோக்கியத்தினால் இதய நோய் வரக்கூடாதெனில் இரண்டு விஷயங்களை ஒருவர் கையாள வேண்டும். அதில் ஒன்று ஈறுகளில் பிரச்சனைகள் அல்லது நோய் இருந்தால், அதற்கு உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். இதன் மூலம் பாக்டீரியாக்களின் சுமை குறையும். இரண்டாவது ஈறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதனால் உடலில் ஏற்படும் அழற்சி குறையும். இதையே ஹார்வர்ட் நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர்.
அதோடு ஈறு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் அல்லது பிற தீவிர இதய நோய்களின் அபாயம் 2-3 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். கூடுதலாக, இதய நோய் உள்ள பலரது ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கவும் செய்கின்றன. மேலும் ஈறு நோயால் பாதிக்கப்படும் அனைவருக்குமே இதய பிரச்சனைகள் ஏற்படாது என்றும் ஹார்வர்ட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே எதுவாயினும் ஒருவர் தங்களின் வாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதோடு, ஈறுகளில் பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு உடனே மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் இதய நோய் வராமல் இருக்கிறதோ இல்லையோ, வாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனவே வாய் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications